முகப்பு.. குறிப்பு..வரைமுறை..நிழல்கள்
ப.மதியழகன்
01.!
முகப்பு!
----------!
கொஞ்சம் பொறுங்கள்!
மெல்ல முணுமுணுத்துக் கொள்ளுங்கள்!
உங்களது பிரார்த்தனையை!
வேறொருவர் கேட்டுவிடக் கூடும்!
திரும்பிப் பார்த்துக் கொண்டே!
செல்லுங்கள் உங்களை!
யாரேனும் பின்தொடரக் கூடும்!
எதையும் திருடாதீர்கள்!
உங்களிடமிருந்து அதே பொருள்!
களவாடப்படும்!
எதையும் உழைத்தே பெறுங்கள்!
வாழ்க்கை நகரும் படிக்கட்டல்ல!
அடுத்த அடியை நாம் தான்!
எடுத்து வைக்க வேண்டும்!
கூடியவரை உண்மை பேசுங்கள்!
வயதாக வயதாக!
பொய்களின் பாரத்தை!
தாங்க மாட்டீர்கள்!
உபதேசங்களை!
கண்ணை மூடிக்கொண்டு!
நம்பாதீர்கள்!
வாழ்க்கையே கடவுள்!
வாழ்ந்து பாருங்கள்.!
02.!
குறிப்பு!
------------!
அழகான மனைவி அமைந்தால்!
அவஸ்தை தான்!
அவளுடைய கைபேசியை!
சோதனை செய்யத் தோன்றும்!
தொலைக்காட்சியில்!
அவள் அஜித்தை பார்த்தால்!
சங்கடம் தோன்றும்!
இவ்வளவு அழகானவளை!
கல்லூரியில் காதலிக்காமலா!
விட்டிருப்பார்கள்!
என்று யோசிக்கத் தோன்றும்!
உங்களை டி.வி.யில்!
பார்த்திருக்கிறேனே என்று!
யாரேனும் அவளிடம் கேட்டால்!
எரிச்சல் தோன்றக் கூடும்!
பொது இடங்களுக்கு!
அவள் கூட செல்ல!
தயக்கம் தோன்றக் கூடும்!
கொடுத்து வைத்தவன் என!
அவன் காதுபடவே பேசினால்!
சொன்னவனை!
கொலை செய்யத் தோன்றும்!
பரிசுத்தமாக அவள் இருந்தாலும்!
மனம் சாக்கடையை நாடி ஓடும்.!
!
03.!
வரைமுறை!
----------------!
நீங்கள் தயங்கி நின்றால்!
உங்கள் திருவோட்டில்!
காலணா கூட விழாது!
நீங்கள் கூச்சம் கொண்டால்!
நான்கு பேருக்கு மத்தியில்!
உங்கள் தரப்பை வாதிட இயலாது!
நீஙகள் சந்தேகம் கொண்டால்!
மனைவியை சித்ரவதை செய்வது!
தீர்வாகாது!
நீங்கள் பேசாமல் நின்றால்!
உங்கள் தரப்பு வெற்றி பெறாது!
நீங்கள் வெட்கம் கொண்டால்!
அடுத்த அடி கூட எடுத்து!
வைக்க இயலாது!
நீங்கள் செல்லும் வழி!
சத்தியம் வெற்றிபெற வழிவகுக்காது!
நீங்கள் இரக்கம் கொண்டால்!
சுற்றியிருக்கும் மிருகங்களை!
வேட்டையாட இயலாது!
உங்களிடமுள்ள கருணையை!
தானமாக பெற்று!
உங்களை இறைவன் வீழ்த்தியது!
மறுபிறவியிலும் மறக்காது.!
04. !
நிழல்கள்!
-----------!
இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்,!
நாங்கள் உங்கள் அந்தரங்கத்தை!
ஆராயமாட்டோம்!
நீங்கள் எங்கள் படுக்கையறையை!
எட்டிப் பார்க்கக் கூடாது!
நாங்கள் உங்களை குறைவாக!
எடை போட மாட்டோம்!
நீங்கள் எங்கள் வாழ்க்கைப் பாதையில்!
குறுக்கிடக் கூடாது!
நாங்கள் உங்களிடம் பணத்துக்காக!
கையேந்த மாட்டோம்!
நீங்கள் எங்களை வார்த்தைகளால்!
உதாசீனப்படுத்தக் கூடாது!
நாங்கள் உங்கள் நடவடிக்கை மீது!
சந்தேகப்பட மாட்டோம்!
நீங்கள் எங்கள் பக்குவத்தை இயலாமை!
என எடுத்துக் கொள்ளக் கூடாது!
நாங்கள் உங்கள் அத்துமீறலை வேடிக்கை!
பார்க்க மாட்டோம்!
நீங்கள் அகலிகையை கெடுத்த!
இந்திரன் என்று தெரிந்தால்!
உலகம் உங்களை கழுவில்!
ஏற்றாமல் விடாது