கூலிக்கு மாரடிக்கும்!
கூனல் கிழவி சிலர்!
வேலிக்குப் பொட்டு வைத்து!
வெளியேறி நாட்சிலவில்!
போலிக்கு வாழ்வளிக்கும்!
புலம்பெயர் மண் கால் பதித்தே -இன்று!
தாலிக்குக் கொடிபோதா!
தடிப்பாகத் தேடுகின்றார்.!
கைநாட்டுப் போட்ட கதை!
கடக்கு முன்பே மறந்து விட்டு!
ரை கோட்டு சகிதமுடன்!
இராக்காலப் பனியில் நின்று!
பை போட்டு கதைத்த அப்போ!
பார்த்திருந்த வட்டு ஒன்று -ஆச்சி!
டைபோட மறந்ததினை!
ஞாபகத்தில் கொண்டு வந்தான்.!
ஆங்கிலமும் தெரியுமென்று!
அருகிருப்போர் அறிந்துகொள்ள!
பாங்கிலவள் பேச எண்ணி!
பத்து தரம் நோ நோ சொல்ல!
மூங்கிலவன் கையெடுத்த -நல்ல!
முரட்டுப் பொடியனுமோ!
வாங்கினிலில் உட்கார்த்தி!
வடிவாகச் சாத்திவிட்டான்.!
வட்டிலிலே பழஞ்சோறு!
குடித்த கதை கேட்கவுமே!
வட்டிஸ்தற்? பழஞ்சோறு!
பாட்டியவள் கேட்டுவிட்டு!
கொட்டிக்க தன் பசிக்கு!
கம்பூர்கர் வேணுமென -சந்தை!
பெட்டிக்கை பாரன் என்று!
பேரனுமோ சொல்லிவிட்டான்.!
அப்புவுடன் சேர்ந்திருந்தால்!
அரசுப் பணம் குறையுமெண்ணி!
தப்புகளைத் தவிர்ப்பதற்காய்!
தாத்தாவைத் தனியிருத்தி!
கொப்பு ஒன்று வேண்டுமென்று!
கோதையவள் தன்னருகே!
சப்பு ஒன்றை வைத்தபடி!
சந்தி பல சுற்றுகிறாள்.!
சித்தெறும்பு கடித்த பாட்டை!
சிறுகப் படித்தபடி!
பெத்த பிள்ளையோடிருந்தால்!
பேத்தி என்று சொல்வரெண்ணி!
மெத்த சுகம் காண!
மேல் மாடி வீடெடுத்து!
செத்த பிணம் பலவும்!
நித்தம் சுடலையிலே.!
ஊரறியேன் பேரறியேன்!
உண்மையிது நானறியேன்!
வாழ்வறியேன் தொழிலறியேன்!
வந்த இடம் வாழ்வறியேன்!
சூதறியேன் வாதறியேன் -அவர் !
சொல்லியதால் ஈதறிவேன்!
நீதறிவீர் நினைத்திடுவீர்!
நிலையற்ற வாழ்வுணர்வீர்.!
த.சு.மணியம்
த.சு.மணியம்