ஞாபக முட்கள் - ஜாவிட் ரயிஸ்

Photo by QPro on Unsplash

என் அரைசாண் இதயத்தின்!
அந்தம் வரை தொட்டவளே!!
ஆழமான உன் மனதை!
ஆக்கிரமித்து- இன்று!
ஓரமாய் கிடப்பவன் நான் !!
பனித்துளி-!
சூரியனில் நிழல் கண்டதும்!
சூரியன் சென்று!
பனியில் குளிர்க்காய்ந்ததும்!
ஒரு காலம்!
பனித்துளியே சூரியனை!
சுட்டெரிப்பது என் நிகழ்காலம்!
ஒற்றை பார்வையிலே!
உயிரை இடம் பெயர்த்தவளே!
இன்று!
பெயர்த்த இதயத்தை!
ஒளித்துகொண்டதேன்?!
உன் நினைவுகளை வரவேற்க!
என் இதயத்தில்!
அரண்மனை அமைத்து வைத்திருக்கிறேன்!
நீயோ!
புதைகுழி தேடிக்கொண்டிருக்கின்றாய்!
என் நினைவுகளை புதைப்பதற்கு!
உன் மனதை நானும்!
என் மனதை நீயும்!
உடுத்திக்கொண்டு!
என்னில் நீயும்!
உன்னில் நானும்!
உறைந்துபோன!
அந்த நிமிஷங்கள்!
என் சவப்பெட்டியை கண்டதும் தான்!
உன் நினைவுக்கு வருமா?!
போகிறேன் என்றதுமே!
போய் வா! என்று சொல்ல!
பொய்த்துப்போன!
உன் நாவு!
வந்திருக்கிறேன் என்றதும்!
போய்விடு! என்று சொல்ல!
வழி பார்த்துக் கொண்டிருந்ததேன்?!
என் நினைவுகள் வராமலிருக்க!
உன் மனதுக்குள் - என்ன!
ஊரடங்கு சட்டமா?
ஜாவிட் ரயிஸ்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.