சாமியென்பார், பூதமென்பார்!
வாய்வழியே லிங்கமெடுப்பார்!
காவியணிவார், விபூதியணிவார்!
அடியேன் எனதுள்ளம்!
மாசற்ற வெள்ளையென்பார்!
கணக்கில் வராத கறுப்புப் பணத்தை!
பீரோவில் பூட்டி வைத்துக்கொண்டு !
அவனியிலே!
பெண்களைத் தெய்வமென்பார்!
தேடிப் போய் அருள் வேண்டி!
காலில் விழும் மங்கையருடன்!
மணக்கோலத்தில் காட்சியளிப்பார்!
மறுநாள் செய்தித்தாள்களிலே !
புலால் உண்பது மகாபாவமென்பார்!
ஜீவன்களனைத்திலும் ஒளிரும்!
தெய்வச்சுடரை வணங்குவதே!
ஜீவகாருண்யமென்பார்!
தன் ஆயுள் அதிகரிப்பதற்காக!
செய்யப்படும் மகாயாகங்களில்!
ஆடுகளைப் பலிகொடுப்பார் !
நீ குடியிருக்கும் வீட்டின் அடியில்!
தங்கப் புதையலிருக்கு!
அதைக் காவலிருக்கும் மோகினியைச்!
சாந்தப்படுத்த உரிய பரிகாரமிருக்கு என்பார்!
சில மாதங்களில்!
கிடைக்கப்போகும் புதையல் கனவில்!
வீடு,நகை சொத்தனைத்தையும்!
கபடவேடதாரியிடம் இழந்துவிட்டு!
அடுத்த வேளை உணவிற்கு!
வாசலில் கையேந்தி நிற்பவரை!
ஆத்திரங்கொண்டு கையாட்களை ஏவி!
துரத்தியடிப்பார் !
அப்பன் சொல்பேச்சு கேட்டு!
அடங்கி நடக்காத பாலகனை!
அழைத்து வந்தால்!
அவனுள்ளே இருந்து ஆட்டுவிப்பது பேயென்பார்!
வேப்பிலையால் ஓட்டுகிறேன் அப்பேயையென்று!
அச்சத்தை அவன் இளரத்தத்தில் செலுத்திடுவார் !
கரியமிலவாயு கலந்து!
காற்று மாசடைந்து வருவதால்!
பூமி வெப்பமாகி!
வானிலை மாற்றங்கள் ஏற்பட்டு!
மழை பொய்த்துப்போனதை உணராமல்!
ஊரைக் காவலிருக்கும்!
‘ஆத்தா’ வின் கோவம் எனக் கருதி!
கழுதைக்கு கல்யாணம் செய்து வைக்கும்!
ஜனக்கூட்டம் இருக்கும் வரை!
முகமூடி அணிந்துள்ள போலிகள்!
முற்றும் துறந்த முனிவராக மகுடமணிந்து!
மண்ணில் மன்னர்கள் போல்!
வலம் வருவர். !