தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

திறக்கப்பட்ட கதவுகளின் வழியே

த.சரீஷ்
கடந்துசெல்லும் காலங்களின் ஊடாக !
திறக்கப்பட்ட !
கதவுகள் மூடப்பட்டும் !
மூடப்பட்ட கதவுகள் !
மறுபடி திறக்கப்பட்டும் !
சிலவேளைகளில் மட்டும் !
காற்று வருமென்ற !
எண்ணங்களோடுதான் !
காத்திருப்பு தொடர்கிறது எங்களுக்கு...! !
எங்களின் எதிர்காலம் குறித்த !
பேச்சுக்களை விட்டால் !
நிகழ்காலம் குறித்த !
நாற்காலிகளின் கனவுகள் !
வெறும்... !
கனவாகவே போய்விடும் அவர்களுக்கு...! !
இதனால்தான் !
அன்போடு பேசலாமென !
அக்கறையோடு அவர்கள் !
இடைக்கிடையே வருவார்கள்...! !
வாருங்கள் !
ஊரெல்லாம் ஓடித்திரியலாமென !
அழைத்துப்போவார்கள் !
சுமக்கமுடியாத சுமைகளைஎல்லாம் !
நெஞ்சிலே சுமந்துகொண்டு !
அவர்களின் பின்னாலே ஓடித்திரிவோம் !
கடைசியாகக்கூட அவர்கள் !
ஒன்றிலிருந்து ஆறுதடவைகள் !
நாடுநாடாய் அழைத்துப்போனார்கள். !
இருப்பினும்... !
ஒரே ஒரு அதிருப்திதான் !
அவர்களிகன்மீது எங்களுக்கு...! !
ஆறுதடவைகள் பேசலாமென !
எங்கெங்கோ அழைத்துப்போனவர்கள் !
ஒரு தடவையாவது பேசியிருக்கலாம்...!!! !
-- த.சரீஸ் !
27.01.2006 (பாரீஸ்)

கொஞ்சம் கூதல்... நிறையக் காதல்

மன்னார் அமுதன்
கூதல் என்னைக்!
கொல்கையில்!
உன் நினைவுகள்!
கொளுத்திக் !
குளிர் காய்கிறேன்!
தலையணை அணைத்து!
மெத்தையைக் கிழித்து!
உன்பெயர் புலம்பையில் -எனைப்!
பரிதாபமாய்ப் பார்க்கின்றன !
பஞ்சுகள்!
அலைபேசியில் உளறிக்கொண்டே!
நான் வரைந்த உன் பெயர்!
வெள்ளைப் படுக்கையுறையெங்கும்!
ஓவியமாய்ச் சிரிக்கிறது!
நீ விட்டுச் சென்ற !
ஒற்றைத் தலைமுடி..!
இரட்டைக் காதணி..!
கண்ணாடிப் பொட்டு..!
உடைந்த வளையல்..!
கொலுசுச் சத்தம்...!
ஈர முத்தம்..!
என எல்லாவற்றையும் !
சொல்லிவிடவா...?!
பூக்கிறாய், !
வேண்டாமென வேர்க்கிறாய்!
விட்டு விடுவென வெட்கப்படுகிறாய்... !
இத்தனைக்கும் காரணம்!
இந்த வெட்கம் தானே!
ஒவ்வொருமுறை தவம்!
கலைந் தெழுகையிலும்!
நான் வியர்த்துவடிவேன்!
நீ வெட்கப்படுவாய்!
பிறகென்ன!
மீண்டுமொரு தவம்...!
கட்டியணைக்கையில்!
வெட்டிச் சுழிப்பாய்...!
விடிந்து பார்க்கையில் (என்மேல்)!
மடிந்து கிடப்பாய்!
ஓட்டைச் சிரட்டையில் !
ஊற்றிய தண்ணீராய்...!
உனைநோக்கி ஒழுகி!
உருகி ஓடுகிறது மனம்!
இன்றோடு ஒன்பதுமாதம்!
கழியுமொரு யுகமாய்!
இன்னும் பத்து நாட்கள்!
தலைச்சனைப் பெற்றெடுக்க!
தாய்வீடு சென்ற நீ!
சேயோடு வருவாய்!
மார்பு அவனுக்கு!
மடி உனக்கு!
மீண்டும் கூதலில்!
பஞ்சணைகள் பத்திக்கொள்ளும்!
தங்கச்சி வேண்டாமா!
தலைச்சன் விளையாட

கோழி.. இன்றைய சந்தை நிலவரம்

கு.சிதம்பரம், சீனா
01.!
கோழி !
---------------!
என் குழந்தைக்கு தினம்!
ஓரிலவச முட்டையைக் கொடுத்து!
பதிலுக்கு தனது அலகால்!
எங்கள் இரத்தத்தை உறிஞ்சுகிறது!
சேவல் இன்றி குப்பைகளை!
தனதிறகால் அணைத்துக் கொண்டு!
முட்டையிடும் நாத்திகக் கோழி. !
02.!
இன்றைய சந்தை நிலவரம் !
---------------------------------------!
அமெரிக்காவும் சீனாவும் இந்தியாவின்!
இன்றைய சந்தை நிலவரத்தை பார்கின்றன. !
மலிவு விலைப் பட்டியல்:!
வெங்காய விலை கிலோ 80 ரூபாய்!
துணை வேந்தர் விலை 1 கோடி!
பல்கலைக் கழக பேராசிரியர் விலை 15!
லட்சம்!
கிராம நிர்வாகி விலை 5 லட்சம்!
பேருந்து ஓட்டுனர் விலை 2 லட்சம்!
மத்திய அமைச்சர் விலை 600 கோடி!
ஜனநாயகத்தின் விலை 1.76 லட்சம் கோடி!
விற்றப் பொருள் திரும்பப் பெறபடமாட்டாது!
இப்படிக்கு நிர்வாகம். !
இச்சி... இச்சி... இப்பழங்கள்!
எல்லாம் அழுகி நாற்றமெடுக்கின்றன!
இனி இந்தப்பக்கமே வரக்கூடாது!
சீனாவும் அமெரிக்காவும் திரும்பிசெல்கின்றன

நழுவுதல்.. உருண்டைச்சோறு

முத்துசாமி பழனியப்பன்
01.!
நழுவுதல்!
---------------!
நடைபற்றி வந்த நிலா!
கால் இடறிக் குளத்தில் விழுந்து!
தத்தளித்துக் கொண்டிருந்தது!
அதைக் கைகளில் அள்ளியள்ளி!
கரையில் ஊற்ற!
மீனைப் போல!
நழுவி நழுவி மீண்டும் மீண்டும்!
குளத்தில் சேர்கிறது!
02.!
உருண்டைச்சோறு!
------------------------!
அப்பா மிரட்டுவதோடு சரி!
அம்மா வற்புறுத்தி ஊட்டுவாள்!
அக்கா பிடுங்கித் தின்பதாய் பாசாங்கு செய்வாள்!
தாத்தா இருக்கும் வரை யானைச் சவாரிக்கு பஞ்சமில்லை!
பாட்டி தான் ஒரு வாய்க்கு ஒரு கதை சொல்லி!
தானாகவே என் வாய் பிளக்க வைப்பாள்

தீவிரவாதம்

எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ
நெட்டி முறித்து எழுகையில் கூடவே எழுகின்றன!
மனித மாமிச வாசனைகள்!
என் எழுதலுக்காகவே ஏங்கிக் கிடந்தவனாய்!
அறுபட்ட பிண்டமொன்றை தொப்பென முன் கடாசி!
தோய்ந்த குருதி துடைத்தபடி விரைகிறான் ஒருவன்!
நேரிய குறுகிய அகன்ற பாதைதோறும்!
இளித்தபடியான சிரங்கள் இறைந்து கிடக்கின்றன!
தெரு முச்சந்தியில் மண் கவ்விக் கிடக்குமோர்!
எதுவுமற்ற எலும்போட்டுடலில் இணைக்கச் சொல்லி!
கெஞ்சும் தோரணையில் என் பால் நீண்டு கிடக்கிறது!
பிண்டமற்ற வெற்று இடக்கையொன்று!
ஒரே இடத்தில் மாண்ட ஒரு குழும எண்ணிக்கையை!
இன்னோரிடத்துக் குழுமம் மிஞ்சியதாக!
நின்று துணிந்து மரண ஓலமிட்டுக் கொண்டிருக்கிறது!
வானொலிகளும் தொலைக்காட்சிகளும்!
மனிதனாயிருந்திருக்காத பெருமூச்செறிந்தபடி!
வடித்திறக்கிய தூய வெண் சோற்றில்!
இழுத்திரைத்த இரும்பு வாளியில் ததும்பம்!
கிணற்றூற்று நன்னீரிலெல்லாம்!
ததும்புகின்றன இரத்தச் சாயங்கள்!
தொட்டுத் தொடரும் தீவிரவாதங்களென்று!
சாடிக் கழித்து பின் கூடியும் கழிக்கிறார்கள்!
பெருஞ்ஜன ஆளுமை ஆதிக்கர்கள்!
இருண்டு சூழ்ந்த தோலுலகைக் கிழித்து!
கருக்கள் ஜனித்திறங்கும் பாதையைப் போல்!
மாள நேரும் பாதையும் ஒருமையாயிருந்திருக்காத!
கைசேதத்தில் தேகம் நோகிறார்கள் எஞ்சியவர்கள்!
!
-எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ

ஓங்கி ஒலிக்கப்போகிறோம்

த.எலிசபெத், இலங்கை
காயங்கள் காய்ந்தாலும்!
வடுக்களென்றும்!
வலியினை பரிந்துரைத்திக்கொண்டேயிருக்கிறது...!
வெற்றிக்களிப்பில்!
வீரமெனப்படுவது!
மூழ்கிக்கிடப்பினும்!
முறித்துப்போட்ட எம்!
முழு நிலவுகளை எந்த வானம்!
முழுமையாக தந்திடும்...!
இருகிய இதயத்தினை!
இறைவழியின் துணைகொண்டு!
சுமைக‌ளின் வ‌ழித‌னை!
சுத்த‌மாய் ம‌ற‌க்க‌த்தான்!
நித்த‌மும் ம‌கிழ‌த்தான்!
நிக‌ழ்கால‌ந்த‌னை தேடுகிறோம்...!
உற‌வுக‌ளை இழ‌ந்து!
உரிமைக‌ளை துற‌ந்து!
ஊன‌ப்ப‌ட்ட‌போதும்!
உள்ள‌த்தால் எழுந்திட‌வே -ந‌ம்பிக்கையில்!
ஊன்றி நிற்கின்றோம்...!
விழுந்த‌வை விதைக‌ள‌ல்ல‌ எங்க‌ள்!
விடிய‌ல்க‌ள்!
வான‌ம் தொலைத்த‌ நில‌வாய்!
வாழ்வுத‌னை தொலைத்த‌ எம‌க்கு!
முகாம்க‌ளே முகாந்த‌ர‌மான‌து!
அக‌தி இல‌ச்சினையே!
அந்த‌ஸ்தான‌து...!
போதும் போதுமிறைவா!
போகும் வ‌ழித‌னை த‌ந்திடு!
புதிய‌ பாதை க‌ண்டிட‌!
புத்துண‌ர்ச்சி த‌ந்திடு!
புய‌ல்க‌ளை நாமும் எதிர்த்திட‌...!
விடைக‌ளுக்குள்ளே!
வினாவெழுப்பும் விள‌ங்காத‌வ‌ர்க‌ளாய்!
விழித்த‌தெல்லாம் போதும்!
ஒளிப‌றித்த‌ த‌ழைக‌ளை!
ஒதுக்கிவிட்டு!
ஒற்றுமை குர‌லோடு!
ஓங்கியொலிக்க‌ப் போகிறோம் -சுமைக‌ளையும்!
ஒழிக்க‌ப்போகிறோம்

மதகு செதுக்கும் உளியின்பால்

ரவி (சுவிஸ்)
பெண்ணியத்தை ஒரு தோசைபோல் !
சுட்டுக் காட்ட !
சவால்விட்டபடியே வந்தனர் அவர்கள். !
இரத்தமும் சதையுமாய் உடல் !
மாறுதலை நேசித்து !
வளர்கிறது !
நம்மைச் சுற்றியதெல்லாம் மாறுகிறது !
மாறாத தத்துவங்களை திணித்தவர்களும் !
காணாமல் போயினர். !
ஆனாலும் கல்தோன்றா காலத்து முன் தோன்றியவர்கள் !
நாம் !
கலாச்சார உளியுடன் அலைகின்றோம் !
பெண்சிலை வடிக்க. !
காதலின் வயப்படலில் எழும் !
உணர்வுகளை !
பெண்ணிடமிருந்து களவாடுகிறாய். !
போதைப் பொருளாய் !
மிதக்கிறாள் அவள் உன் நினைவில். !
பெண்விடுதலை என்றதுமே !
பெண்குறிமேல் மொய்க்கும் கருத்துகளோடு !
இரைச்சலிடும்வரை !
பெண்ணியம் என்ன !
பெண்ணையும் நீ !
புரிந்துகொள்ள முடியாது போ! !
- ரவி (சுவிஸ்,24122003)

முடிச்சுக்கள்

கவிதா. நோர்வே
எமன் கைகளில் !
இருந்தா எறிப்படுறது?!
பாசக்கயிறுகளாய்!
வீசப்படும் ஒவ்வொரு!
முடிச்சிலும்!
எனது உணர்வுகள்!
இறுக்கபடுகிறது!
வலியில் இருந்து!
விலகும் அவசரத்தில்!
தொலைந்து போகிறது!
எனது சித்தம்!
ஒவ்வொரு முடிச்சுக்களாய்!
மூச்சிரைக்க !
அவிழ்க்கும் அறுக்கும்!
கணங்களையும்!
பயன் படுத்தி!
எறியப்படும்!
புதிய முடிச்சுக்கள்!
அகோரமாய்ச்சிரிக்கின்றன!
வலுவிழந்து தொய்ந்த!
என் கைகளில்!
விழுந்திழுக்கிறது!
ஒரு கொடும்பாறை!
என் வளையல்கள்!
நொருங்கி!
கொட்டிக்கிடக்கிறது!
கிழிந்து கழன்ற!
என் புடைவைக்கருகில்!
அவையள்ளி நிமிர்கையிலே!
நிற்கிறாய் நீ!
நீ எறிந்க !
வார்த்தைக்கயிறுகளும்!
மயான அமைதியும்!
அறுந்து கிடக்கிறது!
எம்மைச்சுற்றி!
உன் முகத்தில்!
விரிந்து நிற்க்கும்!
திருப்தியில்...!
எந்த வார்த்தையும்!
சிந்திவிடாமல்!
உன்னையும் தாண்டி...!
பயணப்படும் !
எனது வாழ்க்கை...!
குற்ற உணர்வுகளை!
இனியாவது தொலைக்கட்டும்.!
-கவிதா நோர்வே

மரணமும் மனிதர்களும்

ரா.கணேஷ்
பள்ளிக்கூட வாசல்..!
மிட்டாய் காரன்!
இறந்து போனான்!
வடக்கே போன!
மகனோ!
வரவேயில்லை..!!
பள்ளிக் குழந்தைகள்!
விடாமல் அழுதன..!!
மிட்டாய் காரி!
மிட்டாய் விற்கத்!
துவங்கினாள்...!?!
-ரா. கணேஷ்

எனக்காகவே ஓர் எறும்பு

டீன்கபூர்
ஒரு சீனிக்கட்டியை இழுத்துச் செல்லதைப்போல!
என்னை லாவகமாகப் பிடித்துச் செல்கிறது!
ஓர் எறும்பு!
என் செவிகள் இழுக்கப்பட்டு!
தலையில்; ஒரு குட்டும் போட்டு அழைத்துச்செல்கிறது. !
தலைமையிடம் நான்; தவறாகப் பேசப்படுகிறேன்.!
எனது ஒவ்வொரு அங்கங்களும் எறும்பின்!
கோர நகங்களால் கிழிக்கப்பட்டு!
துண்டுகளாக்கப்பட்டு!
இனங்காண இயலாத ஒரு நிலத்தின் துளைக்குள்!
அடக்கப்படுகின்றன.!
தலைமை துவைத்தெடுத்த என் பாசம்!
அவர் மேசையின் மீது!
ஒரு மொட்டைக் கடிதமாக அல்லது!
சுவர்களின் பூச்சுக்களில் பேசப்படுகின்றன.!
மானம் என்பது உயிர்; இருக்கும்வரை தான்!
அழகிய கனவு இயற்கையாக அடுக்கப்படும்வரை தான்!
வெளிச்சம் இருளுக்காகவே என்பதை!
எறும்புகளும் மறந்தே விட்டன.!
எலியின் மரண வேதனை பூனைக்கு!
எங்கு தெரியப்போகிறது?!
அதுக்கு விளையாட்டு!
எனக்காகவே ஓர் எறும்பு படைக்கப்பட்டிருக்கிறது.!
தினமும் நான் இழுத்துச் செல்லப்படுகிறேன்.!
கொல்லப்படுகிறேன்.!
ஒரு மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வரை.!
!
-- டீன்கபூர்