தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

மாணவ பிள்ளைதாச்சிகள்.. கள்ளன்

வி. பிச்சுமணி
மாணவ பிள்ளைதாச்சிகள்..கள்ளன் போலீஸ் !
01.!
மாணவ பிள்ளைதாச்சிகள்!
-----------------------------!
ஒவ்வொரு பேருந்து பயணத்திலும்!
ஒவ்வொரு தொடர்வண்டி பயணத்திலும்!
குந்த இடமில்லாமல்!
முதுகில் புத்தகத்தை சுமந்து!
நிற்கும் பிள்ளைதாச்சி மாணவர்கள் !
முதுகு பைகள் கர்ணகவசம்!
கழற்றி வைக்கப்படுவதில்லை!
குந்திகளின் மூக்கை அறுக்கும்!
பின்னாலிருப்பவரின் வயிற்றை அமுக்கும் !
மாணவர்களுக்கு பாதுகாப்பு கவசம்!
மற்றவர்களுக்கு பாடாய்படுத்தும் கவசம்!
கூட்டம் அதிகமாக இருந்தாலும்!
முதுகுபைகள் கும்மியடித்து கொண்டிருக்கும் !
இந்த கர்ணர்களை கண்டால்!
கெளவரர்களுக்கு கூட எரிச்சல் வரும்!
இறக்கி கையில் வைக்க சொன்னால்!
ராஜ்ஜியத்தை கேட்டாற்போல் முறைக்கும் !
முதுகுபைகள் எப்போது இறக்கி வைக்கப்படுமென!
தொடங்கி வைத்த படையப்பாவுக்கே தெரியாது !
!
02.!
கள்ளன் போலீஸ் !
------------------------- !
நிலவும் நானும்!
கள்ளன் போலீஸ் விளையாடினோம்!
நான் போலீசாக!
நிலவு மேகத்தில் மறைந்து கொள்ளும்!
நிலவு போலீசாக!
நான் வீட்டில் மறைந்து கொள்ளுவேன்!
இப்படி மாறி மாறி!
இரவெல்லாம் விளையாட்டு!
சூரியன் தன்னையும் விளையாட்டில்!
சேர்க்க சொல்லி சண்டையிட!
எங்கள் விளையாட்டை கலைத்தோம்!
மற்றொரு நாளில்!
விளையாடுகையில்!
நிலவு மேகத்தில் மறைந்து!
போக்கு காட்டியது!
அதை கண்டுபிடிக்கவே முடியவில்லை!
போதும் விளையாட்டு!
வெளியே வா என அழைக்க!
நிலவின் ஒளிசத்தம் மட்டும் கேட்டது!
நிலவு வடித்த கண்ணீர்!
எங்க ஊரு முழுவதும் மழையாக

தோல்வி

இரா சனத்
மாணவனுக்கு பரீட்சையில் தோல்வி!
மன்னனுக்கு ஆட்சியில் தோல்வி!
மங்கையருக்கு காதலில் தோல்வி!
மடையனுக்கு மகிழ்ச்சியும் தோல்வி!
அலட்சியத்தால் இலட்சியத்துக்கு தோல்வி !
அமைதியால் ஆணவத்துக்கு தோல்வி !
அடிமைத்தனத்தால் வீரத்திற்கு தோல்வி !
அறியாமையினால் அறிவுக்கு தோல்வி!
காலை பொழுதினிலே கங்கை கரையினிலே!
கன்னியர்கள் கவர்ச்சியாக நீராடுவதை கண்ட!
கதிரவனுக்கு முகில் கூட்டத்தால் தோல்வி!
முன்நோக்கி செல்வதற்கு முனையாமல்!
பின் நோக்கி நகர்வதற்கு முனையும்!
வீரத்தன்மையற்ற படைவீரர்களுக்கு !
போர்களத்தில் தோல்வி நிச்சயம் !
மக்கள் தேவையை நன்கு அறிந்து!
மக்களுக்கு சேவையாற்ற தவறும்!
அதிகாரமுடைய அமைச்சர்களுக்கு!
தேர்தலில் படு தோல்வி நிச்சயம்!
அன்னையை மதிக்காமல்!
ஆண்டவனை துதிக்காமல்!
அலட்சியமாய் வாழ்பவனுக்கு!
தொட்டதெல்லாம் தோல்வியாகும்!

அமெரிக்கன் பேபி

ஜான் பீ. பெனடிக்ட்
ஆகாயத்தில் பறந்து!
ஆயிரமாயிரம் மைல் கடந்து!
அப்பனும் ஆத்தாளும்!
அமெரிக்காவில் குடியேறிப் பெற்றதனால்!
அமெரிக்கன் சிட்டிசன்!
ஆனாயே நீ தானே!
அயல் தேசம் பிறந்ததனால் - நீ!
அத்தை மாமா அறியலையே!
அடுத்த வீட்டுப் பிள்ளைகளோடு!
ஆடிப் பாடவும் முடியலையே!
அம்மாயி அப்பத்தா!
அவர்களின் புருஷன் உன் தாத்தா!
அணைத்து மகிழும் வாய்ப்பு ஒன்றை!
அவர்கட்கு நீயும் அளிக்கலையே!
அன்பாய் வளர்த்த பசு மாடு!
ஆறாவதாய் ஈன்ற கன்று ஒன்று!
அன்னை மடியை முட்டி முட்டி!
ஆர்வமாய்ப் பால் குடிக்கும்!
அழகை நீயும் காணலையே!
ஆண்டுக்கு ஒரு முறை!
அமர்க்களமாய் ஊர்த் திருவிழா!
ஆட்டுக் கிடா வெட்டி!
அய்யனாருக்கு விருந்து படைக்கும்!
அதிரடியை நீயும் அறியலையே!
குளுகுளு சீசனிலே!
குற்றாலமலை அருவியிலே!
குளித்து மகிழும் பாக்கியம்!
குழந்தை உனக்குக் கிட்டலையே!
ஆட்டுக் குட்டியை தூக்கிக்கொண்டு!
ஆடு மாட்டை ஓட்டிச் சென்று!
அருகம் புல்லை மேயவிட்டு!
அந்தி சாய வீடு திரும்பும்!
அற்புதம் உனக்கு வாய்க்கலையே!
ஆற்றங்கரையில் நடை பயின்று!
ஆல விழுதில் ஊஞ்சலாடி!
அரப்பு தேய்த்து ஊற வைத்து!
அம்மனமாய் குளியல் போடும்!
ஆனந்தம் உனக்குக் கிடைக்கலையே!
அன்பு மகனே மகளே!
அறியாத வயது உனக்கு!
அனுபவித்து இழந்ததனால் எழுதுகிறேன்!
அப்பன் நான் ஒரு கிறுக்கு

அக்சய திருதியை

சித. அருணாசலம்
நாளெல்லாம் நிகழ்வுகளில் !
நல்லதே வேண்டுமென!
எல்லோரிடமும் எதிர்பார்ப்பது!
புல்லைத் தின்ன சொல்லிப்!
புலியை மல்லுக்கட்டுவது போலாகும்.!
நல்ல நாட்களில் அதைச்!
சொல்ல வரும் போது!
நினைவினில் அகலாது !
நீங்காமல் நிறைந்திருக்கும்.!
தங்க வியாபாரத்திற்காக!
தந்திரமாய் அதை மாற்றி!
வாங்குங்கள் தங்கத்தை!
பெருக்குங்கள் செல்வத்தை - என!
உணர்வுகளைச் சாதகமாக்கி!
உல்லாசமாய் வியாபாரம் பெருக்கி!
மனிதனைச் சிந்திப்பதிலிருந்து!
மழுங்கடிக்கச் செய்வதையும்,!
கூட்டத்தை வரவழைத்துக் !
கொள்ளை லாபம் ஈட்டுவதையும்,!
சிந்தித்துப் பார்க்க வேண்டும்.!
உள்ளத்தில் தூய்மை ஒன்றே!
உலகத்தில் சிறக்குமென்பதை!
உணர்ந்திட வேண்டும்.!
-சித. அருணாசலம்

நான்கு இறக்கைகள் கொண்ட

ஏ.கே.முஜாரத்
அவன் மனசு!
------------------------------------------------!
அல்லாஹ்விற்கே உரித்தான நான் என்கிற!
சொற்பெறுமானத்தை சகோதரனான அவன்!
காக்கை இருளுக்குள் களவாடி!
வெள்ளை சீலைத் துண்டுகளால் துடைத்து!
பௌடர் இட்டு முத்தமிட்டு!
கொஞ்சிக் குலாவிக் கொண்டிருக்கிறான்.!
பெரும் சனத்திறல்களிலும்!
அச்சிறகுகளை உயர்த்தி பொம்மைக் குட்டி போல!
வடிவம் காட்டுகிறான்!
இன்னும் வானம் பூமிக்கு!
இடைப்பட்ட தூரம் கேட்கும் படியாக!
அ+க்காண்டியாகவும் பருந்தாகவும்!
அல்லது கழுதையாகவும் தேவைப்படின் நரியாகவும் மாறி!
உரத்து ஒலமிடுகிறான்!
நான் என்கிற அச்சொற் பெறுமானத்தை ஆணவத்தோடு!
தலைக்கு மேல் தூக்கி வைத்து!
கொண்டாடும் அவன் நாளை!
பிர்அவ்னாகவும் மரணிக்கக் கூடும்

அழகிய வாழ்வு நெய்வோம்

தீபச்செல்வன்
உணர்வுகளால் பகிர்வோம்!
மகிழ்வுகளால் பகிர்வோம்!
வலிகளால் பகிர்வோம்.!
நாம் நிலவின்!
வெளிச்சத்தில் பகிர்வோம்!
களங்கமில்லாத!
நமது குழந்தை முகங்களை.!
நாம் சூரியனின்!
ஒளியில் பகிர்வோம்!
தாய்மையடைந்த!
நமது மடியின் குரல்களை.!
உனது கையை பிடித்து!
பயணம் செய்தும்!
உனது தோள்களில் சாய்ந்து!
தூங்கியும்!
என் மடியில்!
நீ வேர் விட்டும்!
தாய்மையை!
நமக்குள் பகிர்வோம்.!
பிணைந்த நமது!
விரலிடுக்குகளில்!
சமத்துவ வலிமையில்!
எங்களை நாங்களாய்!
சுமப்போம்!
உன்னை நான் சுமக்கையில்!
நான் தாயாகிறேன்!
என்னை நீ சுமக்கையில்!
நீ தாயாகிறாய்.!
எனது சிறகு!
பறிக்கப்படாதவரை!
உனது சிறகும் பறிக்கப்படாது!
நான் சிறைவைக்கப்படாதவரை!
நீயும் சிறைப்படமாட்டாய்.!
சொற்களின் ஈரத்தால்!
குளிர்ந்த எண்ணங்களால்!
வெள்ளை புன்னகையால்!
நாம் இணைந்து!
அழகிய வாழ்வு நெய்வோம்.!
பூமியின் வேரில்!
ஓளியின் அடியில்!
நாம் விடுதலை சிருஸ்டிப்போம்!
நாம் நமக்குள்!
போராடத்தேவையில்லை!
நாம் நமக்குள்!
வதைபடத்தேவையில்லை!
மகிழ்வை புதைக்கத்தேவையில்லை!
கோப்பைகளை பரிமாறுவோம்.!
உன்னிடமும் என்னிடமும்தான்!
நமக்கான விடுதலை இருக்கிறது!
நம்மை நாமே!
விடுதலை செய்வோம்.!
வா…அழகிய நமது விடுதலையுடன்!
வாழ்க்கையை பகிர்வோம்.!
-தீபச்செல்வன்

மழையெல்லோரெம்பாவாய்

தேவஅபிரா
இங்கு பொழிகிறது மழை !
அங்கென் மண்ணிலும் பெய்யுமோ? !
கையேந்தா மனிதரின் கனவுகள் !
உலர்ந்த காலத்தின் மீதும் பெய்யுமோ? !
மழையின்றி நிமிராவெப்பயி£¤லும் பெய்யுமோ? !
வேரறுந்து விலகிய மனிதரின் விளைநிலம் !
சுவடிழந்து அழுகிறது. !
தேரசைந்த திருக்கோவில் கனவுகளை !
பாழடைந்த கோபுரம் பாடும் பாடலை !
பாடும் கிழவனின் கைத்தடியும் !
வழுவி நனையுமோ? !
ஊர் முடிந்த வெளியில் !
பொன்னிற மாலையில் !
மஞ்சள் குளிக்கும் !
என் தனியொரு வீடும் வேம்பும் நனையுமோ? !
ஏக்கம் மீதுற விண்ணின் துளிகள் !
பின்னிப் பெருமழையெனப் பொழிய !
என் பெண்ணின் விழிகளை மருவி !
இதழ்களைத் தழுவும் !
கனவில் இலயிக்கும் !
சாளரக் கரையின் சயனத்துடலில் !
படுமோ தூவானம்? !
மூசிப் பெய்தும் !
முழுநிலமும் கரையவோடியும் !
பின்னும் பெயரின்றி !
ஆழக்கடலில் கலந்து அழியும் மழையே !
தேடிப் பெய் என் தேசத்தை. !
ஏங்கித் தளர்ந்து இனிப்புகலே இல்லை !
எனத்தளம்பும் மனிதரை !
நெடுமரமடியின் நனையாக் குடிலில் இருத்திப் பின் பெய். !
இம்மழை மண்ணில் பெய்தது !
மரத்தில் பெய்தது !
மனதிலும் பெய்தது !
என்றுனக்கு அழியாப்புகழ் தருவேன். !
கார்த்திகை - 1996 !
தேவஅபிரா puvanendran@home.nl !
***** !
வெளிவர இருக்கும் !
இருண்ட காலத்தில் தொடங்கிய என் !
கனவுகளும் எஞ்சி இருப்பவைகளும் தொகுப்பிலிருந்து . !
இத் தொகுப்பை இலங்கையில் இருக்கும் நிகரி வெளியீட்டகம் வெளியிடவுள்ளது. எனது கவிதைகள் ஏற்கனவே சரிநிகர், மூன்றாவது மனிதன், திண்ணை, விளக்கு, ழகரம், ஒளி, திசை போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன

மரணத்தின் வாசல்

நாச்சியாதீவு பர்வீன், இலங்கை
காலச் சக்கரம் !
நினைத்தபடி ஓடும் !
நாம் நினைக்காத !
ஒரு பொழுதில் !
திடீரென்று நின்று..!
தன் வாசல் திறந்து.!
விரும்பியவரை !
இழுத்துக்கொள்ளும் !
மரணம்..!
அது ஆணாக..!
பெண்ணாக.!
இன்னும் குழந்தையாக!
என்று..!
யாராகவும் இருக்கலாம்!
ஒரு பெருமூச்சி தானும்!
விட அவகாசம்!
கிடைக்காத தருணமது!
எந்த விருப்பமும்!
எந்த வெறுப்பும்!
நம்மை ...!
திருப்பி கொண்டு வர மாட்டா.!
மரணத்தின் வாசலை கடந்த பின்..!

முரண்

ச.இளம்பிறை
நிஜமாயிருக்கிறேன் !
முரணானவள் என !
முகம் சுழிக்கிறார்கள். !
மாக்கோலம் போடுவது !
மருதாணி இடுவது !
பூச்சரம் தொடுப்பது !
கோயிலுக்குப் போவது !
இப்படி எதுவுமே !
என்னிடத்தில் இல்லாததால் !
விடிவேதும் இல்லாது !
வேதனைப்படுகிறேனாம் !
அடங்காப்பிடாரி என !
ஆசைதீரக் கத்தட்டும் !
அதற்குமேல் என்னவுண்டோ !
எல்லாமே சொல்லட்டும். !
நான், !
நிஜமாகத்தானிருப்பேன் !
இவர்கள் !
முரணானவள் என !
முகம் சுழித்தே !
வாழட்டும்...! !

வீடு திரும்பல்

கவிதா. நோர்வே
மாமரமும்!
செவ்வந்தியும் சுற்றி நிற்க!
துளசிசெடி அருகில்!
நிலவும் கூட வரும் அந்திகளில்...!
இருந்தது எனக்கொரு வீடு!
சமயற்கட்டில் அம்மாவும்!
தோட்டத்தில் அப்பாவும்!
கத்த கத்த நிற்காமல்!
ஊர்சுத்தி திரும்பி வர!
இருந்தது எனக்கொரு வீடு!
அந்தி வரும்.!
ஜன்னல் ஓரம் - அங்கே!
வானில் ஒரு நிலவு வரும்!
எதிர்வீட்டில் ஒரு நிலவு வரும்!
வானம் நிரம்பிய தாரகைகளாய்!
தங்கையும் பட்டாளங்களும்!
நிரம்பிய அந்த அந்திப் பொழுதுகளில்!
நான் வீடு திரும்ப!
இருந்தது எனக்கொரு வீடு!
ஓரு விடியலின் பிறப்பில்!
இறந்துபோன!
என் அந்திப்பொழுதுகளை!
எனக்குணர்த்த போதாது!
தீராத பொழுதுகளின் வதை!
சுமந்த முகாம் குடிசைக்குள்!
வந்துபோன விடியல்கள்!
கடைசியாய்!
சொல்லிப் போனார்கள்..!
தோட்டாக்கள் துளைத்த!
துவாரங்கள் போக!
வீடும் கூரையும்!
துளிசிசெடியும் கூட!
இன்னமும் இருக்கிறதாம்!
வீடு; திரும்ப நேருகையில்!
அங்கே கவிந்து கிடக்கும் போலும்!
எனக்கான இரண்டாவது!
வதைமுகாம்!