கறுப்பு நாய் - கருணாகரன்

Photo by Didssph on Unsplash

கறுப்பு நாய்!
அதன் நிழலை விடக் கறுப்பாயிருக்கிறது!
அதன் குரைப் பொலியை விடவும்!
நிழலின் மௌனம்!
வலியது, பெரியது!
கறுப்பு நாயின் !
கோபத்துக்கும் பாய்ச்சலுக்கும்!
ஈடு கொடுத்தபடி நிழலும்!
நாய் தூங்கும் போதும் !
உறங்குகிறது நிழலும்!
நிழல் நாய்க்கிருக்குமா!
மோப்ப வாசனையும்!
பழகிய திசைகளின் ஞாபகமும்!
கறுப்பு நாய் சார்;ந்திருக்கிறது!
எப்போதும் நிழல் நாயில்!
நிழல் நாயின் மௌனத்திலிருக்கிறது!
கறுப்புநாயின் !
உயிர்
கருணாகரன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.