சாட்சிகளாய்ப் பார்த்துக்கொண்டே
துரை.ந.உ
கோழிப் பண்ணையின் சுற்றுச் சுவரில்லா!
கிணற்றில் தவறிவிழுந்த திருட்டுப் பூனை!
பார்த்துக்கொண்டு இருக்கின்றன கோழிகள் !!
காப்பாற்ற கயிறு கடப்பாரையோடு தீயணைப்புத்துறை!
காவலுக்கு கடமை உணர்வோடு காவல்துறை!
பார்த்துக்கொண்டு இருக்கின்றன கோழிகள் !!
ஓர் உயிரை காப்பாற்ற ஒற்றுமையாய்!
ஒட்டுமொத்த ஊரும் திரண்டு வந்துநிற்கிறது!
பார்த்துக்கொண்டே இருக்கின்றன கோழிகள் !!
காப்பாற்றிய திருட்டுப் பூனையை கையிலேந்தி !
ஆர்ப்பாட்டமாய் ஊர்நுழையும் அதிரடிவீரர்கள்!
பார்த்துக்கொண்டே இருக்கின்றன கோழிகள் ! !
உயிர்பற்றிய கவலையோடு அப்பாவியாய்!
உயிர்பறிக்கவே வளர்க்கப்படும் உயிர்கள் !!
பார்த்துக்கொண்டே...!!
வாழும் வாய்ப்புக்காகக் காத்திருக்கும் - ஆனாலும்!
வழியேயில்லாத ஆயிரமாயிரம் அனாதை சீவன்கள் !!!
சாட்சிகளாய்ப் பார்த்துக்கொண்டே