காலம் கடந்து போச்சு.. நட்பு அரசியல் - தீபா திருமுர்த்தி

Photo by FLY:D on Unsplash

01.!
காலம் கடந்து போச்சு !
----------------------------!
ஆடிப் பட்டம் !
தேடி விதைப்போம் !
மணல் மேடு பார்த்து !
மடி ஏந்தி வந்து !
பணங்கொட்டை !
குருத்து கண்டு !
கிழங்காகுமுன் !
யாரும் அறியாது !
கொட்டை பிடுங்கி !
வெட்டி தின்போம் !
குச்சி செருகி !
ஐஸ் கிரீமாய் !
காட்டி கொடுத்துவிடும் !
பல் விழுந்த கத்தி !
காலங்காலமாய் கரும்பு வெட்டி !
கடன் தீர்த்ததால் !
கை ஓங்கி வரும் !
அப்பாவின் தொப்பைக்குள் !
விரல் விட்டால் !
சிரித்துப் போகும் !
களத்துமேடே !
சின்னதாய் அப்பாவும்! !
கார்த்திகை ஆனால் !
கிழங்கு பிடுங்கி !
சுள்ளி பொறுக்கித் தீமூட்டுவோம் !
குதூகலத்தில் !
மறந்தே போய்விடும் !
அண்ணனின் 'மெஸ்பில்லும்' !
'ஹாஸ்டல் பீசும்' !
இந்த வருடம் !
மாசியில் வந்திறங்கும் !
அண்ணனுக்கு காத்திருந்து !
சேரித்தே போனது !
வெத்தள வள்ளியும்! !
ஆயா உடனான உரையாடலில் !
திரும்பிப் பார்க்கிறேன்.... !
பங்குணியில் இருந்து !
பனங்கிழங்கை !
வயிற்றுப் பிள்ளைக் காரியாய் !
'ஆசைக்கு ஒன்று கூட தின்னவில்லை'! !
02.!
நட்பு அரசியல்...! !
------------------------!
அசுத்தமாகிக் கிடக்கிறது !
நட்புவெளி! !
ஓசோனை முந்திக் கொண்டும் !
கிழிந்து படலாம் !
நட்புப் படலம்! !
சுவாசக் கோளாறுகாலால் !
இப்போதே !
இறக்கவும் நேரிடலாம் !
எவரேனும் மூச்சு திணறி! !
வலுவிழந்து வருகின்றன !
'தோல்விகளையும் !
சுமக்கவிருந்த தோள்கள்! !
இருபத்தோராம் நூற்றாண்டு !
அகராதியில் !
அதிகமாய் இடம் பெறுகின்றன !
அபத்த சொற்கள்! !
கூடி கூடி நடக்கும் !
தண்ணிறைவு ஆலோசனைக் கூட்டங்களில் !
தள்ளி வைக்கவும் தவறுவதில்லை !
துணை முதல்வரை! !
எழுத்துப் பூர்வ !
உடன்படிக்கையில் !
ஒப்பந்தமிட மறுத்து !
ஓடைகள் மீதே !
கையெழுதாகிறது !
அந்தரங்கச் சட்டங்கள்... !
நம்பிக்கை இல்லா தீர்மாணங்கலாய்! !
எப்படி புரிந்துக்கொள்வது.... !
உலகம் !
தட்டை இல்லையே
தீபா திருமுர்த்தி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.