அம்மா !உன் நினைவுகள் உன் நினைவுகள் படாத ஒரு!
பொருளை வீட்டில் என்னால்!
காட்ட முடியாது அம்மா!!
நீ கட்டிய சேலை என்!
தலையணையாக மாறியது.!
நீ என் கையைப் பிடித்து!
கற்றுத் தந்த மொழிகள்!
இன்று கவிதைப் படைக்கிறது!
நீ முதன்முதலில் வாங்கிய!
உப்புக்கான டப்பாவைப்!
பார்க்கையில் உன் கைகளின்!
சுவை இன்றும் நாவில் நிற்கிறது!
நீ சொல்லித் தந்தபடி நான்!
விதைத்த கத்திரி இன்று!
நம் வீட்டுக் குழம்பில்!
கமகமக்கிறது.!
இப்படி வீட்டில் நீ கட்டிய!
பந்தலில் வளர்ந்த அவரக்காய்!
மல்லிப் பூ.!
வளருமா? என்று நினைத்த வாழைமரம்!
என எல்லாவற்றையும் நம்!
வீட்டிற்கு வருபவர்களிடம் நான்!
காட்டுகிறேன்.!
உன் அம்மா எங்கே? என்பவர்களிடம்!
இதோ என் அம்மாவென்று!
உன் புகைப்படத்தைக் காட்ட!
வைத்துச் சென்று விட்டாயே!!
அம்மா !!
-தமிழ் ராஜா
தமிழ் ராஜா