மனிதனே!
உனக்கு பிடித்தமானவருக்குத்தான்!
உதவுகிறாய் நீ...!
நல்லவனோ கெட்டவனோ!
நிழல் தருகிறேன் நான்...!
மழைச்செல்வம் தேடித்தருவதும்!
இயற்கை அழிவிலிருந்து!
உன்னைக் காப்பதும்!
நானில்லையா?!
மலர்கள் ...ரசிக்க...பூஜிக்க!
கனிகள்...தித்திப்பாய் ...சுவைத்திட!
இன்னும் இன்னும்!
நன்மைகள் பலப்பல...!
எனினும் ...மானிடனே!
அற்ப காரணத்துக்கெல்லாம்!
அடியோடு வீழ்த்துகிறாயே...!
சிசுக் கொலைதான்!
பாவமா...!
என்னைக் கொல்வது!
பாவமில்லையா...?!
- வைகறை நிலா
வைகறை நிலா