கனவின் துண்டுகளை !
இரவின் பாதிக்குள்!
புதைத்து விழிப்பதற்குள்!
நரகத்து மொழியின் விபரீதம்!
இன்னமும் செவிகளை நசுக்கின.!
துண்டு துண்டுகளாக !
அந்தரத்தில் தொங்கும் என் இளமை!
பழுக்கத் தொடங்கிவிட்டது.!
ஒரு மயிர்!
கோழி கிளறிய என் குப்பைக்குள்!
மின்னியது.!
நெஞ்சுக்குள் உடைந்த!
மலை முகட்டின் பாறை!
வேர்விட்ட நிலையிலே!
அண்ணார்ந்து பனிப்படரின் வீதியில்!
என் கனவை நடக்கவைத்தது ஊன்றுகோல்!
கனிந்த மாம்பழத்தின் பக்கம்!
அணில் ஆட்கொள்ளவில்லை!
இவன் கொக்கையுடன் கனவுகளுக்காக.!
ஒரு பாதி இரவுக்குள்!
இன்னும் என் கனவு வாயு கலையாத வயிறு.!
கனவின் துண்டுகளை !
இரவின் பாதிக்குள்!
புதைத்து விழிப்பதற்குள்!
நரகத்து மொழியின் விபரீதம்!
இன்னமும் செவிகளை நசுக்கின.!
-- டீன்கபூர்!
திண்ணைக் கவிதைகள் தொகுப்பிலிருந்து
டீன்கபூர்