தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

கடைசி கவிதை

ஜதி
நேரம்: மங்கலாகிக் கொண்டிருக்கிறது!
நாள்: நாளைய இதழ்களில், பூக்களின் கசிவுடன் பிரசுரமாகும்!
எந்த நாளைகளும் உறுதியல்ல...!
இதில் நாளை மட்டும் என்ன?!
ஆனால் உறுதியாய் இன்றைக்கு இதுதான் கடைசி கவிதை!
'ஆ' - இரண்டு மாத்திரைகளில் வாயை திறந்து!
'நா' - இரண்டு மாத்திரையில் மொத்தத்தையும் குவித்து!
'நீர்' - இரண்டரை மாத்திரையை குடித்துவிட்டு!
'கனவு' - மூன்று மாத்திரைக்குக் காத்திருக்கிறேன்!
மொத்தம் எத்தனை மாத்திரைகள்? தெரியவில்லை.!
மொத்தத்தில் நடுநிசித் தென்றலே...!
இன்றைக்குப் பின்னிரவில்!
வழக்கமாய் உன்னை வரவேற்கும் விழிகளிரண்டும்!
அநேகமாய் மூடியிருக்கக்கூடும்!
'பழக்கப்பட்ட விழிகள்தானே' - என்றெண்ணி!
சீண்டியெழுப்பப் பார்த்து ஏமாந்துவிடாதே!
நான் ஏமாற்றப் படுவதற்காகவே!
பிறந்திருந்தவன்...!
உன்னை ஏமாற்ற நான் விரும்பவில்லை!
இதன்பின்னும் நீ ஏமாந்து திரும்பிச் சென்றால்...!
நான் முதலும் கடைசியுமாய் ஏமாற்றியது உன்னைத்தான்.!
-ஜதி!
24-11-2005

பதற்றம்.. அலைவு

ந.மயூரரூபன்
01.!
பதற்றம்!
----------------!
காற்றுள் குழையும் இருள்!
ஈரமாய்த் தன்னுயிர் விரித்து!
என் கனவுவெளி மூடிப்பின்னுகிறது!
பகல்களற்ற பொழுதுக்குள்!
விழுந்து கொண்டிருக்கும்!
நினைவுகளின் சொட்டுகள்!
மெதுவாய் என்னுயிர் கரைக்க!
அழுதலையும் இராக்குருவியின்!
பதற்றம் தொற்றித் தொடருகிறதெங்கும்.!
02.!
அலைவு!
----------------!
என்னிலத்து வெளியில் நடக்கிறேன்!
புன்னகையில் தொற்றியிருக்கும்!
பரிச்சயங்களின் முகம்!
ஆழப்புதைந்திருக்க!
சாவீடு முடிந்த மௌனப்படபடப்பு!
எங்கும் நெளிந்தலைந்து விரிகிறது...!
அந்நியனாய்த் தெரியும் என்முகம்!
வீதி முனைகளிலெல்லாம் ஒளிந்துகொள்கிறது...!
முகமற்று எனது வெளியெங்கும்!
நடந்தலைகிறேன்

இலங்கை மண்ணிற்கொரு கடிதம்

மன்னார் அமுதன்
என் இனிய இலங்கை மண்ணிற்கு!
கவிஞன் எழுதும் மடல்!
காதல் மடல்!
கண்ணீரும் சோகமும்!
நிறைந்த கடல்!
கொங்கமலை கீழ்ப்பாயும் அருவி யூற்று!
கொடுங்கோலன், நல்லரசன் ஆய்ந்தா நனைக்கும்!
கார்முகிலும் வளியோடு கூடிமழை!
களையெதுவோ? பயிரெதுவோ? பார்த்தா பெய்யும்!
நீதியோடு நல்லாட்சி நீயே செய்ய - எம்!
நிறைபாரம் என்காமல் தாங்கிக் கொள்ள - சரி!
நிகருரிமை தருவதற்குத் தயங்கும் சூழ்ச்சி !
தலைமைக்கு நிச்சயமாய்த் தருமே வீழ்ச்சி!
பெற்றெடுத்தாய் சில மக்கள் கோடி!
பேணி வழர்த்தாய் தினம் ஆடிப் பாடி!
காணி நிலச் சண்டைலுன் செல்லப்பிள்ளைகள்!
வாட்டி வதைக்க நாமா கிள்ளுக்கீரைகள்!
உணர்வுகளை, உறவுகளைப் புலத்தில் நீக்கி!
ஓடித்தான் போய்விட்டோம் சுயத்தை நோக்கி!
கந்தானைச் சந்தி வரை தமிழ் இரத்தம் ஓடுகையில் - உன்!
முந்தானை மடிப்புகளால் நீயதனைத் துடைத்தாயோ?!
பெருந்தன்மை கொண்டதம்மா தமிழன் நெஞ்சம்!
தேடிச்சென்று தீர்த்ததில்லை என்றும் வஞ்சம்!
உரிமைகளைக் கேட்கின்றோம் தரத்தான் பஞ்சம்!
உடைவாளைச் சாணையிட்டால் எவர்க்குமில்லை மஞ்சம்

அமைதியின் அரசிக்காக

வே.மணிகண்டன்
அடிக்கடி!
செல்லமாய்!
நீ என்!
தலையில் கொட்டுவதை!
நினைவு படுத்தியது…….!
சற்று முன்!
பெய்த!
ஆலங்கட்டி மழை.!
நாளுக்கு நாள்!
உன்னுடைய!
சகதோழிகளுக்கெல்லாம்!
வயது கூடிக்கொண்டே போகிறது!
ஆனால்!
உனக்கு மட்டும்தான்!
அழகு கூடிக்கொண்டேபோகிறது.!
உனக்கு பின்னால் ஒளிவட்டம்!
எதுவும் தோன்றவில்லை!
கையில் ஆயுதங்களும்!
எதுவும் இல்லை!
ஆபரணங்களின் ஆதிக்கமும்!
உன் திருமேனியில் இல்லை!
எனினும்!
நீ!
என் காதலின் கடவுள்!
நிறைய பேசுவேன்……….!
உன்!
அருகில் மட்டும் !
ஊமையாகிப்போகும்!
நான்.!
மறுபடியும்!
எங்களுர்!
விழாக்கால !
இரவுகளை நினைவுபடுத்துகிறது!
உன் புன்னகை.!
என்!
அருகிலேயே!
நீ இருக்கிறாய்………..!
ஏழு கடலையும்!
ஏழு மலையையும்!
தாண்டி!
சொர்க்கம் இருப்பதாய்!
தவறாய் கதை சொன்ன !
தமிழ் ஐயாவை!
என்ன செய்வது.!
அந்த!
பார்வையற்ற!
தொழுநோயாளியின்!
கரம் பிடித்து!
சாலையைக் கடக்க !
நீ உதவியபொழுதுதான் !
என் சந்தேகம்!
உண்மையானது………!
நான் காதலிப்பது தேவதையைத்தான்.!
வசிகரிக்கும் வார்த்தைகள் !
கவர்திழுக்கும் கற்பனைகள்!
பாரட்டி உயர்த்தும் பொய்கள்!
இவை எதுவும்!
என் கவிதைகளில் இல்லை!
உன்மேல் கொண்ட!
உண்மை காதலைத்தவிர…………!
என்!
மரணத்திற்கு பிறகும்!
உன்னையே!
சுற்றிக்கொண்டிருக்கும்!
என் ஆன்மா!
என்னைப்போலவே……..!
!
-மாமதயானை!
வே.மணிகண்டன்;!
முனைவர்பட்டஆய்வாளர்!
சுப்பிரமணியபாரதியார் தமிழியற்புலம்!
புதுவைப்பல்கலைகழகம்!
அலைப்பேசி:9786853956

அவளும் அவன் கவிதையும்

பிறாபுல் சீலீடர்
அறிந்து கொண்டீர்களா!
அவள் மாறிவிட்டாள் என்பதை.!
அந்தக் கவிஞனால் கூட!
அவளை அடையாளம் காண!
முடியவில்லை.!
அவள்!
பிறர் அறியாமல்!
மறைவாய்!
இந்த உலகத்தைச்சுற்றி வருகிறாள்.!
மனித மனங்களின்!
மூலைமுடுக்குகளில்!
நுழைந்து!
ஆழம் பார்க்கிறாள்.!
அவள் சுமந்து வரும்!
உலகளாவிய செய்திகளில்!
அதிரடி மாற்றங்களில்!
கவிஞனின் கவிதை!
தன்னை!
உயிர்ப்பித்துக் கொள்கிறது.!
கவிதைக்கு முதலிடம் தர!
மறுத்தவர்களையும்!
முழுமையாக !
ஆட்சி செய்கிறது!
கவிதையின் ராஜாங்கம்.!
கவிதை!
அவளைப் பலியாடாக்கிவிட்டது.!
தன் தலையில்!
கைவைத்துக் கொண்ட!
பத்மாசுரனாய் அவள்.!
வாதங்களிலும்!
இசங்களிலும்!
கிழிந்து தொங்குகிறது!
அவள் கவிதையுடல்.!
அவள் இருக்கையை!
அவளே அசைத்துப்பார்க்கிறாள்.!
அவளுக்கான அவள் முகத்தை!
கவிதை!
ஒதுக்கித்தள்ளிவிட்டதோ!
நிலத்தைப் போல!
உறுதியான!
அவள் ஆளுமையை!
கவிதை விரும்புவதில்லை.!
காற்றைப் போல!
அவளிருக்கட்டும்.!
உலகத்தைச் சுற்றிவரட்டும்.!
அவன் கவிதைகள் மட்டுமே!
அவளை அடையாளம் காணட்டும்.!
அவளுக்கும்!
அவன் கவிதைகளுக்குமான உறவு!
தலைமுறைகளாக!
தொடரும் கதை.!
கவிதை..!
அதுதான் !
அவள் பலகீனம்.!
அதுதான்!
அவள் நாடி நரம்புகளின்!
உயிர்த்துடிப்பு.!
அதனால்தான்!
கவிஞனின் அருகாமையில்!
எப்போதும்!
உயிர்த்துடிப்புடன் அவள்.!
மற்றபடி!
அவனும் !
பல்வேறுமொழிகளுக்கு நடுவில்!
வந்துப்போகும்!
ஒரு வலைப்பதிவு.!
அவ்வளவுதான்.!
மொழியாக்கம் : புதியமாதவி.!
prafull shiledar 's marathi poem!
(ref: LIVE UPDATE - An anthology of Recent Marathi poetry !
Pg 144)

சாக்கடை

ஜெஸ்வந்தி
அன்பினால் அரவணைத்து!
கண்போல் காத்திருந்தேன் !
என்னவன் நீயென்று !
உன் உயிருடன் கலந்திருந்தேன் !
ஆசையால் வசப்பட்டு !
அந்நியனாய்ப் போய்விட்டாய் !
பித்துப் பிடித்துப் போய் !
பின் முதுகில் குத்தி விட்டாய். !
கண்களுக்குள் கைவிட்டு !
கரு விழியைக் கொய்து விட்டாய் !
நெஞ்சுக்குள் வெடி வைத்து !
வஞ்சகம் செய்து விட்டாய். !
சமுத்திரமாய் நானிருக்க !
சாக்கடைக்குள் ஏன் விழுந்தாய்? !
சதியென்று நீ அறிந்தும் !
மதி கெட்டு ஏன் போனாய்.?

காதலினால் காதல்

ஷக்தி
மெய்யின்ப முக்திநிலை!
நீயாக, உன்னிடத்தில்.!
அதற்கேங்கும் பக்திநிலை!
நானாக, என்னிடத்தில்.!
பார்வையில் எரிக்காதே, பெண்ணே!
இது படைத்தவனின் பாரபட்சம்.!
ஆனந்தப்புதையலை ஆடைக்குள் ஒளிக்கிறாய்,!
ஆறாத ஆசையையும் எனக்குள் விதைக்கிறாய்.!
மாதுரச போதை கொண்டு,!
உன் சுவாசத்தை நெருங்குகிறேன்- நீயோ!
பாதரச பார்வை தந்து தீண்டாமை பேசுகிறாய்.!
உரசினால் சத்தம் போடுகிறாய் பலநேரம்- எனினும்!
உரசாமலே முத்தம் போடுகிறாய் சிலநேரம்.!
பாற்கடல் பருகவைத்தென்னை நரகமும் தள்ளுகிறாய், எனினும்!
சொட்டுத்தேன் சிந்திவைத்து சொர்க்கமும் தள்ளுகிறாய்.!
நொடிக்கொருமுறை நம் இடைவெளி குறைப்பேன்.!
அடிக்கொருமுறை உன் இடைதொட முயல்வேன்,!
இசையாமல் வசைவாய் பலநேரம், எனினும்!
இசைந்தெனக்கு இசையாவாய் சிலநேரம்.!
காமம் கேட்கவே, காதல் கொடுக்கும்!
கயவன், நான் என்ற போதும்,!
காதல் கேட்கவே, காமம் கொடுக்கும்!
அபலையானவள் நீ.!
விளக்கணைக்கும் என் இரவுக்காதல்,!
வீழ்ந்தேதான் போனது காதலி,!
விளக்கேற்றும் உன் இதயக்காதலுக்குள்.!
நம் காதலில் இப்போது,!
வெற்றி உனக்கு!
தோல்வி எனக்கு

ஏன் இந்த பாராமுகம்?

இரா சனத், கம்பளை
டில்லிப் பெண்ணுக்காக!
குரல் கொடுப்பவர்கள்!
ஈழப் பெண்களை!
மறந்தது ஏன்?!
கற்பிலும் ஏன் இந்த!
பாரபட்சம்!
ஒரு சிப்பாயின் தலைக்காக!
போராடும் பாரதம் !
ஈழப் படுகொலையை!
பார்த்து இரசித்தது ஏன்?!
அழுத்தம் என் பெயரில் !
இலங்கைக்கு முத்தம் கொடுக்கும்!
இந்தியாவை இனியும் நம்பினால்!
ஈழத் தமிழருக்கு விடிவு கிட்டுமா? !

முகநூல்.. இக்கரைக்கு..என்ன..காதல்

ந.ஜெகதீஸ்வரன், காட்டுப்புத்தூர்
முகநூல் காலம் .. இக்கரைக்கு அக்கரை ..என்ன சாதித்தோம்? ..காதல் தோல்வி !
01.!
முகநூல் காலம் !
----------------------------!
ஒத்த கருத்துடையவர்கள் !
உலகில் எந்தமூலையில் இருந்தாலும் !
நட்பு பாராட்ட !
ஒரு நிமிடமே ஆகிறது!. !
02.!
இக்கரைக்கு அக்கரை !
-------------------------------!
கோவணம் கட்டிக்கொண்டு !
வயலில் வேலைசெய்யும் கிழவனை !
ஆச்சரியமாய் பார்த்து !
புகைப்படம் எடுத்துதள்ளுகிறான் !
டவுசர் போட்டிருக்கும் வெளிநாட்டுக்காரன்! !
03. !
என்ன சாதித்தோம்? !
---------------------------!
பசுமை நிறைந்த காட்டை !
பகையென நினைத்து வெட்டினோம்! !
வானுயர்ந்த மரங்களுக்கு பதிலாய் !
வானமுட்டும் கட்டிடங்கள் கட்டினோம்! !
வீட்டின் கொல்லையில் கத்தும் !
கிளியை துரத்திவிட்டு !
தொலைக்காட்சியில் தொலைந்து போனோம்! !
நம் குழந்தைகள் !
செல் தீர்ந்து போன பொம்மைகளோடு !
விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள் !
தனிமையாய்!. !
04. !
காதல் தோல்வி !
----------------------!
மாலை வேளையில் தூக்கியெரியும் !
நீ சூடிவாடிய மல்லிகையுடன் !
என்காதலும் குப்பைக்கு போனதை !
என்னால் இன்னும் நம்பமுடியவில்லை

ஒன்றான மழலையும் முதுமையும்

காயத்ரி மாதவன்
விளங்கா மொழியில் புலம்புகையில்...!
தூக்கத்தில் மென்சிரிப்பை உதிர்கையில்...!
இறைவனை தொழும் முகத்தில்!
இறைவனை கொண்டு மிளிரும் அழகில்...!
புதியதை கண்டு வியக்கும் கண்களில்...!
பயத்தில் விரல் பிடித்து நடக்கையில்...!
வலுவில்லா கைகள்!
தொட்டு கைதுசெய்கையில்...!
உறதியான பிடிவாதத்தில்...!
நான் தாமதித்தால்!
கவலையுறும் மனதில்...!
கடுகளவு இன்பத்திலும்!
அணைக்கட்டா பொக்கைவாய் சிரிப்பில்...!
கண்ணீரை ஆயுதமாக்கும் கலையில்...!
நான் என்றும் தாய் தான்!
என் மகளை கொஞ்சும் பாட்டியையும்!
மகளைப்போல எண்ணுகையில்