தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

நினைவு

ஜீவன்
3. !
நினைவு !
நம்பத்தகுந்த !
சேதிகள் ஏதும் !
இருப்பதாகப்படவில்லை !
சொல்லி !
பெருங்குரலெடுத்து !
ஊளையிட்டு போகிறது !
காற்று !
சன்னதமாடி !
தொடர்ந்து துரத்துகிறது !
உயிர் பிடுங்கிப்பிசாசு !
இன்னமும் !
எனக்கான !
புதைகுழியை தோண்டுகிறார்கள் !
அவர்கள் !
என்முன்னே !
ஓடிக்கொண்டிருக்கிறான் !
நேற்றுக்கிழித்து !
உப்பு வைத்துத்தைத்த !
முதுகின் !
சொந்தக்காரன் !
குண்டுதுளைத்துப் !
போகிறது !
உடல் !
நினைவில் !
வந்து போகிறாள் !
கையசைத்து !
விடைசொன்ன காதலி !
விரித்தபடி கிடந்த !
ஓலைப்பாயை !
சுருட்டும் போது !
அழுதிருப்பாள் !
அம்மா !
அவளுக்குரியதாகிறது !
அன்று !
காணாமல் !
போவதான காலம் !
நினைவுத்தொடர்பறுந்து !
கண்விழிக்க !
மூத்திரத்தில் !
நனைந்து போயிருக்கிறது !
சாரம் !
கண்களை மூட !
தொடர்ந்து துரத்துகிறது !
உயிர் பிடுங்கிப்பிசாசு

நானாகிய நீ

மகேத்ரா
எனக்கு!
மனனம் செய்வது பிடிக்காது!
அதையும் செய்வேன்!
மனனம் செய்யும் பாடம்!
நீயாக இருந்தால்...!
என்!
இதயம் இமைக்காமல்!
காத்திருக்கும் !
என்றுமுன் காதலுக்காக...!
தினமுமுன் வருகைக்காக...!
நீ!
செல்லும் வழியெல்லாம்!
வரமுடியாவிடினும்!
நீ நடக்கும் !
பாதையாகப்!
பிறவிவேண்டும்...!
என்!
விழியின் கனவை!
விரலால் நிறைத்தேன்!
கவிதை...!
என்!
உயிரின் கனவை!
உன்னில் புதைத்தேன்!
காதல்...!
என்!
ஆயுளின் அகவையை!
அன்பின் முகவரியை!
உன்னில் விதைத்தேன்!
“நம் வாழ்க்கை”!
நீ!
எப்படி அழைத்தாலும்!
இனிமையாகத்தான்!
இருக்கிறது...!
நீ!
அப்படியாரையும்!
அழைக்கதாவரை...!
இரவில் !
கிடைத்த சுதந்திரமாய்!
உதடு மட்டும் பேசும்!
உன் வார்த்தைகள்...!
என்!
இதயப் பேனா!
இயக்கப்படுவது!
உனக்கான!
காதலால்தான்...!
உன் பெயரோடு !
என் பெயர்...!
சேர்த்துச் சொன்னேன்!
கவிதை – ஒரு !
புதுக்கவிதை...!
கனவுகளையெல்லாம்!
படம் பிடிக்கும்!
வசதியிருந்திருந்தால்!
வாழ்வே...!
நிரூபித்திருப்பேன்!
அத்தனை கனவுகளிலும்!
அற்புதமாய்...!
வந்ததும்...!
வருவதும் நீயேயென்று...!
உனக்கான !
கவிதைகளே!
எனக்கான!
விருதுகள்...!
நீ!
காதலெனும் நாட்டின்!
என்!
இதயமென்னும் சாம்ராஜ்ஜியத்தின்!
இனிய ராஜா!
உன்!
மனமெனும்!
கல்லூரியில்!
காதலெனும்!
கலையில்!
முனைவரெனும்!
பட்டம் தா !!
உலகத்துள் சிறந்த செல்வம் உன் காதல் - அக்காதல்!
எனக்குள் உயிராம் தலை. !
என்!
நினைவைத் தின்ற!
நிஜம்!
நீ !!
வார்த்தையாய் இருந்த வாழ்க்கை!
வாக்கியமானது உன் வரவால்...!
நானறிந்த மொழிகளிலே - உன்!
நாமொழிபோல் இனிதானது!
எங்கும் காணோம் !!
வானம்!
கண்ணுக்கெட்டும் !
தூரம்தான்!
பைனாக்குலரில்.!
இடி மின்னலின்றி!
மழை!
கண்களில்

மெய் உறங்கும் நாட்களின் கோடை

சித்தாந்தன்
எம்மிடை விரியும் வெளியில்!
ஊதுபத்தியின் வாசனை கமழ்வதாய் சொல்கிறாய்!
புறக்கணிக்கப்பட்ட ஒரு கவிதைக்கு!
இசை மதுவூற்றி கிண்ணங்களை ததும்ப வைக்கிறாய்!
ததும்பி வழிந்த மதுவில்!
என் கனவுகள் குமிழியிட்டுடைவதாய்!
நொருங்கிச் சிதறும் சொற்களால் பாடுகிறாய்!
இன்றேன் எம் புன்னகையில் ஈரம் வடிந்திற்று!
காலாற நிழலற்ற பெருந்தெருவில்!
கானலில் ஈர்ப்புற்று அலையும்!
நாய்களின் இளைப்பின் அதிர்வு!
சாகடிக்கப்பட்ட கணங்களாய் நீள்கிறது.!
இனி இரவுகள் தொங்கும் கயிற்றில்!
விழிப்பின் நிறங்களை உரித்தெடுத்தபடி!
நீ செல்லப் போகிறாய்!
எத்தனை ஆந்தைகள் அலறுகின்றன என்னுள்!
மழையற்ற நெடுங்காலமிது!
பாழாக்கப்பட்ட கட்டடங்களின் மேலிருந்து!
சிறகுலர்த்துகிறது கொண்டைக்குருவி ஒற்றையாய்!
இடிபாடுகளுக்குள் கேட்கும் குரல்!
வெளவால்களை துரத்திச் செல்கிறது!
அவற்றின் பறப்பெல்லைவரை.!
நீ காலியான மதுக்குவளைகளை முகர்கிறாய்!
மீதமிருக்கும் போதையையும்!
அவற்றின் நெடியால் நிறைக்கிறாய்!
பின்னும்!
விழிப்பின் நிறங்களை உரித்தெடுத்தபடி!
எனது காலத்தை நிர்வாணப்படுத்துகிறாய்!
எச்சிலாய் வழிகிறது மிஞ்சியுள்ள சொற்களும்.!
நீ சொல்கிறாய்!
எம்மிடை விரியும் வெளியில்!
ஊதுபத்தியின் வாசனை கமழ்வதாய்!
வாழ்தலின் இழையறுத்து வலைபின்னுகிறது காலம்!
கத்திக்கும் வாளுக்குமான பேதந்தான் எமக்கு!
நீ செல்லப்போகிறாய்!
காரணமற்ற குரோதத்தின் பழியுணர்ச்சியுடனும்!
நான் பருகமறுத்த மதுவின் போதையுடனும்.!
உனக்கு வழிவிடப்போகும் கடலை!
விசமாக்கிற்று உனது பார்வை.!
மீன்கள் செத்து மிதக்கின்றன!
கடல் நாறி மணக்கிறது!
இன்னும் நீ சொல்கிறாய்!
எம்மிடை விரியும் வெளியில்!
ஊதுபத்தியின் வாசனை கமழ்வதாய்.!
சித்தாந்தன்!
27-05-2007 இரவு- 11.51

காதலும் மதமும்

கொ.நூருல் அமீன்
'காதல்' கொண்டு உருவாகும் மதம். !
மதம் கொண்டு உருளும் காதல். !
காதல் பிடித் அலயும் ஒரு தல. !
மதம் பிடித் உருளும் பலர் தல. !
காதல் பிரிந்தால் ஓருயிர். !
மதம் பிரிந்தால் ஒரு சமுகம். !
காதல் உள்ளத்தின் உயிர். !
மதம் இறவனின் முகம். !
காதல் _---------- ஜனனம். !
மதம் -_ மரணம். !
சமயம் பார்த் வருவதில்ல !
காதல். !
சமயங்கள் வழிப்பட்டு வளர்வ !
மதம். !
காதலுக்கு வேண்டும் இரு !
மனம் சம்மதம். !
மதத்திற்கு மட்டும் போம் ஒரு !
மனம் சம்மதம். !
காதல் இருந்தால் உயிர்க்காலம் வர !
வாழ்வான் மனிதன். !
மதம் இருந்தால் உயிர் முடிந் !
வாழ்வான் மனிதன்......? !
காதல்.... !
மனிதனின் மதம்! !
-கொ.நூருல் அமீன்

காத்திருத்தலின் வலி

க.உதயகுமார்
பழுதடைந்துபோன!
என் வீட்டின் கதவுகளை!
என்றாவது!
நீ தட்டக்கூடும்!
என எதிர்பார்ப்புகளோடும் !
மௌனமாகிப்போன!
என் புல்லாங்குழலின்!
துளைகளில்!
உன் இசை குறிப்புகள்!
வந்தமரக்கூடும்!
என பரிதவிப்போடும்…… !
உன்னை தேடி வந்த!
அந்திமழையின் விசாரிப்புகளுக்கு!
பதில் கூறும் துணிச்சல் அற்று ,!
காத்துக்கொண்டே இருக்கிறேன் .. !
உனக்காக!
நான் வங்கி வைத்த கைகடிகாரம்!
நின்ற பின்னும்!
உன் மீள்வருகைக்காக!
காத்துக்கொண்டே இருக்கிறேன் .... !
உறைந்துபோன!
என நிகழ்காலம்!
மீண்டும் உயிர்பெறும்!
என்கிற பேராசையில் மிதந்தபடி!
காத்துக்கொண்டே இருக்கிறேன் ... !
நீ வரும் வரைக்கும்!
காத்திருத்தலின் வலியை!
உடைந்த!
என் புல்லாங்குழல் வழி!
இசைக்கத்தான் எத்தனிக்கிறேன்,!
அவை மௌனங்களை மட்டுமே!
சொட்டுகிறது !
இசைக்கபடாத என் இசைக்குறிப்புகள்!
மரித்துவிடுமோ!
என அச்சப்படுகிறேன் நான் .!
சீக்கிரம் வந்துவிடு

கல்விமான்கள்

ஜான் பீ. பெனடிக்ட்
என் தாயின் மடிதனிலே!
ஏழாவது மகவு நான்!
ஏழும் ஏழு விதம்!
எனக்கென தனி விதம்!
கடைக்குட்டி ஆயினேன்!
கடை கடையாய் ஓடினேன்!
கடனாய்க் காபி வாங்கினேன்!
தாயின் தலைவலி தீர உதவினேன்!
செருப்பில்லா பாதங்கள்!
தெருவெல்லாம் என் போன்ற சிறுவர்கள்!
நாலு கிலோ மீட்டர் நடையைக் கட்டி!
நாங்கள் கற்றோம் நாலெழுத்து!
காலை சென்றேன் பள்ளிக்கு!
கிழிஞ்ச கால் சட்டையோடும்!
கிளுகிளுக்கும் அட்டை போட்ட!
கிழிஞ்சு போன நோட்டோடும்!
பள்ளிக் கூடம் முடிந்து வந்து!
பம்பரங்கள் சுற்றினேன்!
பால்கரக்கும் பசு மாட்டினை!
பக்குவமாய்க் குளிப்பாட்டினேன்!
காலம் கடந்திட்டாலும்!
கடந்த காலம் மறக்கவில்லை!
கற்றறிந்த கல்வி அன்று!
கஞ்சி ஊத்துது எனக்கு இன்று!
கல்வி கற்றுத் தந்திட்டக்!
கல்விமான்களை நினைக்கிறேன்!
காலமெல்லாம் நன்றி சொல்லி!
களிப்புடனே வாழ்கிறேன்

உரையாடலில் தவறிய சொற்கள்

சித்தாந்தன்
மிகத்தாமதமான குரலில்தான்!
உரையாடல் தொடங்கியது!
மழை தூறலிட்டு பெருமாரியாகி ஓய்கையில்!
ஓராயிரம் சொற்களைப்பேசிக் களைத்திருந்தோம்!
மாயப்புன்னகையில் மலர்ந்து!
கத்திகளாய் நீண்ட சொற்கள் வரையிலும்!
தந்திரமான மௌனத்தோடு கடல் கூடவந்தது!
நிழல் பிரிந்த உருவங்களின் மிதப்பில்!
வெளியின் மர்மங்கள் அவிழ்ந்தன!
காற்று!
சொற்களின் வெற்றிடங்களிலிருந்து திரும்பி!
கண்ணாடிக்குவளையுள் நிரம்பித்ததும்பியது!
பேசாத சொற்கள் குறித்துக்கவலையில்லை!
பேசிய சொற்களிலோ!
கண்ணீரோ துயரமோ இருக்கவில்லை!
வெறும் புழுதி!
வசவுகளாய் படிந்துபோனது!
குரல் இறங்கி சரிவுகளில் உருண்டு!
தடுமாறிய தருணத்தில்!
சில வார்த்தைகளை!
அவசரமாக என்கைகளில் வைத்துப்!
பொத்தியபடி நீ வெளியேறினாய்!
ஒளியும் நிழலுமற்ற வார்த்தைகள் அவை!
அர்த்தங்கள் நிறைந்த!
ஒரு சோடிச்சொற்களையாயினும்!
சாத்தப்பட்ட நகரத்தின் சுவர்களில் எழுதியிருக்கலாம்!
ஒருவேளை அவற்றில்!
பறவைகள் சில கூடுகட்டி வாழ்ந்திருக்கலாம்!
எந்தப் பிரகடனங்களுமற்று!
தாகித்து அலைந்து சலிப்புறும் போது!
இருளில் நச்சுப்புகையாய் சொற்கள் மேலெழுகையில்!
நதியொன்றினது உள்ளுற்றிலிருந்து!
சரித்திரத்தின் பிணங்கள்!
நாம்பேசாத சொற்களைப் பேசத்தான் போகின்றன!
அப்போது கடல்!
கரையிலிருந்து எம்சுவடுகளை!
உள்ளிழுத்துச் சென்றுவிடும்!
-சித்தாந்தன்

நீ ?

எதிக்கா
நீ உன் காதலைத் தெரிவுக்கும்போது!
எனக்கு தெரிந்ததில்லை!
நீ எனக்குள் ஒளிந்திருந்ததை!
அன்று!
நீ பாலைவனத்தில் வீசிய!
தென்றல் போல் வந்தாய்!
இன்று!
இயற்கையின் சீற்றத்துக்குள் அகப்பட்ட!
தென்றலாய் நிலை தடுமாறுகின்றாய்!
அன்றெல்லாம்!
பாரதி முழங்கிய வார்த்தைகளை!
உன்னுள் முணுமுணுத்தாய்!
இன்று!
அவையெல்லாம் ஒரு நடிப்புத்தான்!
என உன்னை நீயே!
ஏமாற்றுகின்றாய்!
நான் உனக்குள் எதையுமே தேடவில்லை!
ஆம்!
உன் அன்பைத் தவிர!
உனக்கு காதலொரு விளையாட்டு!
ஆனால் எனக்கது உயிர்நாடி!
என் காதலே!
தயவுசெய்து நம் காதலை வரையறை!
செய்யாதே!!
உன் வார்த்தைகளை உனக்குள் முடக்காதே !!
உன் உணர்ச்சிகளையெல்லாம் கடமைக்காக!
வெளிக்காட்டாதே!
நீயும் என்னைப்போல் பத்துமாதம் பொறுமையாக!
தாயின் கருவறையில் சிறையிருந்தவன் தானே!
ஆனால்!
இப்போதெல்லாம் நீ சில கணங்களில்!
பொறுமையிழந்தவனாய்!
விருப்பு வெறுப்பில்லாத நிர்வாண நிலையில்!
உன்னை மாற்ற எத்தனிக்கின்றாய்!
என்னுயிரே இப்போதாவது சொல்!
உனக்குள் ஏன் இந்த மாற்றம் ?

விவரெங்கெட்ட பூக்களும்

ஜெனோவா
விவரெங்கெட்ட பூக்களும்,வெட்கங்கெட்ட நானும்!!
--------------------------------------------------!
ஒவ்வொரு மூர்க்கமான மோதலிலும்!
மாறி மாறி!
சில பூக்களையும் இலைகளையும்!
இழந்துகொண்டிருந்தது!
காற்றிடம் மரம்.!
வாடிக்கையான சண்டை போல்!
இல்லாமல்!
இன்று கொஞ்சம் உக்கிரமாயிருந்தது!
தள்ளாடியபடியே!
நான் மரத்தினடியில் அமர்ந்தேன்!
சாராய நெடி ஏகமாய் அடித்தது!
குடித்துவிட்டு வந்திருந்த காற்று!
உலுப்பியதில்!
முன்னத்திக் கிளைகளில் ஒன்றிரண்டு!
முறிய தொடங்கின!
மனம் ஏற்கனவே வெகுவாய்!
சோர்வுற்றிருந்தது.!
பூக்களும் உதிர்ந்துகொண்டேயிருக்கின்றன!
காற்றும் விட்டபாடில்லை.!
உதிர்ந்திருந்தவற்றில்!
ஒன்றிரண்டை கைகளில் வாங்கி!
சோகம் தவிர்க்க வருடினேன்!
விவரங்கெட்ட பூக்களுக்கு!
அப்போதும்!
சிரிப்பதை தவிரவும்!
வேறொன்றும் தெரியவில்லை.!
வெட்கங்கெட்ட நானும்!
சிரிப்பை மட்டும் களவாடி!
வீடு திரும்புகிறேன்

விதி

இளந்திரையன்
அம்மி மிதித்து !
அருந்ததி தேடி !
அந்தணன் காட்டிய !
பகலிலும் பார்த்ததாகப் !
பல்லிளித்து !
மோதிரம் மாத்தி !
மொய் எழுதிப் !
போன உறவுகளும் !
சாட்சியாக !
சக வாழ்வுக்காய் !
கைப் பிடித்ததென்னவோ !
உண்மைதான் !
நான் வரும் வரை !
நடு நிசியென்றாலும் !
நாக்கு வரண்டு !
தண்ணீர் குடிக்கும் !
உன்னைப் பார்த்து !
சிரிக்கின்றாள் !
அருந்ததி !
- இளந்திரையன்