புண்ணியம்..சோம்பேறி..இனி மீண்டு
சின்னு (சிவப்பிரகாசம்)
புண்ணியம் செய்தவர்கள்.. சோம்பேறி..இனி மீண்டு வருவாயோ இவ்வுலகே!
01.!
புண்ணியம் செய்தவர்கள்!
------------------------------!
ஆழக் கிணற்றினிலே!
நீர் ஊரும் தடம் இருக்கும்!
ஆள் இறங்கி!
துணி நனைத்து குடம் பிழிந்து!
குடம் நிறைத்த காலம் உண்டாம்!
காலமான அப்பத்தா சொன்னது!
மாடு மேயும் புல்லுக் காய்ந்து!
காய்ந்த மண் தலை காட்டி!
வரப்பும் வயலும் மண்ணாய்த் தெரிந்த காலத்தில்!
மலை நாடி!
சிறுபுல்லும் பெரும்புல்லும் சேர்த்து!
கண்ணி கட்டி கட்டுக் கட்டி!
பத்துக் கல் சுமந்து வந்து!
காங்கேயம் காளைகள் வளர்த்ததுண்டாம்!
அப்புச்சி சொன்னது!
விடிந்தால் குடிகிணறு வரண்டிடுமே!
நடுச் சாமம் வரை இருந்து!
நாழிக்கு ரெண்டு குடம் எடுத்தால்!
குடத்துக்கு நீர் இருக்கும் என!
சேந்திய காலம் உண்டு!
நானே கண்டது!
பின் வந்த அரசுகள் புண்ணியத்தில்!
மழை பெய்தாலோ இல்லையோ!
குடிநீருக்கு நீர் கிடைக்குது!
புண்ணியம் செய்தவர்கள்!
இதை செய்து தந்தவர்கள்!
!
02.!
சோம்பேறி!
-------------------!
!
வேதமும் புரியல !
விஞ்ஞானம் தெரியல !
உறவும் பிடிக்கல !
உறக்கமும் பிடிக்கல !
கனவில் வரும் காட்சி புரியல !
காவியத் தலைவர்கள் எனக்குப் பிடிக்கல !
அரசு நடத்த அரசியல் தெரியல !
நீதி சொல்ல அனுபவம் பத்தல !
படிக்கப் பிடிக்கல !
உழைக்கவும் பிடிக்கல !
பசி மட்டும் வாட்டி எடுக்குது !
பட்டினிச் சாவு என்னை நெருங்குது!
!
03.!
இனி மீண்டு வருவாயோ இவ்வுலகே!
-----------------------------------------!
கான மயிலாட !
கானகத்தில் களிராட !
வாடைக் காற்றோடு !
விளைந்த மரங்களுமாட !
இருளோடு இருளாக !
கோட்டான்கள் கவிபாடும் !
நாட்கள் கொண்டுவருவாயோ !
காரை வீடுகளும் !
கானகம் ஆகி!
மதங்களும் மறைந்து !
அறிவியல் அழிந்து !
ஆயுதங்கள் ஒழிய !
இனிதான அவ்வுலகை !
இனி மீட்டுத் தருவாயோ