01.!
வானும் எனதும்!
-------------------------!
நானும் எனதும்!
சுழியில் விரிந்து!
விளிம்புகளை இழக்கும் !
நீருருவாய் பேச்சு!
அவளின் !
இதுவரையிலான ஆதங்கத்திற்கு!
வடிகாலாகவும் இருக்கலாம்!
உறுத்து விழிக்கும் !
ஆங்காரத்துள் ஏமாற்றம் விரிய!
உயிர்காற்றில் !
பிசுபிசுக்கிறது தோற்றம்!
இனமறியாத!
மனத்தின் நெருடலில்!
எதிர்பார்ப்புகள் மொன்னையாக!
ஏற்பும் மறுப்பும் வெறுமையாக்குகிறது.!
திடீரென கனக்கும்!
நெஞ்சுக்கூட்டில் சமாதானமாகாமல்!
பிசைகிறது கண்டம்!
கண்முன் விளக்கமாகும் !
மண்ணுடனான உறவில்!
ஒவ்வொரு மணித் துளியிலும் !
பதிய விரும்புகிறேன்!
அதிர்வின் !
காலமும் அகலமும் கணிக்க!
கரையை அகலப்படுத்தினால்!
உள்சரிகிறது மணல்!
முகச்சுருக்கத்தில் !
அழுவதுகூட அவமானந்தான்.!
நடப்பை !
இமைக்குள் நிருத்தி!
சவமாய் கிடைக்கையில்!
முடியாததும் புரியாததும்!
மண்ணில் அழுந்த!
கைகளின் பிணைப்பை!
நெற்றியில் தாங்கி!
விண் என்ற தெரிப்பில்!
நிதானமாய் !
சுவாசிக்கிறது மனது!
பார்த்ததும்!
சுருக்கத்தைக் கண்ணீராக்குகிற !
நட்பைப் பெறவில்லை!
மயிர்க்கால்களில் ஊறும்!
உவர்க்கசிவின் எரிச்சல்!
மண்ணின் தொடர்பருந்த !
உயிர்களின் தொகையில் !
அச்சம் தருகிறது.!
உவப்பிலியாகச் சபித்தாலும்!
சுற்றியுள்ளவை!
அதனதன் செயல்களில்!
முனைப்புடன்!
வவ்வாலின் எச்சத்தை!
நினைவுறுத்துகிறது!
மண்ணேறிய வியர்வையும்!
நெடிதுயிர்ப்பும். !
02.!
என்னுடையது!
------------------------!
அதைப் பற்றிய பயம்!
இருந்தது இல்லை!
பெரிசா எனக்குப் பட்டது.!
எதையும் சொல்லக் கேக்கிறதை விட!
பட்டுத் தெரிஞ்சிக்கணும்னு!
சொல்லுகிற தாத்தா!
எப்பவும் நெனப்புல.!
என்னிலிருந்து!
கரைந்து போகிற !
உயிர்ப்புக்காக வருத்தப்பட்டதில்ல!
நெனச்சும் பார்த்தது இல்ல.!
புத்தகத் தூசியும்!
தட்டினாத்தான் உதிரணுங்கிற !
நெனப்ப மீறி!
ஒவ்வொரு முறையும்!
அது தானே நிகழுது.!
கிழிஞ்சது !
கிழியாதது எல்லாம்!
என் பகுதியில் பத்திரமாய்!
தாத்தாவையும்!
மிஞ்சிட்டன்னு சொல்லுகிற!
அவ பார்வை!
எனக்குள்ள அரிக்கிது.!
வயசானவங்க !
குழந்தைக்குச் சமம்!
எதிர்த்த வீட்டு லட்சுமி பாட்டி!
எப்பவும் குழந்தைதான்ற!
பாப்பம்மாவின் பூசணி வாயில்!
கைகால்களை நீட்டி !
அருவருப்பாய் நெளியும் அது.!
அனுமதியினைத் தாங்கி!
அடையாளமிடப்பட்ட பொருட்களுள் !
ஒன்றாய் அதுவும்.!
வரவை நோக்கிய இருப்பு !
முழுமை அல்ல!
இரண்டன் கலப்பே முழுமை!
அதுவா இதுவா!
எளிதில் வசப்படாத கருத்து!
எப்பொழுதாவது!
அலைக்கழிக்கிறது.!
இருப்பை அந்நியமாக்கும்!
உரு தரும் முழுமையில்!
விலகி நிற்க இயலாது!
எதன் சார்பிலும்!
யாருக்காகவும்!
இழப்பதற்குமில்லை.!
அது என்னுடையது!
ஒவ்வொரு முறையும் தானே நிகழும்
ப.குணசுந்தரி தர்மலிங்கம்