முடிவை நோக்கிய நெடிய பயணம்.. நான் !
01.!
முடிவை நோக்கிய நெடிய பயணம் !
--------------------------------------------!
நீலவானம் மேகங்களற்று!
நிர்வாணம் கொண்டிருந்தது!
வானில் வட்டமிட்டுக் கொண்டிருந்த கழுகு!
கோழிக்குஞ்சுகளை நோக்கி!
சடாரென்று விரைந்தது!
காலாதீதம் அக்கழுகின்!
அசுரவேகத்தில்!
என்னால் கண்டுணரப்பட்டது!
ஆதியிலிருந்த உயிர்களை!
அச்சம் கொள்ளச்செய்யும்!
மரணபயம்!
அந்தக் கோழிக்குஞ்சுகளைத்!
துரத்தியது, ஆனால்!
அந்தக் கூட்டத்தில்!
ஒரே ஒரு சேய் மட்டும்!
கழுகின் கால்களுக்கிடையே !
சிக்கிக் கொண்டது!
தற்போதைக்கு மரணபயம் நீங்கிய!
கோழிககுஞ்சுகள்!
சிறிது நேர கூச்சலுக்குப்பின்!
மண்குவியல்களை கால்களால் !
துழாவித் துழாவி!
இரையை பொறுக்க ஆரம்பித்தன!
சகதியின் அடியிலிருந்த மண்புழு!
உயிர் பயத்தில்!
மண்ணுக்குள் தனதுடலை!
விரைந்து இழுத்துக்கொண்டது. !
மரணபயம் வெவ்வேறு உருவில்!
உயிரினங்களை துரத்திக் கொண்டேயுள்ளது!
செய்கின்ற ஒவ்வொரு செயல்களும்!
எடுக்கின்ற பல முயற்சிகளும்!
மரண நிகழ்வுக்கே!
நம்மையறியாமல் நம்மை!
இழுத்துச் செல்கின்றன. !
!
02.!
நான் !
----------!
பறவைகள்!
பாடுகின்றன!
குதிரைகள்!
கனைக்கின்றன!
யானைகள்!
பிளீறிடுகின்றன!
நாய்கள்!
குரைக்கின்றன!
குழந்தைகள்!
மழலை பேசுகின்றன!
எவற்றையும் செய்ய!
தடையெதுவுமில்லை அதனுலகில்!
எல்லாவற்றுக்கும் சுவர் எழுப்பப்பட்டுள்ளது!
இவ்வுலகில்!
சுவர்கள் சிறையாகிப்போனதால்!
நான் கைதியானேன்!
ஏற்கனவே எழுதப்பட்ட!
தீர்ப்புகளுக்கு!
என்னையும் இரையாக்குவார்கள்!
இவ்வுலகத்தினர்!
பலிபீடமான இவ்வையகத்தில்,!
சுற்றித்திரியும்!
மந்தையாடுகளாய் நாம்

ப.மதியழகன்