தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

உயிரில் உயிர் வைக்க

கத்துக்குட்டி
அடுத்த காட்சியே உன்னுடன் !
என் இறுதிக் காட்சியாய் !
இறுதியாய்... !
வேண்டாம் என்று மறுத்த என் !
மனதுடன் போராடி இறுதியாய் !
உனக்கொரு வார்த்தை சொல்ல !
சம்மதம் பெற்றேன் !
என் வார்த்தைகள் உன்னைத் !
தொந்தரவு செய்யாவண்ணம் !
உன் நினைவுகள் இனி என்னைத் !
தொந்தரவு செய்யாவண்ணம் !
வேறொரு உயி£¤ல் உயிர் !
வைக்க இன்று முதல் முயல்கிறேன்

உதவாத மனிதர்கள்

த.சரீஷ்
அதிசயப்படவோ!
அல்லது!
ஆச்சரியப்படவோ!
இங்கு...!
ஏதுவுமே இல்லை!
எல்லாம் என்றென்றும்!
வழமைபோலவே.!
தலைகுத்தாக விழுந்த!
பச்சைக்குழந்தைபோல்!
அதர்மத்தின் வாசலில் வைத்து!
மனிதத்தின் அடையாளம்!
உடைக்கப்பட்டிருக்கும்.!
சுயஉரிமைகள்!
பறிக்கப்பட்டிருக்கும்.!
இரத்தத்தின் நிறம் சிவப்பு!
இதை...!
பலதடவைகள்!
உறுதிப்படுத்தியபின்பும்!
மீண்டும் மீண்டும்!
எங்களின்மீது!
இரத்தப் பரிசோதனைகள் தொடரும்...!!
எப்போதும்போலவே!
அப்போதும்...!
அந்த நாலுபேர்!
நாலுவிதமாய்!
பேசிக்கொண்டேதான் இருப்பார்கள்....!!
அவர்களுக்கு உன்னைப்பற்றி!
என்ன கவலை..?!
எப்போதுமே...!
அவர்கள் அப்படித்தான்...!!
உன் உணர்வுகள்!
மனிதரால் மதிக்கப்படும்வரை!
மறுக்கப்பட்ட உரிமைகள்!
மறுபடி உருவாகும்வரை!
விழிரெண்டில் விடியல்!
தெரியும் வரை...!
உனக்காக...!
நீதான் போராடவேண்டும்...!!
அப்போதும்கூட...!
அந்த நாலுபேர்!
நாலுவிதமாய்!
பேசிக்கொண்டேதான் இருப்பார்கள்....!!!!
!
த.சரீஷ்!
05.07.2006 பாரீஸ்

மின்னல்

பனசை நடராஜன், சிங்கப்பூர்
புது(அக)க் கவிதை !
மின்னல் !
பூமிப்பெண் மீது !
காமுற்ற வானம் - அதன் !
மேனியில் மலைகளை !
‘மேகக்’ கைகளால் !
மெதுவாகத் தழுவும்! !
!
‘வானவில்’ சிரிப்பால் !
வசீகரிக்கும், - பூமி !
வசப்பட்டு மயங்கி !
தாகத்தால் தகிக்கையில் !
வேகமாய் ‘மழை’ பெய்து !
தேகத்தால் கூடும் முன்.., !
!
மோகத்தோடு நெருங்கி !
முத்தமிடும் முயற்சியும், !
‘இடியாகத்’ தரைமீது !
இதழ்பதிக்கும் முத்திரையும் !
“மின்னல்”!! !
!
பனசை நடராஜன், சிங்கப்பூர்

அபார்ட்மெண்ட்

எம்.அரவிந்தன்
சில குறிப்புகள்!
-----------------!
!
நாளெல்லாம்!
ஆர்வத்துடன் எட்டிப்பார்த்துவிட்டு!
மாலைக்குள் வாடிப் போகிறது!
பகலில் ஆளில்லாத ஃப்ளாட்களின்!
பால்கனி தொட்டிச் செடி ரோஜாவும்!
சில குழந்தைகளும்!
-----!
!
வாயில் முழுதும் செருப்புகள்!
தொலைக்காட்சி இரையாமல் பார்த்துக்கொண்டோம்!
அனாவசியமாக சிரிக்கவில்லை!
கதவைத் திறக்கையிலெல்லாம்!
என்ன பாவனை கொள்வது எனத் தவித்தோம்!
வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தோம்!
ஞாயிற்றுக்கிழமையில் இறந்து போன!
பக்கத்து ஃப்ளாட்டு யாரோ!
சாந்தி அடைந்து கொள்ளட்டும்!
-----!
!
நான்கு நாட்கள்!
கொடியில் கிடந்தும்!
சோகமான பிசுபிசுப்பைத் தருகின்றன!
சூரியனைப் பார்க்காமல்!
உலர பயிற்றுவிக்கப்பட்ட!
துணிமணிகள்!
!
-----!
!
என் பூஜையறைக்கு!
கீழேயும் மேலேயும்!
கழிப்பறைகள் இருக்கலாம்!
கான்க்ரீட் கடவுள்!
காக்க காக்க!
!
-----!
!
தனித்த பெரிய!
சுதந்திரமான வீடுகளில்!
குழந்தைகளின்!
கண்ணாமூச்சி விளையாட்டு.!
உயர்ந்த பெரிய!
அப்பார்ட்மெண்ட்களில்!
பெரியவர்களின்!
கண்ணாமூச்சி விளையாட்டு.!
-எம்.அரவிந்தன்

சலனம்

ப்ரியன்
மொட்டை மாடி!
கலனிலிருந்து தட்டிவிட்டேன்;!
சாக்கடையில் விழுந்து!
பிரகாசித்துக் கொண்டிருந்தது!
இரவெல்லாம் நிலவு!
யாதுமொரு சலனமில்லாமல்!!
- ப்ரியன்

நாய் குரைப்பு

துவாரகன்
துவாரகன்-!
இந்த நாய்கள் !
எப்போதும் குரைத்துக் கொண்டேயிருக்கின்றன.!
இரவு பகல் நடுச்சாமம் !
எந்நேரமும் நாய் குரைப்பு.!
எக்கணத்திலோ,!
எப்பொழுதிலோ,!
வரப்போகின்ற சாவுக்கே!
கலங்காத நாங்கள்!
இந்த நாய் குரைப்புக்களுக்கு மட்டும் !
கலங்க வேண்டியிருக்கிறது.!
மார்கழி மாதத்துக் கூதற் குளிர்கால நடுக்கம்போல், !
ஒரு முதியவரின் தளர்வைப்போல், !
எல்லாமே இந்த நாய்குரைப்புக் காலங்களில் !
முளைத்து விடுகின்றன.!
அந்தக் காலங்களில்…!
இந்த நாய்கள்!
சுடலையிலிருந்து !
புளியமரங்களிலிருந்து !
நடந்து சென்ற பேய்களைப் பார்த்தும் !
வானத்தைப் பார்த்தும் !
கூரையைப் பார்த்தும்!
குரைத்த காலங்கள் போய்விட்டதாக !
என் அம்மாச்சி சொன்னது ஞாபகம். !
இப்போ !
எங்கள் காலங்களுடன் !
குரைத்துக் கொண்டிருக்கின்றன.!
மழைபெய்து ஓய்ந்த !
மந்தார வேளைகளில்தான் !
தடிகளுடனும் வேட்டைநாய்களுடனும் !
எங்களுர் மனிதர்கள் !
முயல் வேட்டைக்குப் புறப்படுவார்கள்!
அந்தக் காலங்கள் கறங்குபோல் சுழன்று !
இப்போதும் திரும்பிவிட்டனபோலும். !
இறந்த காலங்களும்!
நிகழ்காலங்களும்!
எதுவெனப் புரியாமல்!
விறுவிறுவென வலிக்கும் தேள்கடிபோல் !
என் மூளைக்குள் எல்லாமே குழம்பிப்போயுள்ளது.!
இப்போ!
இந்த நாய்கள் !
குரைக்காது கடித்து விட்டால்கூடப் !
போதுமாயிருக்கிறது.!
அப்போதாவது!
தொப்புளைச் சுற்றி !
ஊசியைப் போட்டாவது தப்பிக்கொள்ளலாம்.!
271020070815

தப்பு... காலம்

ஜெ.நம்பிராஜன்
1. தப்பு!
தப்பாமல் அவ்வப்போது!
தப்புகள் செய்திருக்கிறேன் நான்!
சிறு வயதில் செய்த தப்புகள்!
சிரிக்க வைக்கும்!
இப்போது நினைத்தாலும்!
அப்போது செய்த தப்புகள்!
வேடிக்கையாக செய்தவை!
வேண்டுமென்றே பல தப்புகள்!
இப்போதும் செய்கிறேன்!
தப்புத்தப்பாக தப்பு செய்து!
அகப்பட்ட தருணங்களும் உண்டு!
அப்போதெல்லாம்!
தப்பு செய்யக் கூடாது!
என்று தோன்றியதே இல்லை!
தப்புத் தப்பாக!
தப்பு செய்யக்கூடாது!
என்று மட்டுமே தோன்றியது!
2.காலம்!
காலத்தைத் துரத்தித் தோல்வியுறுவதே!
காலத்தின் கட்டாயம் போலும்!
எது எப்படி இருப்பினும்!
காலம் காலம் தாழ்த்தாது!
தன் கடமையைச் செய்து விடுகிறது!
காலத்தைக் கைப்பற்றுவதை விட!
காலத்துடன் பயணிப்பதே எளிதாயிருக்கிறது!
இருப்பினும்...!
இழந்த நாட்களின் வலியிலும்!
நிகழும் நாட்களின் பயத்திலும்!
வரும் நாட்களின் கனவிலுமே!
காலம் பெரும்பாலும் கழிந்து விடுகிறது!
!
-ஜெ.நம்பிராஜன்

எனக்குப் பிறகு.. வேரீர்ப்பு

அ. விஜயபாரதி
எனக்குப் பிறகு மழை!.. வேரீர்ப்பு விசை!
!
01.!
எனக்குப் பிறகு மழை!!
-------------------------!
மழைக்காற்றுக்குப் படபடக்கும்!
உலர்ந்த ஆடைகளை!
அவதி அவதியாய்!
எடுத்து!
அலமாரியில் அடுக்குகிறேன்!
மழை பெய்து!
ஓய்ந்த பிறகு – கொடியில்!
வரிசையாய் காய்கின்றன!
நிறமற்ற மழைத்துளிகள்!
!
02.!
வேரீர்ப்பு விசை!
------------------!
எவ்வளவு உயரத்தில்!
இருந்தாலும்!
காற்று வீசுகையில்!
தலையசைக்கத் தெரிந்த!
இலைகள்!
பழுத்துதிர்கையில்!
தலை சுற்றியே!
வீழுகின்றன!
தன் பாதங்களில்!
-அ. விஜயபாரதி!
-------------------------------------------------------!
அறை எண் - 53!
முதுநிலை மாணவர் இல்லம்!
வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்!
மதுரை – 625 104

சம்பவங்கள்.. மெளனி.. பந்தம்

பொன்.குமார்
01.!
சம்பவங்கள்!
-------------------!
இரவிலேயே!
நடந்து முடிந்து விடுகின்றன!
முக்கிய நிகழ்வுகள் எதுவும்.!
விழித்த பொழுதோ!
அல்லது விடிந்த வேளையிலேயே!
அறிய முடிகிறது!
நடந்தவைகளை.!
மனைவி எழுப்பி சொல்லியே!
தெரியும்!
முன்னால் முதல்வர்!
எம்,ஜி,ராமச்சந்திரன் மறைவு.!
முன்னால் பிரதமர் ராஜிவின்!
படுகொலையும் அவ்வாறே!
யாரோ கூறியதாக நினைவு.!
அலுவலகத்திலிருந்து வந்த!
அவசர அழைப்பே தெரிய செய்தது!
நடு இரவில் கலைஞர்!
கைது செய்த விவரம்.!
இப்படியே நிகழ்ந்தது!
பின்னர் தெரிந்தது!
எதிர் வீட்டு பாட்டியின்!
இயற்கை மரணம்.!
!
02.!
மெளனி!
-------------!
அதிகாலை ஆறு மணிக்கு!
வீடு தேடி வந்தவர்களுக்காக!
தூக்க்த்தை ரத்து செய்து!
எழுந்தேன்.!
குளிக்கும்போது!
கூப்பிடும் குரல் கேட்டு!
முழுமையாய் குளியாமல்!
வெளியே வருகை.!
சாப்பிடும் வேளை!
சொந்தம் வர!
அரைவயிறு நிரப்பி!
அவசரமாய் முடிப்பு.!
ந்டக்கையிலே!
கடந்து போனவனுக்காக!
கைகளை நீட்டவில்லை.!
பேருந்தில்!
பக்கத்தில் அமர்ந்தவனுக்காக்!
உடல் கால்பாகமய்!
ஒடுக்கப்பட்டது.!
என் பிரச்சனைகளே!
என்னால் தீர்க்கப்படாத நிலையில்!
வந்தவர்கள் சிக்கல்களைக் கேட்க!
மெளனியானேன்.!
எனக்காக வாழ!
எத்தனிக்கும் வேளையிலெல்லாம்!
விட்டுக்கொடுக்க் வேண்டியுள்ளது!
யாருக்காகவோ.!
03.!
பந்தம்!
-------------!
பஞ்சாயத்துக் கூட்டவில்லை!
வேண்டியவற்றை பேசி தீர்த்தோம்!
சரியாக பிரித்துக் கொள்ளப் பட்டது!
உன்னோடு அப்பாவும்!
என்னோடு அம்மாவும்!
பிரிந்து செல்கையில்!
தூரம் கடந்து!
எதேச்சையாக!
திரும்பிப் பார்க்கிறோம்!
ஒரே கணத்தில்!
நீயும் நானும்

வில்வமரமும் கனத்த தலையும்

செண்பகபாண்டியன்
வில்வமரத்தில் ருத்ரதாண்டவம் !
வியாபித்த தரிசனம் !
திரிசங்கு சொர்க்கம் !
கிசோபெரனியா கடுங்கோபம் !
கிடந்த சவம் அடக்கம் !
உடைந்த பணம் முடக்கம் !
பலத்துடன் ஒடிநதியில் மோத !
பாவம் கண்டு பயந்து !
பரிதவித்து சிதைந்த நேரம் !
குரங்குடன் குதிரை மனதும் !
குளம்பொலி துடைத்து விட்ட !
கையும் காலும் விலங்கிட்ட !
கனத்த தலையுடன் வெறித்த !
வில்வமரத்தில் ருத்ரதாண்டவம் !
வியாபித்த தரிசனம் !
திரிசங்கு சொர்க்கம் !
கிசோபெரனியா கடுங்கோபம்