தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

புதுக்கவிதைகள்

கரு.திருவரசு
மதுக்கலயங்கள் இதழ்களிலெல்லாம் !
மறுபடி மறுபடி முத்தமிட்டேன்! !
புதுச்சுவையங்கே எதுவுமில்லையே !
புளித்துச் சலித்து விட்டுவிட்டேன்! !
மதுக்கவிதைகள்! மயன்உலகங்கள்! !
மறுபடி மறுபடி பிறந்துவரும் !
புதுக்கவிதைகள் பாரதிகவிதைகள்! !
படிக்கப் படிக்கப் புதுக்கவிதைகள்! !
-கரு.திருவரசு !
வெல்லத் தமிழினி வெல்லும்

அணு ஒப்பந்தம், ஆட்சி மாற்றம்

ஒளியவன்
அருகிலிருந்தவர்!
அணு ஒப்பந்தம் பற்றியும்!
ஆட்சி மாற்றம் பற்றியும்!
பக்கம் பக்கமாகப்!
பேசிக் கொண்டிருந்தபொழுது!
கவனத்தை ஈர்த்தது!
கனத்த குரலொன்று.!
பரபரப்பான பேருந்து நிலையத்தில்!
பார்ப்பவர்கள் இடமெல்லாம்!
தண்ணீர் வேண்டுமா!
தண்ணீர் வேண்டுமாவென்றுக்!
கூவிக் கூவி விற்றபடி!
பாவி ஏழைச் சிறுவன்!
பசிக்காக உழைத்தான்.!
கல்வியென்ற ஒன்றை!
கண்டிருப்பானா இவன்?!
அணு ஒப்பந்தமும்!
ஆட்சி மாற்றமும்!
பற்றிய எந்தக் கவலையும்!
மாற்றிடுமா இவன் வாழ்வை?!
புறப்பட்ட பேருந்து மெதுவாக!
பேருந்து நிலையத்தைவிட்டு!
வெளியேறிய பொழுதும்!
விழியகற்றாது பார்த்துக்!
கொண்டே இருந்தேன் அவனை!
கண்கள் அயர்ந்து!
தண்ணீர் தாகத்தில்!
தொண்டை வறண்டு!
மயக்கமுற்று விழுந்தான் என்!
மண்ணின் மைந்தன்.!
- ஒளியவன்

டெம்பிள் ரன்

ரசிகவ் ஞானியார்
முடிவில்லாத ஓட்டத்தின்!
எல்லையை!
எவனுமே அடைந்ததில்லை!
இட வலம் நகர்ந்து!
சேகரிக்கும் காசுகள்!
பள்ளத்தில் விழ!
பரிந்துரைக்கின்றது!
வாழ்க்கையிலும் ஓடுகின்றார்கள்!
பல !
டெம்பிள் ரன் ஓட்டக்காரர்கள்!
எத்தனையோ !
அரக்கர்களை தாண்டியபடி!
விழுந்தவனை !
தூக்கிவிட!
எந்த காசுக்கும்!
கைகள் இல்லை

கனவில் வந்த கடவுள்

துவாரகன்
ஒரு நாள் என் கனவில் கடவுள் வந்தார்!
தான் யார் என்று கேட்டார்!
கடவுள் என்றேன்!
எல்லாம் அறிந்தவர்!
எங்கும் நிறைந்தவர்!
எல்லோரையும் காப்பவர்!
அவரே கடவுள் என்றேன்!
ஆனாலும் கடவுள் மிகக் கவலைப்பட்டார்!
என்னவென்று கேட்டபோது!
தான் நன்றாக இல்லை என்றார்.!
கடவுள் நீண்ட நேரம் சிந்திக்கிறார்!
கடவுள் நீண்ட நேரம் விடுப்புக் கதைக்கிறார்!
இதனால்த்தான்!
கடவுள் நன்றாக இல்லையென்பதைப்!
புரிந்துகொண்டேன்!
ஒளிவட்டம் கொண்ட!
ஞானிகள் போல் கடவுளும் இருக்கவேண்டும்!
இல்லாவிடில் இரணியன் வந்துவிடுவானே?!
இப்போ நானும் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்!
இரவில் மின்னுகின்ற!
மின்மினிப் பூச்சிகளையும்!
நட்சத்திரங்களையும் பார்த்துக்கொண்டே

என் நேசத்துக்குரிய எதிரிக்கு

எம்.ரிஷான் ஷெரீப்
ஒரு கோதுக்குள்!
என் மௌனத்தைக் கருக்கொண்டுள்ளேன்!
அதனை ஓட்டையிட்டு!
வார்த்தைகளை உறிஞ்சத் துடிக்கிறாய் !
மூங்கிலைத் துளையிட்டாய்!
புல்லாங்குழலாகினேன்!
வேரினைக் குழிதோண்டிப் புதைத்தாய்!
பெருவிருட்சமானேன்!
கையிலேந்திய மழைத்துளிகளை விசிறியடித்தாய்!
ஓடையாய் நதியாய்க் கடலாய்ப் பெருக்கெடுத்தேன்!
இவ்வாறாக!
எனக்கெதிரான உனதொவ்வொரு அசைவிற்கும்!
விஸ்வரூபம் எடுத்துத் தொலைக்கிறேன்!
அதிர்ச்சியில் அகலத்திறந்தவுன் வாயினை !
முதலில் மூடுவாயாக !!
இந்த வெற்றிகளை எனக்குச் சூடத் தந்தது!
என் நேசத்துக்குரிய எதிரியான !
நீயன்றி வேறெவர் ?!
ஆனாலும் எனை என்ன செய்யச் சொல்கிறாய் ?!
அமைதி தவழும் ஒரு மரணத்தைப்போல!
அழகிய மௌனத்துடன் நானிருக்கிறேன்!
பூச்சொறிவதாய்ச் சொல்லி!
எதையெதையோ வாரியிறைக்கிறாய்!
நான் தவம் கலைக்கவேண்டுமா என்ன ?!
-எம்.ரிஷான் ஷெரீப்,!
இலங்கை

மழைக்காலம்

அன்பாதவன்
1 !
வருஷந்தோறும் பொழிகிறது மழை !
இடிந்துவிழுகிற கட்டடங்கள் !
சிதைந்த உடல்கள் பார்த்து !
'உச்' கொட்டி பெருமூச்சுவிட்டு !
கடவுளை சபித்து நகர்கிறது வேகமாய் !
மாநகர வாழ்வு !
2 !
மழை பொழிந்து கொண்டிருக்கிறது !
ரயில் கண்ணாடியில் படிந்த !
நீர்ப் படிமத்தில் எழுதுகிறேன் உன் பெயரை !
அனிச்சையாய் !
சார் நம்ம ஊரா எனத் தொடங்கி !
தாய்மொழியில் விசாரிப்புகள் !
கிடைத்ததொரு புதிய நட்பு உன்னால் !
3 !
ரயிலை நிறுத்தி பார்க்க வைத்து !
மழையில் மூழ்கி குளிக்கின்றன !
தண்டவாளங்கள் !
4 !
மழை இரைச்சலை மீறி !
புழுங்கி கசகசக்கும் அடைத்த ரயில் பெட்டியில் !
இதமாய் ஒலிக்கின்றன !
உடைந்த பாடல் வரிகள் !
5 !
மழை யைப் பற்றி எழுத !
பொழிய வேண்டும் !
புதுமழை

நான் கண்ட முகங்கள்

எதிக்கா
மாவீரர் நாள்!
அஞ்சலிக்கு சென்றிருந்தேன்!
நாட்டுக்காய் மாய்ந்துபோன!
மாவீரர்கள் ஒருபுறம்!
கொடிய போருக்குள் சிக்குண்டு!
உடல்கள் சிதறி !
துண்டங்களாயும்...கருகியும் போன!
அப்பாவி மக்கள் மறுபுறமும் !
பள்ளி வயதினில் !
கூடித்திரிந்த சினேகிதங்கள் ஒருபுறம்!
அன்றாடம் வீதியில் கண்டு !
பரீட்சயமான முகங்கள் மறுபுறம்!
இப்படி...... !
எத்தனையோ இறந்துபொன முகங்கள் - அந்த!
இரண்டு நிமிட மௌன அஞ்சலியில் !
தென்பட்டுச் சென்றன

இனி

கருணாகரன்
சவப்பெட்டியின் நிழலில் துளிர்த்த வேர்கள் !
அதி பயங்கரமாகவும் !
சாவகாசமாகவும் !
வளர்ந்து செல்கின்றன !
என் து£க்கத்தினூடும் !
விழிப்பினூடும். !
!
ஞாபகங்கொள்ள முடியாத !
பூச் செடிகளில் !
யாரோ விட்டுச் சென்ற !
புன் சிரிப்பின் மீது !
இரத்தத் துளிகளின் நடனம் !
பாம்பின் நனினத்தோடு. !
காதருகில் அச்சமூட்டும் !
இரகசியங்களைச் சொல்லும் எதிரி !
அழைத்துச் சென்ற விருந்தில் !
எதிர்பாராத விதமாகக் கண்டேன் !
கிறிஸ்துவை. !
தலை கவிழ்ந்தபடியிருந்தார் அவர் !
தியானமா அவமானமா !
கனவுகளில் எரிந்து கொண்டிருந்தது காலம் !
பன்னூறு ஆண்டுகால !
தோல்வியின் நிழலைப் பிரதிபலிக்கும் !
அந்த விழிகளில் !
சகிப்பின் கடைசிக்கணம் !
முடிவதைக் கண்டேன். !
-கருணாகரன்

கைவிடப்பட்ட மந்தைகளும்

பிடுங்கி
கரணம் போடும் மேய்ப்பர்களும்.... !
--------------------------------------------------------------------------------!
கோடைஇடியிடித்து!
வானம் மின்னியது.!
பூமி நடுங்கியது.!
கரு நாகங்கள் மேலெழுந்து ஊரத்தொடங்கின!!!
நரிகள் பிலாக்கணமிட்டழுதன!!
மந்தைக் கூட்டம் சிதறியது.......!
எது திசை??? எது போகுமிடம்???!
தெரியாது திகைத்தன மந்தைகள்.!
மேய்ப்பர்களின் கையசைவிற்காய்!
ஏங்கித் தவித்தன அவை. !
மேய்ப்பர்களைக் காணவில்லை!
கைவிட மாட்டார்கள்.!
நம்பிக்கையோடு,!
மேய்ப்பர்களைத்தேடத்!
தொடங்கின!
மந்தைகள்!!! !
வனாந்தரங்களில்.....!
கட்டாந்தரைகளில்....!
முகாம்களில்....!
காடுகளில்.....!
சுடலை வெளிகளில்.....!
தெருவோரங்களில்......!
எங்கு மேய்ப்பர்கள்???,எங்கு மேய்ப்பர்கள்??? !
தேடித் தேடியே!
மந்தைகள்!
வாழ்விழந்தன.!
எல்லை புகுந்தவை!
வக்கிர புத்திக்காரரின்!
வக்கிரத்துக்குப் பலியாகிப் போயின. !
பாளும் உயிரைக் கையில் பிடித்து!
பசிவயிற்றோடு!
நாலு கடலிலும் அலைந்து திரிந்தவற்றை!
சிறுகச் சிறுக!
கடல் தின்று தீர்த்தது. !
தப்பித்து நீந்தியவைகள்!
மாற்று நாட்டு அகதிகள் ஆகின. !
இறுதியாய் வானைப் பிளந்து!
மந்தைகளுக்குப் பரிந்துரைக்கப்!
புதிய புதிய!
மேய்ப்பர்கள் நாலாபுறமும் ......!
நானே மீட்பர், நானே மீட்பர்,என!
காதுசெவிடுபடக் கூவிச் செபித்தனர். !
வானத்திலிருந்து உங்கள் மேல் இறங்கிவரும்!
புதிய மேய்ப்பர்களாகிய நாங்கள் புதிய உபாகமத்தை!
உங்களுக்காய் உபதேசிக்கின்றோம். !
உம்மைத் துரத்திய தேசத்தை நாமோ ,!
புழுதியும் மண்ணுமாக்குவோம்.!
அதை விட்டு உங்களை விலக்கிய!
படியால்!
அவர்கள் அழியவென நாங்கள் சபிக்கின்றோம். !
பூமியிலுள்ள!
எல்லா ராஜ்யங்களிலும்!
சிதறுண்டு போன எம் மந்தைகளே!!!!
எங்களை ஆதரித்து ஆலிங்கனம் செய்வதால்!
உங்களை வெல்வீர் - இன்றேல்!
உங்கள் பிணம் ஆகாயத்துப் பறவைகளுக்கும்!
பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்.!
அவைகளை விரட்டு வாரில்லாதோராய் நீங்கள்!
துயரப்படுவீர்கள். !
உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும்!
அந்நிய ஜனங்களுக்கு ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்.!
அவர்கள் உங்களோடு கூட இராமல்!
டிஸ்கோக்களிலும், மதுபானச்சாலைகளிலும் படுத்துறங்குவார்கள்..!
மொழியை அழித்து முகத்தை இழக்கப்போகிற!
அவர்களைச் சிறைப்படச் செய்வோம். !
உங்கள் நிலத்தின் கனியையும்,!
உங்கள் பிரயாசத்தின் பலனையும்!
நீங்கள் அறியாத ஜனங்கள் புசிக்கும் படிக்கு!
நாங்கள் சபிப்போம். !
தப்பிய மந்தைகள் தடுமாறி நடுங்கின!!!!
எங்கள் மேய்ப்பர்கள்.......!
நல்லவர்களா??!
கெட்டவர்களா ??!
விடையறியாது தவித்தன!
தப்பிய மந்தைகள்

வர வர வார்த்தைகள் மீதே

இந்திரன்
வர வர வார்த்தைகள் மீதே எனக்கு !
நம்பிக்கை அற்றுப்போச்சு !
நான் சொல்ல !
மற்றவன் வேறொன்றாய் புரிந்துகொள்ள !
விளக்கம், மறுவிளக்கம் !
விளக்கத்திற்கு விளக்கமெனப் !
புதராய் மண்டி புற்றாய் வளரும் !
வார்த்தைகள் !
தூங்குகிறவன் உடம்பில் !
வெளிச்சத்தால் தட்டி எழுப்பியதுபோல !
வீணாகிப் போச்சு எல்லாம். !
என் ப்ரிய நண்பனே !
என்பதின் பொருள் !
நீ எனக்கு அதிகம் தேவைப்படுகிறாய் !
என்பதாய் இருப்பின் !
வார்த்தைகள் ஏன் இன்னும் !
வழக்கொழிந்து போகவில்லை !
மீன்கள் !
கண்ணாடித் தொட்டிக்குள் துப்பும் !
காற்றுக் குமிழிகளாய் வார்த்தைகள்... !
பஸ்ஸில், பள்ளியில் !
பார்லிமெண்டில் !
படுக்கையறையிலும்... !
வெறுமனே உடைந்து வீணாய்க் கரையும்.... !
வர வர வார்த்தைகள் மீதே எனக்கு !
நம்பிக்கை அற்றுப்போச்சு !
- இந்திரன் !
நன்றி : உரையாடல் கவிதை அனுபவம்