இது ஒரு மனித வீட்டின் சாளரம்!
இதில் மெல்லிய காற்று நழுவி !
கட்டாந் தரையில் உட்காரும்.!
நாற்றமும் கலந்த மனிதனின் உஷ்ணத்தை!
வரவழைத்து விசாரிக்கும் வழி.!
வலக்கையும் இடக்கையும் சந்திக்காமல்!
பெரிய தொரு மலையை நகர்த்தி!
ஒய்யாரமாய் படுத்து அசைபோட!
வைக்கோலும் பசுமைப் புல்லும்!
ஒரு மாட்டு வண்டியில் சுமந்த நற்செய்தியை!
இந்த சாளரம் வழிவிட்டு மூடியதும் உண்டு.!
யாரையும் அறியாத!
தென்றலை மட்டும் சுவாசிக்கச் செய்ய !
ஒரு அறிவை இழந்து நிற்க இயலாத சாளரம்.!
யாரையும் நம்பி!
யாருக்கும் !
அகழி யுத்தம் புரிய முடியாது!
நாம் தோண்டப்படும் மடுவுக்குள் வைத்து!
முடப்பட்டுவிடுவோம்.!
எப்போதும் கட்டுப் பெட்டியை கவனமாக வைக்க.!
- டீன்கபூர்

டீன்கபூர்