மீண்டும் பிறந்திருப்பேன்..! சரித்திரத்தின்
எசேக்கியல் காளியப்பன்
முதலெழுத்து!
01.!
மீண்டும் பிறந்திருப்பேன்..!!
--------------------------------!
உன்றன் அருகில் வந்தேன் – உனது!
உணர்ச்சிக் காற்றேடுத்தேன்!
இன்றும் வாழ்ந்திருப்பேன் –என்!
இதயம் நன்றிசொலும்!!
உன்முகம் அருகில் கண்டேன் – அது!
உதிர்த்த பூக்கள் கொண்டேன்!!
என்மனம் மணக்குதடீ –அங்கே!
இன்றுமுன் பூசையடீ!!
காந்த விழிகள் கண்டேன் ! –எனக்குள்!
காயங்கள் ஆறுதடீ!!
மாந்த அருகில்வந்தேன் –இதழ்கள்!
மறுக்கப் பசித்திருப்பேன்!!
சேர்ந்த கருங்கோந்தல்- எனக்குள்!
சிலிர்ப்பைத் தந்தடீ!!
நேர்ந்த கவிதைகளை –உலகும்!
நித்தம் படிக்குதடீ!!
மீந்த நாட்களிலே –உந்தன்!
மெல்லிய நினைவுகளைச்!
சோர்ந்தே விழும்வரைக்கும் –நெஞ்சில்!
சுகமெனப் பூட்டிவைப்பேன்!!
மீண்டும்,உன் நாள் வரவே –இறையை!
வேண்டித் தவமிருப்பேன்!!
மாண்டும்,அந் நினைவுகளில் –நான்!
மறுபடிப் பிறந்திருப்பேன்!!
!
02.!
சரித்திரத்தின் முதலெழுத்து!
------------------------------------!
ஆதிரையில் வந்தவளே!!
ஆண்டவனின் மறுவுருவே!!
மார்கழியில் பிறந்தவளே!!
மார்கொடுத்து வளர்த்தவளே!!
தேர்ந்தெடுக்கா நற்பேறே!!
தேவனவன் திருக்கொடையே!!
பேர்கொடுத்து மகிழ்ந்தவளே!!
பேறெனவே நெகிழ்ந்தவளே!!
சோர்வுடனே தானிருந்தும்!
சுகமெனக்கு விழைந்தவளே!!
நீர்குடித்துப் பாற்சோறு!
நிதமெனக்குத் தந்தவளே!!
சீர்கொடுத்துச் சினந்தாங்கிச்!
செய்தபிழை மறந்தவளே!!
யார்கழித்துப் பேசிடினும்!
எனைஉயர்த்தி நின்றவளே!!
வேர்எனவே எனைப்பிடித்து!
வெளித்தெரியா திருப்பவளே!!
ஊர்தெரியச் சண்முகமாய்!
உள்ளழுது வாழ்பவளே!!
சார்ந்திருக்க மறுத்தவனின்!
சரித்திரத்தின் முதலெழுத்தே!!
தீர்ந்தெனது நாள்முடிந்து!
தேவனிடம் சேருகையில்!
நேர்ந்திடப்போம் தண்டனையை!
நீகுறைக்க வேண்டம்மா