கண்களை மூடும் காட்சிகள்
தீபிகா
தங்கள்!
பிள்ளைகள் கொல்லப்படுகிற காட்சியை!
பார்க்கிற தாய்மார்களின் கண்கள்!
பெற்ற வயிறுகளை!
கைகளால் அடித்தபடி வழிகின்றன.!
சிதைக்கப்பட்டிருக்கிற குழந்தைகளின்!
காயங்களிலிருந்து,!
இரத்தம் சிந்தச் சிந்த விரியும்!
அவர்களின் கடைசி நேர ஓவியங்கள்!
தாய்மார்களின் துக்கம் நிறைந்த!
மூச்சுக் காற்றை அடைக்கின்றன.!
பிள்ளைகளின் நிர்வாண மரணங்களை!
தாய்மார்கள் பார்க்கவேண்டிய!
கனத்த துயரத்தின் விதியை!
காலமெம் தேசமெங்கும் எழுதியிருக்கிறது.!
தாய்மாரின்!
வறண்டு போன தொண்டைகளிலிருந்து!
உருகிவிழும் வார்த்தைகளும்!
கண்கள் கட்டப்பட்டிருக்கும்!
நீதி தேவதையின் காதுகளுக்கு எட்டாமல்!
நலிந்து போய் சாகின்றன. !
கடவுள்கள் புன்னகைத்துக்கொண்டிருக்கிற!
கோயில்களின் வாசல்களில்!
தாய்மார்கள் கண்ணீரோடு இருக்கிறார்கள்.!
எல்லா பிரார்த்தனைகளும்!
கைவிடப்பட்டு விட்ட மனிதர்களாய்.!
இனிமேல்!
தொட்டும் பார்க்க முடியாதபடி!
குப்புறக் கிடக்கிற பிள்ளைகளின் சடலங்கள்!
கைகள் கட்டப்பட்டபடி கிடந்து!
தாய்மார்களின் கைகளை மாரடிக்கச் செய்கின்றன.!
எந்தப் பிள்ளைகளைப் பற்றியும்!
எந்தத் தாய்மார்கள் பற்றியும்!
கவலை இல்லாத வியாபாரிகள்!
தங்கள் கள்ளச் சந்தைகளில்!
பிள்ளைகளின்!
நிர்வாண உடல்களை காட்டிக் காட்டி!
வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.!
பிள்ளைகள் சுடப்படுவதற்கு முன்பு!
இவர்கள் திருகிக் கொன்ற!
நீதி தேவதையை கூட்டி வருவதாக!
பொய் சொல்லிச் சொல்லி!
வியாபாரிகள் சனங்களை!
இப்போதும் ஏமாற்றுகிறார்கள்.!
திரும்பிவர முடியாத பிள்ளைகளின்!
காயப்பட்ட தேகங்களை!
திரும்ப திரும்ப குவித்துக் காட்டி!
பதறிக் கொண்டிருக்கிற தாய்மார்களின்!
வலி நிறைந்த கண்களையும்!
காட்சிகள்!
விரைவில் மூடிவிடப் பார்க்கின்றன