நீலாம்பிகையே!
நினைவில் நிற்பவளே!
நீ பாடிய நீலாம்பரி இராகத்தில்!
நீயேயல்லவா நிரந்தரமாய்!
நித்திரை கொண்டாய்.!
நானல்லவோ!
நாளும் உனை நினைத்து!
நெஞ்சம் ஏங்க!
முகாரி இராகத்தை!
மனத்தில் இசைத்து!
மயங்குகிறேன்!
மனம் கலங்குகிறேன்.!
புல் நுனிப்பனிபோல்!
விழுவதுபோல் விழாதிருக்கும்!
விழியோரக் கண்ணீர்துளிகள்!
வரும் வழி அறிந்திருந்தும்!
வழி தவறி நிக்குதடி.!
உன் நீங்கா நினைவுகளில்!
நெஞ்சம் கரைந்துமே உருகுதடி.!
நாளும் இமை ஓரம்!
ஈரம் காணுதடி.!
உறங்காதபோது உன் நினைவு!
உறங்கும்போது விழித்திருக்கும் என் கனவு.!
புறங்காடு போனாலும்!
இறங்காது உன் ஏக்கம்.!
பாதி கொடுத்தவன் ஈசனென்றால்!
முழுதும் கொடுத்த நான்!
பெரும் பித்தனல்லோ
கணபதி