அவர்கள் வரப்போவதாய் அனைவரும் பேசிக்கொள்கிறார்கள்!
மீண்டும்,!
பச்சை மஞ்சள் நீலம் சிவப்பு வெள்ளை என்பனவும்!
ஆயிரம் பாகமாய்ப் பிரிந்த நிறங்களும்!
அவற்றின் இணையாத கலவைகளும்!
பொலீதீன்களோடு இணைந்து கொடிகளாயிற்று.!
தலைவர் வருவாராம்!
உயர்த கோஷங்களெல்லாம் இடைமறிக்கும்!
உணர்சிகள் வீதிகளில் நடமாடும்!
மாடு தின்பதற்காய் மதில்களில் போஸ்டர்கள் இருக்கும்.!
மிகத்தூரத்தில் அதுவும் வானத்திலிருந்து!
மறைந்தவர் கவனிப்பதாய் ஒரு அலங்காரம்!
பாவம்,!
அவர்கள் மீண்டும் மீண்டும் வருவார்கள்!
எல்லாம் மறந்து தனித்துவத்திற்காய் நாமெல்லாம்!
உச்ச ஸ்தாயியில் கோஷம் முழங்குவம்.!
மீளவும்!
மிக இருட்டிய இரவுகளில்!
கருமை மேலெழுகிறது விடியலிற்காய்.!
2003.07.03

பர்ஸான்.ஏ.ஆர்