அடிமை போல ஆனேன் உன்னால்!
ஒவ்வொரு முறையும்...!
பிரிய முடியவில்லை உன்னை...!
நீ என்னை அணு அணுவாக!
கொல்வது தெரிந்தும்...பிரிய முடியாமல்!
வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்வுகளிலும்!
துணையாய் இருந்து கொண்டு...!
இதயத்தையும்...சுவாசப் பையையும்!
ரணமாக்கினாய்...இப்பொழுது உன்னை!
பிரிய தயாராக!
இருக்கிறேன்...முடியவில்லை!
மறக்க!!
உனை சுவாசிக்கும் நேரங்களில் உலகையே!
மறந்த நாட்கள் அதிகம்...!
போய் வா! நாளை சந்திப்போம்!...!
இவ்வாறாக நாட்களை கடத்தி!
கொண்டு! ஏக்கத்துடன் உனை நினைத்து!!
காதலைப் பிரிந்த போது கூட!
இந்த வலி தெரியவில்லை....!
உணர்கிறேன்! உனைப் பிரிந்த சில நிமிடங்களிலே!!
இரு நிலைகளும் ஒன்று தான்!!
ஒன்றை இழந்தால் தான்!
மற்றொன்று!
கிடைக்குமாம்..!
எதை இழந்து எதை கிடைக்க!!
அய்யா.புவன்
அய்யா.புவன்