1!
அழையாவிருந்தாளி!
வந்தாலும்!
யாரும் வரவேற்பதில்லை!
ஆனாலும் வருவாய்!!
கதவைத்தட்டி வரும்!
கண்ணியமெல்லாம்!
உனக்கில்லை.!
அழுகை காண்பதும்!
ஒப்பாரி கேட்பதும்!
உனது!
ஒப்பில்லாபொழுதுபோக்கு.!
அழிப்பதையே!
படைப்பாய் கொண்ட!
வக்கிர படைப்பாளி!
உன்னை!
விரும்பியவர்களை கூட!
பூமியில்!
விட்டுவைப்பதில்லை!!
எங்கிருந்து வந்தாய்!
எவருக்கும்தெரியாது!
எங்குசென்று முடிவாய்..!!
உன்!
தலையெழுத்து!
தயாராகிவிட்டது.!
உன்னிடம்!
தோற்று தோற்றே!
உன்னை!
வீழ்த்தும் வத்திரம்!
கண்டுபிடித்திருக்கிறோம்!
அதில்!
ஒரு எழுத்தும்!
ஒரு எண்ணுமே!
விடுபட்டிருக்கிறது,!
ஏதோ ஒரு!
சகோதரனோ,!
சகோதரியோ-அதை!
கண்டெடுத்துவிடுவார்கள்.!
அப்போது!
உன் வாழ்வும்!
கதையாகிப்போகும்!
எங்கள் கனவெல்லாம்!
நிஜமாகிப்போகும்.!
உன் இறப்பிற்கு முன்!
ஒரே ஒரு வேண்டுகொள்!
இரக்கமற்றவர்களையெல்லாம்!
எடுத்துச்சென்றுவிடு!!
கோபமின்றி!
கேட்டதற்கு நன்றி!!!
!
2!
இருமுறை வேண்டாம்!
ஒரேமுறை வா.!!
!
எங்கோ!
நிகழுகின்றபோது!
செய்தியாய்!!
ஊரில்!
நடக்கின்றபோது!
காரியமாய்!!
உறவில்!
சம்பவிக்கும்போது!
துக்கமாய்!!
இல்லத்தில்!
ஏற்படுகின்றபோது!
இழப்பாய்!!
சம்பவம் ஒன்றாயிருந்தும்!
வலியில் ஏன்!
இத்தனை வித்தியாசம்?!
மரணமே!!
இயலுமேயானால் - இந்த!
வித்தியாசத்தை!
விலக்கிக்கொடேன் !!
இரண்டுமுறை!
வந்து செல்கிறாய்!
முதல் முறை!
மௌனமாய் வந்து!
மனதைக்கொன்று செல்கிறாய்,!
இரண்டாம்முறை!
ரகசியமாய் வந்து!
ஊரறிய உயிரைக்கொன்று!
கொண்டு செல்கிறாய்!!
இரண்டுவருகைக்குமிடையில்!
இனி!
கால இடைவெளி வேண்டாம்!!
மனித உறவுகள்!
மனதில் நீர்த்தபின்!
உடல் உலகம்சுற்றுவதில்!
அர்த்தமுமில்லை.!
அன்புமில்லை!!
அதனால்!
சம்பவிக்கட்டும்!
இனி இரண்டுமரணமும்!
ஒருமித்தே!!
சர்வம் முழுதும்!
நடக்கட்டும் மானுடம்!
கைகோர்த்தே

சிலம்பூர் யுகா துபாய்