இயந்திர வாழ்க்கையின்!
இயக்கத்தில் மனிதனின்!
இதயம் இயங்க மறுத்துவிட்டதில்!
பிழை யாரிடம்?!
பணத்திடமா?!
பதவியிடமா?!
ஏக்கங்களை மறந்து விட்டு!
தூக்கங்களை தொலைத்துவிட்டு!
துரத்திக் கொண்டிருப்பது!
காசையா?!
கல்வியையா?!
எல்லோருமே மறந்து விட்டோம்!
அந்த அழகான நாட்களையும்!
அமைதியான நிமிஷங்களையும்!
நகர வாழ்க்கையில்!
நரக வாழக்கை தான் தெரிகிறது.!
எல்லாப் புன்னகைகளும்!
எதையோ நாடுகிறது!
எல்லாப் பார்வைகளும்!
ஆதாயத்தின் அருவைகள் தான்..!
இருப்பாதோ ஒரு வாழ்க்கை!
அதையும் தொலைத்து விட்டு!
இருண்ட காண்டத்துக்குள் இன்பம்!
தேடுகிறான் மானிடன்.!
வசீகரமான இளமையை!
காலத்தின் கைப்பிடிக்குள்!
கருவருத்து விட்டு!
வயோதிபத்தின் போது முயல்கிறான்..!
இளமையாய் இருக்கக் கொஞ்சம்…
ரம்சின் நிஸாம்