மன்னித்து விடு தாயே - புஸ்பா கிறிஸ்ரி

Photo by Tengyart on Unsplash

இறந்தவள் உன் மகள் தான் !
உன்னிடம் சொல்லிக்கொள்ள !
என்னிடம் தைரியம் இல்லை !
வயதான உன் மனம் !
தாங்கிக்கொள்ளும் சக்தியை !
இழந்து விட்டதால் !
உன் உருவம் மாறியது போல் !
உன் இதயம் மாறி !
உன் நினைவுகள் மாறி !
உன் கனவுகள், கற்பனைகள் !
யாவுமே மாறி !
நீ நிம்மதியற்ற உறக்கத்தில் !
உழலும் போது, !
என்றோ இறந்து போன !
உன் சோதரன் !
இன்று தான் இறந்தான் என்கிறாய். !
இன்று இறந்த உன் !
மகளின் மரணமும் உன்னை !
உருக்குலைப்பதை !
நான் அனுமதிக்க விரும்பவில்லை !
மரணம் வரும்வரை மயானத்தை !
நினைத்து நீ !
தினம் தினம் விடும் !
கண்ணீர் போதும்.. !
மன்னித்துவிடு என்னை.. !
உன் மகளின் மரணத்தை !
உன்னிடமிருந்து நான் !
மறைத்து விட்டேன்... !
(கலைப்) புஷ்பா கிறிஸ்ரி
புஸ்பா கிறிஸ்ரி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.