ஒன்று பட்டால் - ராமலக்ஷ்மி

Photo by engin akyurt on Unsplash

உள்ளத்தை உணர்த்துகின்ற!
ஒலிவடிவே மொழி என்றால்!
உலகம் உய்த்திருக்க!
ஒருவழிதான் ஒருமொழிதான்!
அதுவே அன்புமொழி.!
வாழ்க்கைக்கு வழிகாட்டும்!
ஒளிவிளக்கே மதம் என்றால்!
வையகத்தை வாழ்விக்க!
'ஒன்றேகுலம் ஒருவனேதேவன்'!
என்பதுவே வேதம்.!
மொழியின் ஒலிவகை!
பலவாக இருப்பினும்!
பண்பெனும் பாதையிலே!
அம்மொழிப் பாதங்கள்!
பயணிக்கையிலே!
பாஷைகளின் ஓசைகள்யாவும்!
நேசத்துடன் இனிமையாய்!
தேசிய கீதத்துக்கு!
இசை அமைத்திடாதோ!!
மதங்களிலே இந்துமதம்!
எடுத்துரைக்கும் அறநெறிகளும்;!
விவிலியம் கற்பிக்கும்!
கருணவடிவாம் கர்த்தரின்!
வாழ்வும் போதனையும்;!
குர்ஆன் உரைக்கும் உயர்நெறிகளும்;!
மாற்றானை நேசிக்கவும்-!
மனசாட்சிக்கு பயப்படவும்-!
மனிதநேயம் வளர்க்கவும்-!
வலியுறுத்தும் வழிகாட்டிகளாய்த்தான்!
விளங்குகின்றன திகழுகின்றன!!
சமுத்திரத்தில் சங்கமமாகும்போது!
சகலநதிகளின் சிறப்புச் சரித்திரங்களும்!
சமத்துவமாகி விடுகின்றன.!
ஆர்ப்பரிக்கும் அலைகளுக்கிடையே-!
அந்நதிகளின் அமுதநீர் இன்னதென்று!
பிரித்தறிந்திட இயலுகிறதா?!
வார்த்தைகளால் வர்ணிக்க வாராது!
விவரிக்க விவரிக்க வியப்பேற்றும்!
வரலாற்றுச் சிறப்புகள்!
ஒவ்வொரு மொழிக்கும்!
ஒவ்வொரு மதத்துக்கும்!
உண்டென்றாலும் கூட!
இந்திய சரித்திரமெனும்!
மகா சமுத்திரத்தில்!
சங்கமிக்கையில் அவற்றினிடையே!
பேதம்பார்ப்பது பேதமையல்லவா?!
கடலிலே கலந்திட்ட மழைத்துளியைக்!
கண்டெடுப்பது ஆகிற காரியமல்ல.!
அன்புக்கடலிலே மக்கள் கலந்துவிட்டால்!
அவர்களைப் பிரிப்பது சுலபமல்ல.!
பாஷைகள் பலவானால் என்ன ?!
மதத்தால் மாறுபட்டால் என்ன ?!
பார்க்கின்ற பார்வையிலே!
பாசத்தைப் படரவிட்டால்!
வாழ்கின்ற வாழ்க்கை வசந்தமாகுமே!!
தேசத்தில் ஒற்றுமையுணர்வு!
தேனாறாய் ஓடுமே!!
எந்தத்தாயும் தன் குழந்தைகள்!
ஒன்றுபட்டு வாழ்வதை!
விரும்பிடல் இயல்பு.!
பாரதமாதாவும் அதற்கில்லை!
பாருங்கள் விதிவிலக்கு.!
நம்போல வேற்றுமையிலே!
ஒற்றுமைகாண வேறெருதேசம்!
இனிப்பிறந்துதான் வரவேண்டுமெனப்!
பெருமிதமாய் பேசிப்பூரித்திருந்த!
பொழுதுகள் யாவும்-!
இன்று கனவுக்காட்சிகளோ எனக்!
காற்றோடு காற்றாய்க் காணமல்!
போய்க் கொண்டிருக்கின்றன.!
மனம் வலித்தாலும்!
மறுக்க முடியவில்லையே!!
கணக்கிட்டால் நாம் களித்திருந்த!
கணங்களை விடவும் மனம்!
வலித்திருந்த கணங்கள்தாம் அதிகம்.!
அவர் தம் மொழியினரே;!
ஆயினும் தம்மதம் இல்லையென!
அடித்துக் கொள்கிறார்.!
அவர் தம் மதத்தவரே;!
ஆயினும் தம்சாதி இல்லையென!
வெட்டி வீழ்த்த விழைகிறார்!
சுட்டுத் தள்ளவும் துணிகிறார்.!
இன்னாரின் தொழில் இதுவென்றறிய!
அன்னாளில் தோன்றியதே சாதி.!
திறமையிருந்தால் எந்தத் துறையிலும்-!
எவரும் பிரகாசிக்க வாய்ப்புக்கள்!
வரிசைகட்டி நிற்கின்ற இந்த!
இருபத்தோராம் நூற்றாண்டிலும்!
சாதி எனும் சங்கடத்தைப்!
பாரமாய்ச் சுமந்து திரியவேண்டுமா ?!
நீ இந்தஇனம் நான் அந்தஇனமென!
உயர்வுதாழ்வு பார்ப்பது நம்மைநாமே!
இழிவுபடுத்துதல் ஆகாதா?!
'சுதந்திரம் ' என்ற குறிக்கோளுக்காக!
அன்று ஒன்றுபட்டு நின்றதால்தான்!
'இந்தியா 'வை முழுமையாகப் பெற்றோம்.!
இன்று சிதறிவிடுவோமோ என்கின்ற!
அச்சம்ஒன்றே மிச்சமாகி நிற்கின்றோம்.!
சுனாமிநம்மைச் சூறாவளியைப் போலச்!
சூரையாடிய போது மொழிம்தம்இனம்!
மட்டுமின்றி தேசமும் தாண்டிய!
மனிதநேயம் பார்த்து!
மலைத்துப்போனோமே!!
அந்தநேயம் கண்டு நெஞ்சுருகி!
நின்ற யாவரும்-!
'மனிதம்' கற்ற மகத்தானநேரமது.!
இந்திய இதயங்களிலும் ஈரம்!
முற்றிலுமாய் வற்றிவிடவில்லையென!
நம்பிக்கை விதைகள் விழுந்ததருணமது.!
இயற்கையின் சீற்றத்தால்-!
இழப்புக்கள் நேர்வது விதி.!
மனிதனின் சீற்றத்துக்கு-!
மனிதன் பலியாவது வலி.!
வந்துபோன சுனாமி மற்றுமொரு!
வரலாற்று வேதனையெனக்!
குறிப்பெழுதி ஒதுக்கி விடாமல்;!
வரும்நாளில் கற்றுணர்ந்த மனிதத்தை!
கணநேரமும் மறவாதிருப்போம்.!
பலிவாங்கும் பழிவாங்கும்!
பாவ காரியங்களுக்குப்!
பலம் கொடுப்பதில்லை!
படை திரட்டுவதில்லையெனப்!
பத்திரம் எழுதிடுவோம்.!
விவேகத்தை வளர்த்துக் கொண்டால்!
விரோத நினைப்புக்கள் விடைபெறும்.!
துவேஷத்தைத் துடைத்து விட்டால்!
துர்எண்ணங்கள் தோற்று விடும்.!
மாசற்ற மனமே பாசம்வளர்க்கும்,!
தேசம் தாண்டியும் நேசக்கரம்நீட்டும்.!
நம் 'மக்கள்சக்தி ' கண்டு!
மாபெரும் தேசம் யாவும்!
மருண்டு மலைத்து!
வியந்து நிற்கின்றன.!
நம்உதவியில் உயரஉவந்து!
விரைந்து வருகின்றன;!
உதவியபடியே நம்மையும்!
உயர்த்திக்கொள்ள உன்னதநேரமிது.!
இன்று உலகமே நம்!
ஒவ்வொரு அசைவையும்!
கூர்ந்து கவனிக்கிறது.!
இழை பிசகினாலும் இந்தியாவுக்கு!
இறங்கு முகமே!!
வேண்டாமே அந்த வேதனை.!
கடந்து வந்த சோதனைகள்!
கற்பித்தப் பாடங்கள் போதுமே.!
வரும்நாளில் இந்தியா வல்லரசாய்!
வளர்ந்திடத் தெளிவோடு ஒன்றுபட்டால்..!
சாதனைகள் சத்தியமாய் சாத்தியம்,!
சிகரத்தை எட்டிடலாம் சீக்கிரம்
ராமலக்ஷ்மி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.