துடிக்கும் ஆசைகள் - தீபா திருமுர்த்தி

Photo by Philippa Rose-Tite on Unsplash

அக்கறையை கூட !
அடக்கமாய் !
அறிவிக்கும் !
எனக்குக் கிடைத்த !
நீயோ !
ஆதங்கமாகவே தெரிவிக்கிறாய் !
ஆறுதலையும் !
தேறுதலையும் கூட! !
மின்னிச் சிரித்த !
கண்கள் !
உப்பு நீர் உகூக்கிறது..., !
பிறர்க்காய்! !
எழுதிய வார்த்தைகளெல்லாம் !
வாடி வதங்கி !
வெளுத்துக் கிடக்கின்றன..., !
மன கருப்பறையில்! !
எனக்கின்றி !
குழைந்து வரும் வார்த்தைகள் !
இழைத்தெடுக்கின்றன !
இன்னொருத்தியாய்...., !
உன்னிலிருந்து எனை! !
எனதறிவிற்குத் தெரியும் !
வேப்பிலையின் !
கசப்புத்தான் என்று...., !
நீ! !
மனத்திற்கு? !
வளர்ந்திருந்த எனை !
குழந்தையாக்கி !
குழந்தையாய் இருந்த நீயோ !
குயவனாய் !
வநைகிறாய்..., !
சில்லுகளை மட்டும் !
சேகரிக்கும் !
பானையை! !
தங்கிவிடுகின்றன !
மடித்து கடிதங்கள் !
எடுத்துத் தராமலேயே! !
காதலின் நிறமேறா !
என் வாழ்வில் !
பச்சைச் சாயம் ஏற்றி !
கருப்பு நிறம் !
இறக்கிய பிறகும்...., !
தனியறையில் !
சந்திக்கும் காதலரின் !
இதயத் துடிப்பை விடவும் !
ஆயிரம் மடங்கு !
அதிகமாய்த்துடிக்கிறது !
ஆசைகள்
தீபா திருமுர்த்தி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.