தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

ஜெபங்களின் மீதெழுகிற அழுகை

தீபச்செல்வன்
ஜெபங்களின் மீது அழுகை எழுகிறது!
ஜெபமாலைகளின் பேரணியில்!
பைபிள்களை வாசித்தபடி!
திருப்பாடல்களை பாடுகையில்!
கொலைசெய்யப்பட்ட பறவைகள் வந்து போயின.!
தேவாலயங்களைவிட்டு!
வெளியில் வருகிறபோது!
சிலுவையை சுமந்து திரிகிறதாய்!
கடவுள் சொல்லுகிறார்.!
வீட்டுக்கும்!
தேவாலயத்திற்கும் இடையில்!
பாடாய்!
கிடக்கின்றன சிலுவைகள்.!
ஆணிகள் அறையப்பட்ட!
மனிதர்களின்!
முகங்களில் வழிகிறது கடவுளின் இரத்தம்.!
சபிக்கப்பட்ட வாழ்விலிருந்து!
மீளுவதற்காய் ஜெபித்தீர்கள்!
அழகிய தோட்டம் பற்றி கனவுடன்!
அழைத்து வரப்பட்ட குழந்தைகள்!
ஆலயத்தை சூழ!
விளையாட ஏங்குகிறார்கள்!
இந்த அழுகை வழியும்!
ஜெபங்களில் சாத்தானுக்கு எதிராய்!
சிலுவையுடன் செல்வதை நான் கண்டேன்.!
!
-தீபச்செல்வன்!
21.09.2008

கண்களைப் பற்றி எழுதுதல்

துவாரகன்
இந்தக் கண்களுக்கு எப்போதும் கனவுகள் பலவுண்டு.!
சிலை செதுக்கும் சிற்பியும் !
இறுதியில் திறப்பதும் கண்களைத்தான்.!
கடவுளும் கண்களைத் திறந்தால்!
கருணை பொழிவார் என்கிறார்கள்.!
நாங்கள் எப்போதும் ஒருவர் கண்களை !
மற்றவர் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.!
சிரிக்கும் கண்கள்!
எரிக்கும் கண்கள்!
கருணைக் கண்கள்!
கயமைக் கண்கள்!
கண்காணிக்கும் கண்கள்!
கண்டுகொள்ளும் கண்கள்!
எல்லாம் கண்கள்தான்!
பார்வையில்தான் அப்படி என்ன வித்தியாசம்?!
வானில் மிதக்கும் வெண்ணிலாபோல்@!
இந்த உலகெங்கும் மிதந்து கொண்டிருக்கின்றன !
எல்லாக்கண்களும்.!
எல்லார்மேலும்.!
கண்கள் இல்லாது போனால்?!
தடவித் தடவி தடுக்கி விழவேண்டியதுதான்.!
போகும் இடங்களில் மிகக் கவனமாக!
மற்றவர் கண்களைப் பார்த்துக் கொள்ளவேண்டும்.!
சந்திகளில் வீதிகளிலும்கூட !
கண்களில் அக்கறை கொள்ளவேண்டும்.!
கண்களை மட்டுமா?!
கைகளை, சைகைகளை,!
சிந்தனையை வீட்டில் கழற்றி வைத்துவிடவேண்டும்.!
தந்திரமும் தப்புதலும் மிக முக்கியம்.!
இல்லாவிட்டால்!
போகிற போக்கில் கண்களைப் பிடுங்கி விட்டு!
வீதியில் விட்டு விடுவார்கள்.!
வெள்ளைப் பிரம்புகூடத் தரமாட்டார்கள்.!
யார் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன?!
இலாப நட்டத்தை யார் பார்க்கிறார்கள்.!
அவரவர்… !
அவரவர் பாடு.!
சும்மா போ.!
கண்களாவது பிரம்பாவது.!
-துவாரகன்

விழிகளில் வழியும் ஏக்கம்.. எனக்கே எனக்கானதாக மட்டும்

எம்.ரிஷான் ஷெரீப்
01. விழிகளில் வழியும் ஏக்கம்..!
---------------------------------!
உனது உயிர்!
போகும் பாதையைப்!
பார்த்த படியே!
விழிகள் திறந்தபடி!
உயிர்விட்டிருந்தாய் !!
ஏழு வானங்களையுமது!
எந்தத் தடைகளுமின்றித்!
தாண்டிச்சென்றதுவா...?!
திறந்திருந்த வாய்வழியே!
இறுதியாக என்ன வார்த்தையை - நீ!
உச்சரிக்க நினைத்திருந்தாய்...?!
நீ!
நிரபராதியோ...!
தவறிழைத்தவனோ...!
உயிர்விடும் கணம்வரை!
எப்படித் தாங்கிக் கொண்டாய்!
அவ்வலிகளை ?!
உன் நகங்கள்!
ஒவ்வொன்றாக பிடுங்கப்பட்டிருந்தன .!
நீ பிறந்தவேளையில்!
ஒரு மெல்லிய பூவிதழ்போல்!
அவை இருந்திருக்கக்கூடும் !!
உன் உடம்பு முழுக்க!
வரி வரியாய்!
காயங்கள்...வீக்கங்கள்...!
சிறுவயதில் நீயும்!
சிறு சிராய்ப்புக்கு அழுதபடியே!
எச்சில் தடவியிருப்பாய் !!
என்றபோதிலும்!
எதுவுமே சொல்லாமல்!
உயிர் விட்டிருந்த உனது!
விழிகளில் மட்டும்!
எஞ்சியிருக்கிறது இன்னும்!
ஏதோ ஒரு ஏக்கம்...!
ஏதோ ஒரு தாகம்...!
!
02.!
எனக்கே எனக்கானதாக மட்டும் ..! !
---------------------------------------------!
!
உடைந்த வானத்தின் கீழ் !
நிலவு சலித்தனுப்பிய !
வெளிச்சத்தினூடு , !
உறுதியற்ற தேசத்தினொரு மூலையில் !
உடையாத வெட்கத்தை !
உறுதியான இறகுகளால் போர்த்தியபடி !
முன் காலமொன்றில் !
அழகிய வண்ணத்துப்பூச்சிகள் சூழ !
தேவதையாக நான் நின்றிருந்தேன் !
வேட்டைக்காரனாக நீ வந்தாய்; !
என்னையும், வெட்கத்தையும் !
மூடியிருந்த சிறகதனைக் !
கத்தரித்துக் காதில் சொன்னாய் - இனிக் !
காலம் முழுதும் !
உன் சிறகுகள் மட்டுமே !
போதுமெனைச் சுமக்கவென !
அழகிய வாக்குறுதிகள் தந்தாய் !
அன்றிலிருந்துதான் !
உனது வலிமை மேலோங்கிய !
வேட்டைக்கரங்கள் , !
எனது சுவாசங்களையும் !
சிறிதுசிறிதாகக்கொடுக்கத்தொடங்கின !
எனக்குப் பல்முளைத்த அன்றின் இரவில் !
தனியாக மெல்ல முடியுமினியென்றேன் , !
உனது அத்தனை அகோரங்களும் !
ஒன்றாய்ச் சேர்ந்து !
அன்றுதான் என் உதடுகளைத் !
தைக்க ஆரம்பித்தாய் ! !
எழுதவேண்டுமென்ற பொழுதில் !
பேனாமுனை ஒடித்துச் சிரித்தாய் , !
வரைவதற்கான வண்ணங்களைக் !
கலந்த விரல்களை !
வளைத்துச் சிதைத்தாய் , !
பாடலுக்கான எண்ணமெழும் முன்னமே !
நானூமை என !
சொல்லிச் சொல்லி ரசித்தாய் !
இனிக் காலங்கள் !
எனக்கே எனக்கானதாக மட்டும் இருக்கட்டும் !
இந்த வெடிப்புற்று வரண்டு , !
கதிர்களேதுமற்ற வயல்வெளியில் !
நேற்றிலிருந்து புதிதாக முளைக்க !
ஆரம்பித்திருக்கும் பற்களால் !
என் தீய கனவுகளை மென்று விழுங்கியபடி , !
உச்சரிப்புப் பிழைகளோ, சுருதி விலகலோ !
சுட்டிக்காட்ட யாருமின்றி ... !
ஒரு பக்கம் எனது கவிதைகள் , !
மறு பக்கம் எனது வண்ணங்கள் !
எனத் துணையாய்க் கொண்டு !
பாடிக்கொண்டிருக்கிறேன் ; !
ஆனாலும் , !
என்னை விதவையென்கிறீர்கள் நீங்கள்! !
- எம்.ரிஷான் ஷெரீப், !
மாவனல்லை, !
இலங்கை

பிச்சை.. கற்பிழந்த கதை.. அடிமைகளின்

மன்னார் அமுதன்
01.!
பிச்சை!
------------ !
பிச்சைக்காரர்களுக்கோ!
போர்!
இடப்பெயர்வு!
ஊனம்!
இயலாமை!
கந்தலுடை மனைவி!
பசியோடிருக்கும் மகன்!
பருவமெய்திய ஏழாவது மகளென!
ஆயிரம் காரணங்கள்!
பிச்சையெடுக்க!
நடத்துநர்களுக்கோ!
ஒன்றே ஒன்று தான்!
“சில்லறையில்லை”!
!
02.!
கற்பிழந்த கதை!
----------------------- !
விடுமுறையில் கூட !
வேலைக்குச் சென்றாய்...!
உணவருந்தா விட்டாலும்!
உதட்டுச் சாயம் பூசினாய்!
அம்மாவுடன் சண்டைபிடித்து!
அலங்கோலமாய் ஆடையணிந்தாய்!
காலம் தாழ்த்தி !
வீடு வந்து கோயிலென்றாய் !
கண்டிக்கும் போதெல்லாம்!
யாரோ அண்ணண்களோடு!
ஒப்பிட்டாய்!
ஆண்நட்பு, பெண்ணுரிமை!
அத்தனையும் பேசிய நீ!
அதையும் கூறிவிட்டல்லாவா!
அணைந்திருக்க வேண்டும்!
அதான்,!
“நீ கற்பிழந்ததையும் - உன்!
கடவுள் கைவிட்டதையும்”!
!
03.!
“அடிமைகளின் சாதனைகள்” !
-----------------------------------------!
பெரும்பாண்மையான காலங்களில்!
நாம் அடிமைப் படுத்தப் பட்டிருக்கின்றோம்!
பெரும்பாண்மையினரால்...!
உணர்வுகள் !
ஒடுங்குமளவிற்கான அடிகள்!
உள்ளும் புறமும்!
இருப்பினும்... !
இருப்பினும்...!
மார் தட்டிக் கூறுவேன்..!
மனித உரிமைக்காய் முழங்கும்!
எம்மினத்தால் தான்!
ஊருக்கு ஒதுக்குப் புறமாய் !
இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது!
“இரட்டைச் சுடுகாடு”

முடிவுரை

சின்னபாரதி
கவி ஆக்கம்: சின்னபாரதி!
உலக பசிக்கும்!
உலகப் போருக்கும.;!
ஏகாதி பத்தியத்திற்கும்!
எல்லை கோட்டுக்கும்.!
தீவிரவாதத்திற்கும்!
தீண்டாமைக்கும.;!
மதத்திற்கும்!
மதம் கொண்ட சாதிக்கும்.!
இல்லாமைக்கும்!
கல்லாமைக்கும்.!
தனியுடமைக்கும் - மரண!
தண்டனைக்கும்!
!
உலகப் பெரியோரின் பேனாக்களே! எமுத்தாணிகளே!!
ஓன்று கூடுங்கள்.!
முன்னின்று!
முடிவுரை எழுதுங்கள்.!
!
கவி ஆக்கம்: சின்னபாரதி

கிழிந்த நோட்டு

முத்தாசென் கண்ணா
இடது வலமாக மடித்தேன்!
குறுக்கு நெடுக்குமாக மடித்தேன்!
ஓரங்களை மடித்து !
நடுவில் விரல் வைத்துப் பார்த்தேன்!
எப்படி மறைத்தாலும் !
மறைவதாய் இல்லை !
பத்து ரூபாய் நோட்டி்ன் கிழிசல்!
நேராக மடித்து நிமிர்த்து நீட்டினேன்!
கொஞ்சம் கூட சலித்துக் கொள்ளாமல் !
சீட்டைக் கி்ழித்தார் நடத்துனர்!
எப்படியோ ஏமாற்றிவிட்டேன் என்று!
கர்வப்பட எத்தனிக்கையில்!
சில்லரையாக வந்து சேர்ந்தது!
அதைவிடக் கிழிசலான!
ஐந்து ரூபாய் நோட்டு.............................. !
-முத்தாசென் கண்ணா

கண்

கலீல் கிப்ரான்
கண் ஒரு நாள் சொன்னது..!
பாலைவனத்திற்கு அப்பால்!
ஒரு பனி மூடிய மலை!
தெரிகிறது பாருங்கள்..!
எவ்வளவு அழகாக இருக்கிறது..?!
காது கொஞ்ச நேரம்!
உன்னிப்பாய்க் கேட்டு விட்டுப்!
பிறகு சொன்னது..!
மலையா?? எந்த மலை??!
எனக்கு எதுவும் கேட்கவில்லையே..!!!
கையும் பேசியது..!
என்னால்!
எவ்வளவு முயன்றும்!
அந்த மலையைத் தொட முடியவில்லையே..!
மலை நிச்சயம் இருக்கிறதா..??!
மூக்கு உறுதியாகச் சொன்னது..!
மலை எதுவும் கிடையாது..!
எனக்கு எந்த வாசனையும் தெரியவில்லை..!!!
கண் வேறு பக்கமாய்த்!
திரும்பிக் கொண்டது..!
மற்ற உறுப்புக்களெல்லாம்!
தங்களுக்குள் பேசிக் கொண்டன..!
இறுதியாய் ஒரு முடிவுக்கு வந்தன..!
கண்ணில் ஏதோ!
கோளாறு ஏற்பட்டு விட்டது

தும்பைப்பூ மேனியன்

பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்)
எங்கள் ஊரில்!
எங்கள் உறவில்!
எனக்குத்தெரிந்து!
எத்தனையோபேர் இன்றில்லை!
ஆசை அம்மாயியும்!
அவர்களுள் ஒருவர்!
ஒருகணம்!
எல்லோரையும் நினைக்கையில்!
எப்படி அந்த!
வெள்ளைநாயும்!
நினைவுக்கு வருகிறது!!
மாமா!
வளர்த்தநாய் அது!
இப்போது!
மாமாவும் இல்லை!
வெள்ளைநாயும் இல்லை!
அப்படியொரு வெள்ளையில்!
அது இருந்தது!
எவ்வளவு அர்ப்பணிப்பு!
அதற்கு இருந்தது!!
எவ்வளவு கண்ணியத்தை!
அது கடைபிடித்தது!!
எப்படிப்புரிந்துகொண்டு!
நாகரீகம் காத்தது!!
அதற்காகவும்!
நாங்கள்!
நான்!
எங்களுக்காகவும் அது!
அழத்தவறியதில்லை!
அதன்!
நாசியோர சிவப்பு!
ரோஜா இதழைத்தான்!
சொல்லும்!
அழகாகவும் இருந்து!
அழகாகவும் வாழ்ந்து மறைந்த!
அந்தத்தும்பைப்பூ மேனியனை!
இப்போது!
என் நினவுக்குக்கொண்டுவந்தது!
வெறும்மேனியன்!
வைக்கம் பஷீரின்!
ஒரு விசாரணைதான்!
-பிச்சினிக்காடு இளங்கோ( சிங்கப்பூர்)

அவன் , அவள் , இறைவன்

சத்தி சக்திதாசன்
சக்தி சக்திதாசன்!
அவள்:!
கண்ணும் கண்ணும் உத்தரவின்றிக்!
கலந்ததாலே கனிந்த காதல் மலர்!
காளையவன் கசக்கியதால் கருகியின்று!
கண்ணீரில் கரைந்து மறைந்ததம்மா!
அவன் :!
நானொரு சுதந்திரப்பறவையடி!
போகின்ற வழியில் கொஞ்சம்!
பொழுதோடு இளைப்பாற - உன்!
மனத்தோட்டம் அமர்ந்தேண்டி!
அவள் :!
கன்னியரின் வாழ்க்கையோடு!
காளையர்கள் ஆடும் சடுகுடு விளையாட்டு!
காகிதத்தில் எழுதுகையில் காதலது!
காவியமாய் மலர்வதுண்டு!
அவன் :!
பருவத்தின் தேரோட்டம்!
பாவையுந்தன் உடலாகும்!
பார்த்தவுடன் பற்றிக் கொள்ளும்!
காதலது நெருப்பாகும் !
அவள் : !
தாய் சொல்லைக் கேட்கவில்லை!
தந்தை தன்னை மதிக்கவில்லை!
தானாக போய்விழுந்தேன் மீனாக!
தவிக்கின்றேன் வலையிலின்று!
அவன்:!
மனவாழ்க்கை வேறு!
மணவாழக்கை வேறு!
பணமுடைய மங்கையர்க்கு!
இரண்டுமே வாய்ப்பதுண்டு!
அவள்:!
விதியென்று சொல்ல மாட்டேன்!
வினையென்று கருதமாட்டேன்!
வாழ்க்கையிலே வஞ்சியர்க்கு!
வந்த நல்ல பாடமென்பேன்!
அவன் :!
காதலிப்பது எந்தன் உரிமை!
நானோ என் பெற்றோர் உடமை!
வாலிபத்தின் வனப்பில் உன்னுடன்!
விளையாட்டுக் காதலடி!
அவள் :!
போதுமிந்தப் பொல்லாத வாழ்க்கை!
போலி மனிதர் முகத்திரையின் வேஷம்!
பாவையெந்தன் வாழ்கையினி நல்ல!
பாடமாக மங்கையர்க்கு இருக்கட்டும்!
இறைவன் : ( சிரிக்கின்றான்)!
அவள் போட்ட கணக்கொன்று!
அவன் போட்ட கணக்கொன்று!
பெற்றோரின் கணக்கொன்று!
கூட்டிக் கழித்தால் அனைத்தும்!
கூத்தாடிகளின் கூடாரம்

அவர்கள் சாவதற்கு

பாண்டித்துரை
சாவதற்கு அவர்கள்!
தயாராகவே இருக்கிறார்கள்!
வன்புணர்சிக்கு உட்படுத்தி!
கொட்டடிக்குள் அடைபடுவதிலிருந்து!
கொத்து கொத்தாய் வீழும் குண்டால்!
குறையும் மனிதத்தை எதிர்த்து!
சகோதர நாடு தரும்!
சாக்கடை முகாம் கடந்து!
சாவதற்கு அவர்கள்!
தயாராகவே இருக்கிறார்கள்!
தொல்லை தரும் வெள்ளை வேன்!
வெள்ளை உடை மனிதர்கள்!
தொடரும் சோதனைச் சாவடி!
இல்லா தேசம் வேண்டி!
சாவதற்கு அவர்கள்!
தயாராகவே இருக்கிறார்கள்!
உண்ணா நோன்பிருந்து!
தினம் ஒருவராய் தீக்குளித்து!
போராளி உடை தரித்து!
மூப்பை கண்டடைந்த பின்!
சாவதற்கு அவர்கள்!
தயாராகவே இருக்கிறார்கள்