கனவாய் மறந்து போய்விடுமோ - இளந்திரையன்

Photo by FLY:D on Unsplash

வெள்ளைப் பனி நாட்டினிலே !
வெறுமைத் தனி சிறையினிலே !
உள்ளம் தடுமாறுதையோ - எம் !
உயிரும் நொந்து போய்விடுமோ !
!
விருட்சமாய் வளர்ந்த எம்மை !
வேரறுத்து பிடுங்கி வந்து !
பதி வைத்தால் முடியுமோ - எம் !
பசுமை மீண்டும் வந்திடுமோ !
!
இளந்தென்றல் காற்றில் சிரித்தும் !
இளவேனிலிற் காய்ந்து உலர்ந்தும் !
மாரியில் தழைத்து மலர்ந்தும் -எம் !
மனதினில் பூரித்தது மறந்திடுமோ !
!
செம்பாட்டு மண்ணில் சிவந்தும் !
செந்நெற் கழனியில் உழைத்தும் !
பாட்டினில் களைப்பு மறந்தும் - எம் !
பண்பாட்டில் உயர்ந்தது அழிந்திடுமோ !
!
அப்பன் அம்மா பேச்சினிலே !
அன்னை தமிழின் மூச்சினிலே !
செல்வம் கொழித்த மண்ணினிலே - எம் !
சிரித்த இதயம் அழுதிடுமோ !
!
ஆலய மணியின் ஓசையினிலே !
அருளும் அன்பின் மூச்சினிலே !
பெரியவர் புரவலர் சேர்த்துவைத்த - எம் !
பெருமை எல்லாம் மறைந்திடுமோ !
!
புரவிகள் பாய்ந்த புரங்களும் !
புகழுடன் வாழ்ந்த இடங்களும் !
கட்டி வைத்த கோட்டைகளும் - எம் !
கனவாய் மறைந்து போய்விடுமோ !
!
தமிழின் புகழும் அழிந்திடுமோ !
தரணி எம்மை மறந்திடுமோ !
யாரெனக் கேட்கும் சரித்திரம் - நாம் !
யாரெனச் சொல்வோம் சந்ததிக்கு
இளந்திரையன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.