தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

அவஸ்த்தை

கவிதா. நோர்வே
இமைகள்!
மூடியே கிடக்கின்றன!
நீ என்ற நினைவுகளோடு!
இரத்த நாளங்களில்!
அவஸ்த்தைகளின்!
அணிவகுப்பு!
கால் நகங்களிலும்!
நடக்கிறது!
உணர்ச்சிகளின் ஊர்வலம்!
சோர்ந்து கிடக்கும்!
உடல் கிழித்து!
வேகமெடுக்கிறது!
இதயம் மட்டும்!
இந்த அவஸ்த்தையின்!
உச்சத்தை!
அடைந்திருந்தால்...!
போதிமரத்தை புறகணித்திருப்பானோ!
புத்தனும்?!
நீ என்ற மந்திரத்தில்!
என்னை மறந்த நிலையிது!!
ஒன்றையே!
நினைப்பதுதானே தியானம்!
அப்படியானால்!
சரியான இடம்தான்!
காதல்! !
அவஸ்த்தையின்!
ஆக்கிரமிப்பில்!
ஆழ்ந்து விடுகிறது!
என்!
உறுப்புகள்...!
காதல் போதிமரத்தலிருந்து!
உதிர்ந்து கொண்டிருக்கிறது!
என்றும் புதியாய்!
உன் நினைவுப் பூக்கள்..!
மனதில்!
ஏந்திய வண்ணம்!
தியானித்திருக்கிறேன்..!
இன்னுமா புரியவில்லை!
உனக்கு!!
!
-கவிதா நோர்வே

சோம்பலை துடைத்தெழு

அகரம் அமுதா
பொன்பெறும் பொழுதினை போக்குகிறாய் - மனம்!
பொறுப்பிலா தனத்தினைத் தேக்குகிறாய்!!
உன்பலம் அறியா துறங்குகிறாய் - மதி!
ஓம்விட ஏனோ தயங்குகிறாய்!
குருதியை வியர்வாய் சிந்தாமல் - வியர்!
குளத்தினை குருதியாய் கருதுகிறாய்!
சிறுதுயர் வரினும் சோர்ந்திடுவாய் - அது!
சிறுமை என்பதை மறந்திடுவாய்!
மண்ணை முட்டா சிறுவிதையும் - தளிர்!
வளர்த்தே மரமாய் வருவதில்லை!
சிந்தை செய்யா சிறுமதியால் - சிறு!
துரும்பைப் பெயர்க்கவும் முடிவதில்லை!!
முடவனும் முயன்றால் மலைதுரும்பு - நகர்ந்(து)!
உருக(ல்)லை சிதைத்திடும் சிற்றெரும்பு!
கடவுளும் உதவார் மலைத்தவர்க்கு - இதை!
கருத்திடு! சோம்பல் குணமொதுங்கு!!
ஒட்டும் மண்தான் ஒட்டுமெனும் - ஒரு!
ஓட்டைப் பழமொழி சொல்லாதே!!
முற்றும் அதையே நம்பாதே - பி(ன்)னம்!
முதுமையில் துடித்தே வெம்பாதே!!
காலம் என்பது உயிராகும் - அது!
விழுந்தால் முளைக்கா மயிராகும்!
மூலை எள்ளவர்க் குலகாகும் - இதை!
முற்றும் உணர்ந்தால் உயர்வாகும்!!
கவிதை: அகரம் அமுதா

பூக்கள் ஆகிய

நிஹ்மத்
பூக்கொடுத்துத்தான் புரியுமோ !
என் நேசம் ! !
இத்தனை காலம் !
என் கண்கள் சொல்லியது !
உனக்குப்புரியவில்லை ! !
புரிந்து கொள்வதில் நீ தாமதம் !
புரியாமல் கொல்வதில் நீ முந்தி... !
எந்தத் துன்பமெனினும் !
இதழ் கண்டிட்டால் !
மறைந்தோடிவிடும் ! !
பூவிலும் சரி !
உன் புன்னகையிலும் சரி... !
முடிந்தால் !
என் நேசிப்புகளோடு !
நீ மோதிப்பார் !
நான் சாய்ந்திடுவதில்லை ! !
நம்பிக்கை தரும் !
தென்றல் மோதிச் சாய்ந்திடாத !
என் தைரியப்பூக்கள்... !
நான் பார்க்கையில் !
வரம் தருவது !
போலிருக்கும் ! !
நீ பார்க்க வேண்டி !
தவம் தருவது !
போலிருக்கும் ! !
சுயநலப்பூக்கள்... !
இனி என்னிதயத்தில் !
உன் ஞாபகங்கள் !
நிரம்பிட இடமில்லை !
நீ நிறைந்ததால் இடமில்லை ! !
பூக்கள் இடம்பெறலாம் !
ஞாபகங்கள் வாசம்பெற... !
பூத்ததும் !
வாடிப்போகும் !
மலர்போல் வஞ்சகமில்லை ! !
உன் அருகாமையில் !
ஒவ்வொரு நொடியும் !
பூத்திடுவேன் !
ஆயுள்வரை அப்படியே... !
உனக்கு !
வெட்கம் கற்றுத்தந்தது !
எம்மலரோ தெரியவில்லை !
அவை திணறிப்போயிருக்கும் ! !
நீ எனக்குக் கற்றுத்தந்த !
அன்பின் அழகினைக் கண்டு... !
செடிகளின் பிடிப்பிலிருந்து !
முழுவதும் கொட்டிப்போய் ! !
தரையோடு காய்ந்துபோய் ! !
இவ்விதழ்களின் நிலைதான் !
உன் சந்திப்பினில் !
என் சோகங்களின் நிலை... !
ஒருவேளை உனக்கு !
மலரும் என் மனதும் !
ஒன்றெனப்படலாம் ! !
காய்ந்துவிட்டால் !
வேறு மலர் உனக்கிருக்கலாம் !
வேறு நீ மலருக்கில்லை... !
பூக்கள் அழுது !
பார்த்ததில்லை நான் ... !
கல்லெறியும் குளம் !
என்னோடு சேர்த்து !
கலங்கியழுதது நிலா ! !
கல் நிறுத்திய பொழுதில் !
அழகாய் நிலா ! !
மனம் இன்னும் அழுதபடி... !
நான் அழுது !
பார்க்கின்றன பூக்கள்... !
!
---நிஹ்மத் nih

கைம்மாறு

பொலிகையூர் சு. க சிந்துதாசன்
என் மனவெளியில்!
விதைக்கப்பட்ட வலிகளில் இருந்துதான்!
வாழ்விருப்பின் அடையாளம்!
அர்த்தப்படுத்தப்பட்டது.!
அவ்வலியின் உச்சமே என்னுள்!
மலைசுமக்கும் மறத்தையும் தந்தது.!
என் தல யாத்திரைகள் ஒவ்வொன்றும்!
தங்குமடங்களிலேயே!
நிறைவுற்றுப் போயினவெனினும்…!
மாற்றீடாய்!
தங்குமடங்களைத் தரிசனத்துக்கான!
தலங்களாய்!
ஆக்கும் திறனைத் தந்ததும்!
அவ்வலிகளே.!
வலிகள் ஏனோ வற்றாத ஊற்றாய்…!
பீறிட்டுக் கொண்டிருந்தன.!
இருந்தும்!
என் மனவாழம்!
அறியாமலவை!
தோற்றே போயின.!
குருசேஸ்த்திரத்தில் என் வாழ்வு!
பாண்டவர்கள் பக்கத்தில் இருந்தாலும்!
துரியோதனன் எனக்கு!
உயிர்ப்பிச்சை தந்துள்ளான்.!
அர்ச்சுணன் கையில்!
நாகஸ்திரம் இருந்திருந்தால்… அது!
பலமுறை ஏவப்பட்டிருப்பதுடன்!
பல தலைகளையும் கொய்திருக்கும்.!
காக்கப்பட்டவன் எவனெனினும்!
‘காத்தவன்’ கடவுளல்லவா!
கணமேனும் அவனை!
மறக்கிலேன்

எச்சங்கள்.. கண்ணாடி பெட்டியை

ரசிகவ் ஞானியார்
01.!
எச்சங்கள்!
--------------!
முகம் மறைத்தபடி கைதாகும் !
அழகிகளின் !
விடுதிகளில் எல்லாம்!
புறவாசல் திறந்தே இருக்கின்றது!
முன்வாசலில் உயிர்த்தெழுபவர்கள் !
இயேசு வருவதற்குள்!
கல்லெறிகின்றார்கள் !
02.!
கண்ணாடி பெட்டியை உடைக்கும் கண்ணீர்கள்!
--------------------------------------------------------------!
புன்னகையோடு வரவேற்கின்ற விமான பணிப்பெண்கள் ...!
முன் இருக்கையிலிருந்து சிரிக்கின்ற குழந்தை... !
பக்கத்து இருக்கை பயணிகள் ...!
இப்படி சோகத்தை !
யாரிடமுமே கடத்திவிடாமல் !
இயல்பாய் இருப்பதாய் நடிக்கும் அந்தப் பயணத்தில்,!
நான்!
மரணத்தின் வலி சுமந்து..!
கண்ணாடி பெட்டியை உடைக்கும் !
கண்ணீர்கள் சேகரித்து செல்கிறேனென....!
தெரிந்திருந்தால்!
நிச்சயமாய் அறிவித்திருக்க மாட்டார்கள்!
Have a pleasant journey!
என்று

விஞ்ஞானம்

துரை. மணிகண்டன்
மனிதனை ஆட்டிவைக்கும் மகத்தான் ஞானம்!
மனித உயிரிகளே இனி மன்னில் உங்களுக்கு வேலையில்லை!
உணவு சமைக்கும் ஒப்பற்ற பணிக்கு இனி விடுமுறைதான்!
ஏனெனில் மாத்திரையில் உணவைப் பதப்படுத்திவிட்டனர்!
பாடசாலைக்குச் செல்லும் பட்டாம்பூச்சிகளுக்கு புத்தகம் தேவையில்லை!
உலகத்தை உட்கார்ந்த இடத்தில் பார்க்கும் கணினி வந்துவிட்டது!
எதிர்கால மனிதஜீவிகளே உங்களை ஆளப்போவது விஞ்ஞானம்தான்!
ஒவ்வொரு மனிதன் தலையிலும் ஒரு செயற்கைக்கோள் சுற்றும்!
ஒன்றுமட்டும் மனித பூச்சிகளே!
விஞ்ஞானத்தால் விபரீதம் பல... விரிவாகச் சிந்தியுங்கள்!
மனிதன் சொல்வது போல் விஞ்ஞானம் இருந்தால் மகத்துவம்!
விஞ்ஞானம் சொல்வது போல மனிதன் இருந்தால் விபரீதம்!
அறிவியல் கண்டுபிடிபுகளை ஆக்கமொடு வரவேற்போம்!
அழிவாய் இருந்தால் அடியோடு நிராகரிப்போம்...!
!
-துரை.மணிகண்டன்

நினையாத நினைவு

ஒளியவன்
பாதைகளிலேயே!
பயணம் செய்யும்!
உங்கள் வாழ்க்கையில்!
உடன்பாடில்லை எனக்கு.!
பயணங்களுக்கான!
பாதைகளை மெல்ல!
உருவாக்குவதில் மட்டுமே!
உள்ளம் போடுகிறது கணக்கு.!
திருமணம், குழந்தை,!
தீண்டும் காமம்!
இதிலெல்லாம் வீழாது!
இருக்க விரும்புகிறேன்.!
உழைக்கும் வரை!
உழைத்து வாழும் வரை!
வாழ்ந்து யாருக்கும்!
வருத்தமில்லாமல் போகிறேன்.!
என் கால்கள்!
எங்கு செல்கிறதோ!
அங்கே எனக்கொரு!
அழகிய குடில்.!
பள்ளம் வரினும்!
வெள்ளம் வரினும்!
அழியும் உலகில்!
வாசிப்பேன் பிடில்.!
எண்ணத்தின் போக்கில்!
வண்ணத்துப் பூச்சியாய்!
இயற்கை அழகில்!
குடிப்பேன் தேன்.!
இன்ப துன்பத்தில்!
இன்னும் தவித்தால்!
என் வாழ்க்கை!
எங்கும் வீண்.!
சிறகு முளைத்ததும்!
பறந்திடும் பறவையாய்!
துளிகள் பிறந்ததும் மேகம்!
துறக்கும் மழையாய் நானும்.!
!
-ஒளியவன்

விரிந்துசெல்லும் என் கனவு

கலியுகன்
வெட்டைவெளியாய்!
விரிந்து செல்கிறது என்கனவு!
எம் விடியலுக்கான அத்தியாயங்களைத்தேடி!
பரந்த வெளியெங்கும் சிதறிக்கிடக்கிறது!
குருதிதோய்ந்த மனித உடலங்கள்!
மனைகளும் மாடங்களும் கூட!
இடிந்தும் நொருங்கியுமாய்க்கிடக்கிறது!
என் கனவு நீழ்கிறது!
யார்யாரோ வந்துபார்த்து ஏதேதோ!
கதைத்துவிட்டுச் செல்கிறார்கள்!
எம்மைப்பற்றிய எதுவித பிரதிபலிப்புக்களுமில்லை!
சிதைந்துபோய்க் கிடக்கிறது என்தேசம்!
காகங்களும் பருந்துகளும் சிதறிய உடலங்களில்!
தமக்காய் இரைதேடிச் செல்கிறது!
என் கனவு மீண்டும் விரிகிறது!
எம் விடியலுக்காய் புதிய அத்தியாயங்களைத்தேடி!
-கலியுகன்

அழிந்த வார்த்தைகளும் ஆயிரம் அர்த்தங்களும்

இ.இசாக்
நீண்ட நாட்களுக்குப் பின் !
நேற்று !
உன் !
கடிதம் கிடைக்கப்பெற்றேன் !
பக்கமெல்லாம் !
என்றோ அறிமுகமான வார்த்தைகள் !
ஒவ்வொரு சொல்லும் !
யார் !
யாரையோ நினைவூட்டுகின்றன. !
நலவிசாரிப்புகள் !
அறிவுரைகள் !
உடல் நல ஆலொசனைகள் !
இன்னும் !
என்னென்னவோ !
எல்லாமும் எழுதியிருந்தீர்கள் !
எல்லோரையும் போல. !
ஆயினும் ஆயினும் !
அம்மா !
உன் !
கண்ணீர் துளிகள் பட்டு !
அழிந்திருந்த வார்த்தைகள் !
புதுப்புது !
அர்த்தங்களைச் !
சொல்லிக்கொண்டிருக்கின்றன எனக்கு

இருப்புணர்ந்து இளகும் நெஞ்சு

வ.ந.கிரிதரன்
உன்னைப் பார்க்கும் போதெல்லாம்!
உனக்குள் எனக்குள்!
பரவிக் கிடக்கும் வெறுமை!
கண்டு மனம் அதிரும்.!
உள்ளூம் புறமும் வெளியாய்ப்!
பரவிக்கிடக்குமிந்தப் பெருவெளி.!
சோகமேன் சகியே!!
உனைப் பார்த்து மட்டுமல்ல!
உன்னருகே கிளைதாவுமந்த!
அணில், அதனருகே தனித்துணவு!
தேடுமந்தச் சிட்டு,!
அவசர அவசரமாய் வீடு!
விரையுமந்த அந்த அராபிய மனிதன்!
ஆபிரிக்க அணங்கு!
ஆலயம் விட்டு ஆடிவரும்!
அந்த முதிய சிறிலங்காத் தமிழன்!
அந்த இந்திய மனிதன்!
அந்த எருது!
அந்த அமெரிக்கன்!
அந்த ஆங்கிலேயன்!
இவ்விதம் யாரைப் பார்த்தாலும்!
எதனைப் பார்த்தாலும்!
எனக்குத் தெரிவதெல்லாம்!
வெளியும்,கதியும்,முகிலும்,!
சுடரும்,சக்தியும் தானே.!
வெறுமைக்குள் வெறுமையாய்!
அரங்கேறும் நாடகங்கள்.!
சிறுதுளியாய்க் கணநேர இருப்பு.!
இருப்பினை இருத்திவிடுமொரு!
பொறுப்பு மட்டுமில்லையென்றால்...!
அதற்குள் தானெத்தனை ஆட்டங்கள்!!
அடிப்படையில் அனைத்துமொன்றே.!
இது கூடப்!
புரியாத பொழுதெனவே!
போகுமிந்த இருப்பினிலே!
இருப்புணர்ந்து இளகும் என் நெஞ்சே!.!