அன்றைக்குப் பார்த்தேன்!
தனித்ததொரு ஒற்றை மொக்கு!
தெருவில்.... புழுதியில்....!
அவ்வழி சென்ற பூக்கூடையிலிருந்து!
தவறி விழுந்திருக்குமோ..!
அலங்காரக் கூந்தலில்!
அழுந்தியிருக்கப் பிடிக்காமல்!
வெளியேறியதாயிருக்குமோ...!
ஒருவேளை...!
அங்கே செல்கின்ற!
இறுதி யாத்திரையின்!
இரங்கல் துளியோ...!
எப்படியோ....!
பறிக்கப்பட்டபின்!
பறிகொடுக்கப்பட்டதாய் இருக்கும் அது!!
!
- இப்னு ஹம்துன்!
-------------------!
H.FAKHRUDEEN!
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)!
+966 050 7891953
இப்னு ஹம்துன்