எங்கள் வீடு - s.உமா

Photo by joel protasio on Unsplash

ஆண் பிரசவித்த !
பெண் இவள்.!
ஆண்டாண்டு காலமாய்!
இவளின் ஆளுமைக்கு!
அஸ்த்திவாரமிட்டார்!
ஆழமாய்... !
ஒவ்வொரு கல்லாய் வைத்து!
கொஞ்சம் கொஞ்சமாய்!
முன்னேறி!
நிமிர்ந்து நிக்க வைத்தார்!
கண்டார் கண்படும்!
கொள்ளை அழகாய்... !
பிறகு!
கட்டிக்கொடுத்துவிட்டார்!
எங்களுக்கு... !
எங்கள்!
குடும்ப விஷயம்!
வெளி கேட்காமலும்!
குளிரும் மழையும்!
உள் தெரியாமலும்!
எங்களை!
ஒன்றாக்கி !
அணைத்துச் செல்கிறாள்!
இவள்!
இன்று !
எங்கள் கொண்டாட்டங்கள்!
துயரங்கள்!
எல்லாம் !
இவள் மடியில் !
எங்கள் பரம்பரைகள்!
இவள்!
காலடியில்
s.உமா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.