நமது நகரத்த சூழ்ந்திருந்த!
எல்லா வண்டிகளும் புறப்பட்டுவிட்டன!
புனரமைக்கப்பட்ட வீதி!
மீண்டும் தனித்திருக்கிறது!
நம்மிடம் இப்பொழுது!
ஒரு பயங்கர அமைதியும்!
குருர கலவரமும் திணிக்கப்பட்டிருக்கிறது.!
வெள்ளயைடித்து பயணிக்கப்பட்ட!
இந்த வீதியை சிதைப்பது பற்றி!
யாரிடம் முறையிடுவது?!
அல்லது எப்படி தடுத்து நிறுத்துவது?!
குருதியால் பெறப்பட்ட!
சிவப்பு வீதியின் வரலாற்றை!
வெள்ளைத்தோரணங்கள்!
பிரதிபலிக்காமலே போய்விட்டன!
வீதி கிழிந்து கிடக்கிறது.!
இது எனது வீதி!
எனது வீட்டிற்கு பிரதானமானது!
எனக்காக நீளுகிறது!
இதற்காக நம்மில் பலர்!
குருதி சிந்தியிருக்கிறார்கள்!
உயிரை புதைத்திருக்கிறார்கள்.!
இப்பொழுது இந்த வீதி!
பசியின் வரலாராகவும்!
நோயின் தரிப்பிடமாகவும்!
உயிர்களை பறிகொடுக்கிறது!
நிழலுக்காக முளைத்த!
பனைமரங்களின் கனவுகள்!
தின்னப்படுகிற முகாமாகிவிட்டது.!
பனைமரங்களை வறியாதீர்!
என்ற மூத்தோரின் குரல்கள் கேட்கின்றன!
எத்தனை பனைமரங்கள்!
காயப்பட்டிருக்கின்றன!
எத்தனை பனைமரங்கள்!
அழிந்துவிட்டன!
எதிர்கால பனைமரங்களுக்கான!
விதைகளும் நாற்றுக்களும்!
எங்கிருக்கின்றன.?!
வந்த வண்டிகள் எதையோ!
ஏற்றி விட்டு திரும்பிபோகின்றன.!
எங்கள் வண்டிகள் எதுவும்!
எரிபொருள்இன்றி நகருவதில்ல!
வெள்ளபைபோர்நம்ம சூழ்கிறது.!
எமது வீதிகளை யார் தீர்மானிக்கிறார்கள்?!
எமது வண்டிகளை யார் தீர்மானிக்கிறார்கள்?!
எமது நகரங்களை யார் தீர்மானிக்கிறார்கள்?!
எமது வீடுகளை யார் தீர்மானிக்கிறார்கள்?!
எமது பனைமரங்களை யார் தீர்மானிக்கிறார்கள்?.!
!
- தீபச்செல்வன்!
14.08.2007
தீபச்செல்வன்