நண்பா!நீ நம்பித்தான் ஆகவேண்டும்.!
சத்தியமாக!
தீதும் நன்றும் பிறர்தர வாரா.!
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ !
உடை கொண்டு உடம்பு மறைப்பதை!
நாகரிகம் என்றவன்!
இன்று!
உடை விலக்கி உடம்பு காட்டி!
நாகரிகம் என்னும்போது !
நீ நம்பித்தான் ஆகவேண்டும்!
தீதும் நன்றும் பிறர்தர வாரா.!
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥!
எரிதழல் எடுத்து,விலங்கு விரட்டிய!
மனிதனவன்!
இன்று!
எரிதழல் கொண்டு,மனிதம் கொன்று!
விலங்காய் மாறும்போது!
நீ நம்பித்தான் ஆகவேண்டும் !
தீதும் நன்றும் பிறர்தர வாரா.!
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥!
காணிநிலம்,கணநேர ஆகாயம்,!
சின்ன தீப்பெட்டி,!
சுவாசிக்க !
சுத்தமானகாற்று,!
சின்ன சின்ன பொட்டலங்களில்!
சிறை இருக்கும் குடிநீர்.!
பஞ்சபூதங்களை !
பணத்தின் மறுவடிவமாய் பார்க்கும்போது!
நீ நம்பித்தான் ஆகவேண்டும்!
தீதும் நன்றும் பிறர்தர வாரா.!
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ !
மழை கொடுக்கும் மரங்களையிம்!
பச்சை நிற உயிர்களையிம்!
துண்டு துண்டாய்!
வெட்டியவன்!
இன்று!
பயிர் பச்சை செழிக்க வேண்டி!
வான் நோக்கி!
தவமிருப்பதை காணும்போது!
நீ நம்பித்தான் ஆகவேண்டும்!
தீதும் நன்றும் பிறர்தர வாரா.!
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥!
நண்பா!நீ நம்பித்தான் ஆகவேண்டும்.!
சத்தியமாக!
தீதும் நன்றும் பிறர்தர வாரா

அருண்மொழி தேவன்