முழுமை - s.உமா

Photo by FLY:D on Unsplash

ஆண்மை என்றால்!
ஆளுமை!
அறிவு!
வலிமை!
வீரம்!
தலைமை!
தைரியம்!
வேகம்!
உறுதி!
பெண்மை என்பது!
மென்மை!
பொருமை!
கணிவு!
பரிவு!
பாசம்!
அன்பு!
அடக்கம்!
அடக்கமில்லா ஆளுமை - ஆகங்காரம்!
அன்பில்லா அறிவு - வீணாகும்!
அறிவில்லா அன்பு - வீணாக்கும்!
பரிவு இல்லா தலைமை - சர்வாதிகாரம் !
தைரியமில்லா அடக்கம் - கோழையாக்கும்!
கணிவு இல்லா வீரம் - அழிக்கும் !
மென்மையில்லா உறுதி - உடைக்கும்!
விவேகமில்லா வேகம் - பாழாகும்!
ஆண்மை கொண்ட பெண்ணும்!
பெண்மை கலந்த ஆணும்!
புகழ் பெரும்!
பெருமை தரும்!
பேராற்றல் பெரும்!
முழுதாகும் வாழ்வு!
முயன்றுதான் பாருங்களேன்...!
உமா
s.உமா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.