வர வர வார்த்தைகள் மீதே - இந்திரன்

Photo by Sven Finger on Unsplash

வர வர வார்த்தைகள் மீதே எனக்கு !
நம்பிக்கை அற்றுப்போச்சு !
நான் சொல்ல !
மற்றவன் வேறொன்றாய் புரிந்துகொள்ள !
விளக்கம், மறுவிளக்கம் !
விளக்கத்திற்கு விளக்கமெனப் !
புதராய் மண்டி புற்றாய் வளரும் !
வார்த்தைகள் !
தூங்குகிறவன் உடம்பில் !
வெளிச்சத்தால் தட்டி எழுப்பியதுபோல !
வீணாகிப் போச்சு எல்லாம். !
என் ப்ரிய நண்பனே !
என்பதின் பொருள் !
நீ எனக்கு அதிகம் தேவைப்படுகிறாய் !
என்பதாய் இருப்பின் !
வார்த்தைகள் ஏன் இன்னும் !
வழக்கொழிந்து போகவில்லை !
மீன்கள் !
கண்ணாடித் தொட்டிக்குள் துப்பும் !
காற்றுக் குமிழிகளாய் வார்த்தைகள்... !
பஸ்ஸில், பள்ளியில் !
பார்லிமெண்டில் !
படுக்கையறையிலும்... !
வெறுமனே உடைந்து வீணாய்க் கரையும்.... !
வர வர வார்த்தைகள் மீதே எனக்கு !
நம்பிக்கை அற்றுப்போச்சு !
- இந்திரன் !
நன்றி : உரையாடல் கவிதை அனுபவம்
இந்திரன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.