தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

பரவசமானேன்

வேதா மஹாலஷ்மி
வேதா மஹாலஷ்மி !
நெரிசலான நிறுத்தம்.. !
அவசரமாய் உலகம்.. !
........... !
ஏதோ உந்துதலில்.. !
அரட்டையில் நழுவி அமைதியானேன்! !
அத்தனை பேரையும் தாண்டிய !
உன் தனிப்பார்வை... !
என் மீது மட்டும் போர்வையாய்! !
நொடி, நிமிடம் அல்ல.. !
நெடுநேரம்... வெகுவாக! !
பட்டப்பகலில் வெட்டவெளியில் !
மனசோடு மனசாய் !
நீ தந்த பரவசத்தில் !
பெண்மையின் மென்மை நிலைக்க.... !
கொஞ்சம், !
பரவசமானேன் நான்! !
veda

மரணமே உனக்கு மனமில்லையா.?

சிலம்பூர் யுகா துபாய்
வணக்கம்!
உனது கடந்தகால!
ரசிகன் நான்.!
எவரோ கேட்டார்!
என்பதற்காக!
இன்று உன்னை!
ஞாபகப்படுத்துகிறேன்.!
நானுன்னை ரசித்தேன்!
ஏனெனில்- நான்!
உன் ரசிகன்.!
உன்னை!
விமர்சிக்காதவர்!
ஒருவருமில்லை!
இருந்தும்!
உன்னை நேசித்தேன்.!
விளக்கை விரும்பும்!
விட்டில் மாதிரி!!!
உனது நேரம்தவறாமை,!
நீதி பிறளாமை,!
ஏற்றத்தாழ்வில்லாத!
கண்ணோட்டம்,!
விளம்பரமின்றி வந்து!
விமர்சையோடு போகும்!
உனது விளையாட்டு,!
வேண்டாம் வேண்டாம்!
என்றாலும்!
விடாபிடியாய்!
அழைத்துச்செல்லும்!
கடமை தவறாமை,!
எல்லாம்!
பிடிக்கும் எனக்கு.!
உன் முகத்தில்!
எச்சில் துப்பவேண்டுமென்று!
எத்தனித்தது!
ஒரே ஒருதரம்.!
அன்றோடு!
என் மனதிலிருந்த!
உன்னை!
கொன்று விட்டேன்!!
நீ!
எவரை!
எடுத்துச்சென்றாலும்!
ஏதாவது ஒருவர்!
இன்புருவர்!!
அனைவரையும்!
துக்கிக்க வைத்து!
அன்னைதெரசாவை!
ஏன்!
அழைத்துச்சென்றாய்?!
உண்மையை!
ஒளிமறைவின்றி கூறு!
நீயும்!
அழுதுகொண்டுதானே!
அழைத்துச்சென்றாய்?!
உன்னுயிருக்காக!
வேண்டி கூட-அவர்!
பிரார்த்தித்திருப்பாரில்லையா!!
மனமே இல்லையா உனக்கு!
மரணமே?

பிரிதலின் பசலையை நெய்யும்

இளங்கோ -கவிதைக்காரன் டைரி
மௌனக்கொடி..!
-----------------------------------------------------------------!
உதடுகளைப் பூசிப் போகின்றன..!
கனவில் பொழிந்த பனித்துளிகள்..!
கை நிறைய மலர்க்கொத்துத் தருகிறாய்..!
இரவின் வாசலில்...இசையின் பின்னணியில்!
பார்வையின் பரவசத்தில்..!
இதயத்தில் தூறுகிறது மழைச்சாரல்..!
இலைக் குடை அகப்படா வனத்தில்..!
தனித்து அலைகிறோம்..!
நதிக்கரையோரம்!
தென்றல் கசியும் மஞ்சள் வெயில் பொழுதை..!
பென்சில் கொண்டு கிறுக்கிப் பார்க்கிறேன்..!
அதில்..!
கருப்பு வெள்ளையாய் விரிகிறது!
உன் புன்னகை..!
பிரிதலின் பசலையை!
நெய்துக் கொண்டே இருக்கிறது..!
மௌனக்கொடிச் சுற்றி மனது

தாஜ்மஹால்

பீ.எம். கமால், கடையநல்லூர்
சலவைக் கல்லில்!
ஒரு!
சாகாத காதல் கவிதை !!
துன்பம் வந்த வேளையில்!
துள்ளிவந்த சிரிப்பு !!
காதல் இதயம்!
சிந்திய!
கண்ணீர்த் துளி !!
இது-!
சலவைக் கல் அல்ல -!
காதலை எடைபோடும்!
எடைக்கல் !!
காதலியின் கண்ணீரால்!
இந்தக்!
கல்லுக்குள் ஈரம்!
கசிந்துகொண்டிருக்கிறது !!
இந்தச்!
சலவை மௌனத்தில்!
கேட்பது!
உயிரின் ஓசையா ?!
உறவின் ஓசையா ?!
இது-!
கல்லறை அல்ல !-!
கட்டளை !!
என்னை நீமட்டுமல்ல!
எல்லோரும் எப்போதும்!
நினைத்திருக்க வேண்டுமென்ற!
அரசிக் கட்டளை

தமிழ்மனம்

நளாயினி
கானல் நீரா?! !
காவியமா?! !
கடுகதியாய் போகும் !
எண்ண ஓட்டமா?! !
நினைவுகளுக்கு !
சக்கரம் பூட்டிய வேகமா?! !
குழந்தைத்தனத்துள் தெரியும் !
குது£கலமா?! !
இதுவரை யாருமே !
வெளிக்காட்டாத !
உயரிய சிந்தனையா?! !
யாருமே அனுபவித்திராத !
இன்ப ஊற்றா?! !
என்னவென்றே இனம் காணமுடியாத !
ஒரு தளுவல் !! !
காற்றில் பறக்கும் அனுபவம் !
மலையின் உச்சியை !
தொட்டுவிட்ட அனுபவம் !
யாரும் அருகில் இருப்பதை கூட !
மறந்த நிலை: !
இவை எல்லாம் !
சின்னத்தனமாய் தொ¤யவில்லை- !
ஆனாலும் !
சமூகத்திற்கு பயந்த சாபக்கேடாய் மனதுள்: !
தொட்டுவிட்ட தொட்டாச்சினுங்கியாய் !
தன்னை மறைத்துத்தான் கொள்கிறது. !
அப்பப்போ தன்னை இனம் காட்டும் !
அந்த தொட்டாச்சினுங்கிக்கு உள்ள மனசு கூட !
பாவம் மனித மனசுக்கு !
தனக்குள் இருக்கும் !
மனசை காட்ட !
சந்தற்பம் கிடைக்காமலே போகிறது. !
!
நளாயினி தாமரைச்செல்வன் !
சுவிற்சலாந்து !
31-12-2002

நின் சலனம்

அறிவுநிதி
அறிவுநிதி!
மலரில் இளைப்பாறும்!
பட்டாம்பூச்சயின் சிறகசைப்பாய்!
உன் நினைவுகளில்!
என் இதயம்!
இமைமூடி!
உறங்கமறுக்கும் இருவிழிகளுக்கு!
இடையில்!
திறந்தே கிடக்கிறது !
உன் முகப்படம்!
கரையைக் கடக்காத அலைகள்!
மீண்டும் மீண்டும் !
அதன் முயற்சிபோல!
நானும் காதலில்!
உனக்கு ஒரு புதுப்பெயர்!
ஒப்பிடுகிறேன் திருடி!
மலர்மோதி மலர் சிதைந்ததில்லை!
உன் பொய்கோபம் போல!
நாம் !
அடிக்கடி பிரிக்கப்படுகிறோம்!
என் தனிமையை கலைக்கும்போதெல்லாம்!
நம்!
யுத்தஙகள் நீண்ட மௌனத்தில்!
இதயங்கள் சரணடைந்தன.!
-அறிவுநிதி

ஈரம்

நாவிஷ் செந்தில்குமார்
தீபாவளிக்கு வாங்கி!
வெடிக்காமல் போன!
பட்டாசை!
விரித்துப் பார்த்தேன்!
சிறுவன் ஒருவனின்!
வியர்வையும் இரத்தமும்!
இன்னும் காயாமல் இருந்தது!!

யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து

கலாநிதி தனபாலன்
01.!
யாமிருக்கப் பயமேன்!
-------------------------------!
யாமிருக்கப் பயமேன் என்று!
யான் யதார்த்தத்தில் கண்டதில்லை!
யாதேனும் பயனின்றி யாரேனும் வருவதில்லை!
யாரோ வருவார் யாரோ போவார்!
வருவதும் போவதும் தெரிகிறது!
வந்தவரெல்லாம் வாங்கிக்கொண்டுதான் போகின்றார்!
இவர்கள் வாரிக்கொடுத்தால்!
வாழ்த்துச் சொல்லும் வஞ்சகர் கூட்டம்!
கொட்டிக்கொடுத்தால் கூடிக்குலாவும்!
குள்ள நரிக்கூட்டம்!
தட்டித்தவறி தடையேதும் வந்து!
கொடுக்காது விட்டால் கொடியவனென்று!
கூக்குரலிட்டு கூட்டம் கூட்டி!
சேற்றினை வாரிச் சிரித்து நிற்கும்!
சிறந்த மனிதர்கள்!!
சிந்தித்து நின்றேன் சிதையா மனதுடன்!
அந்தியும் வந்தது அடுத்த காலம்!
காலத்தின் கட்டாயம்!
கடந்து செல்லும் இவர்களையும்!
கணக்கெடுத்து கடந்துசெல்ல முனைகிறேன்!
என் காலத்திற்குள்ளான காலநதியை...!
02.!
மூன்றெழுத்து!
-------------------!
வாழ்வு எனும் மூன்றெழுத்து!
வளமாக வாய்த்திடவே!
அன்பு எனும் மூன்றெழுத்து ஒளிகொண்டு!
இருள் என்ற மூன்றெழுத்து!
வாழ்வில் இடம் பிடித்து விடாமல் எாிகின்ற!
தீபம் எனும் மூன்றெழுத்து!
வெற்றி எனும் மூன்றெழுத்தை!
விடாமல் பிடித்துவிட என்னை விளைவித்த!
சக்தி எனும் மூன்றெழுத்து!
அது என் அன்னை

தண்ணி பட்ட பாடு

ரவி அன்பில்
ஏழெட்டு மாசமா!
எங்கூரில் மழையில்ல!
யாரு செஞ்ச குத்தமுன்னு!
யாருக்குமே தெரியல்ல!
சமைக்கத் தண்ணியில்ல!
தொவைக்கத் தண்ணியில்ல!
குளிக்கத் தண்ணியில்ல!
குடிக்கத் தண்ணியில்ல!
ஊருணியும் மணலாச்சு!
ஒலந்த மீன் முள்ளாச்சு!
தூரெடுத்தும் கெணத்திலே!
துளிக்கூடத் தண்ணியில்ல!
குச்சிமகா காளியம்மன்!
கோவிலிலே பூசாரி!
நச்சுன்னு ஒடச்ச தேங்கா!
ஒண்ணுலயும் தண்ணியில்ல!
போரு கொழாய்த் தண்ணி!
போட்டுவெச்ச சீமாங்க!
மனசிருந்தா வாம்பாங்க!
மாறுபட்டாச் சீம்பாங்க!
தாகத்தைத் தீத்து வெக்க!
இளனியில்ல நொங்குமில்ல!
பாவத்தைக் கழுவக் கூட!
பச்சத் தண்ணி எங்குமில்ல!
நஞ்சையும் புஞ்சையாச்சு!
புஞ்சையும் புழுதியாச்சு!
பஞ்சப் பாட்டையெல்லாம்!
பத்திரிக்கை எழுதியாச்சு!
தேர்தலுக்கு வந்த கட்சி!
தேறுதலுக்கு வரவுமில்ல!
ஓட்டு வாங்கிப் போனவங்க!
ஒத்தாசை தரவுமில்ல!
வேலி கொவ்வாக்கொடி!
வெக்கையில காஞ்சிருச்சு!
காரச் செடி சூரச் செடி!
கருமுள்ளாத் தேஞ்சிருச்சு!
உசல மரம் புங்க மரம்!
மஞ்ச நெத்தி ஈச்ச மரம்!
உசிரு போற வெய்யிலில!
ஒலகத்த வெறுத்திருச்சு!
புரவ ஆட்டுத் தீனிக்கு!
புல்லுமில்ல பொதருமில்ல!
தொரட்டி எட்டும் தூரத்திலே!
மரத்து மேல தழையுமில்ல!
முட்டிபோட்டு வால்துடிக்க!
முட்டிமுட்டி பால்குடிக்க!
குட்டி ஆடு பசி அடக்க!
சொட்டுப்பாலும் சொரக்கலயே!
முண்டக்கண்ணி சாவலுக்கும்!
தொண்டத்தண்ணி வத்திருச்சு!
விடிஞ்சாத்தான் என்னன்னு!
கால் நீட்டிப் படுத்திருச்சு!
குறி சொல்லும் சோசியனும்!
தலையில அடிச்சுக்கிட்டான்!
கிளி செத்துப் போச்சுன்னு!
கடைய அடச்சுப்புட்டான்!
கால்ஊனி கால்மடிச்சு!
நாலாய் நின்ன கொக்கு!
வீசா வாங்கிக் கிட்டு!
வெளிநாடு போயிருச்சு!
அறுவடைய நம்பித்தான்!
நடக்குதுங்க விவசாயம்!
பருவமழை தவறிப்புட்டா!
குடுத்தனமே கொடைசாயும்!
தண்ணிபட்ட பாடாத்தான்!
தவிக்குதுங்க இடையபட்டி!
வருண கருண பகவானே!
வந்திருங்க நடையக்கட்டி

சிறுகச் சிறுக சேர்த்து வைத்திருக்கிறேன்

இளந்திரையன்
சிறுகச் சிறுக !
சேர்த்து வைத்திருக்கிறேன் !
என்னைப் பற்றியும் !
என் வேர் பற்றியும் !
யாரும் கவனிக்கவில்லை !
அவரவர்க்கு !
அவரவர் அவசரம் !
யாருக்கும் நேரமில்லை !
மண்ணின் வாசனை !
மனங்களின் நேசம் !
மலர்களின் வாசம் !
மலரும் நினைவுகள் !
சொல்ல வேண்டும் !
உரக்கச் சொல்ல வேண்டும் !
மண்ணை நேசிக்கும் !
மனங்கள் பற்றி !
உயிரைத் துறக்கும் !
உயிர்ப் பூக்கள் பற்றி !
இனவாதம் எதிர்க்கும் !
இதயம் பற்றி !
சிறுகச் சிறுக !
சேர்த்து வைத்திருக்கிறேன் !
என்னைப் பற்றியும் !
என் வேர் பற்றியும் !
- இளந்திரையன்