என் விருந்தாளி
பத்மபிரியா
1, என் விருந்தாளி !
!
சீராய் பெருக்¢கிய முற்றத்தில் - மீண்டும் !
சின்னஞ்சிறு சிறகுகள் - இது அவற்றின் வேலைதான் !
முடிந்தவரை ஓரிரு சிறகுகள்-என் !
முற்றத்து எல்லைக்குள் விழும்படி !
கவனமாய் கோதி காற்றினில் அனுப்பும் !
கூடத்து கண்ணாடியில் முகம் பார்த்து திரும்பும். !
சீவி சிங்காரிக்க என் வீடுதான் கிடைத்ததா? !
!
கோதுமை நிறத்திலொன்று - மனைவி !
அடர் நிறத்திலின்னொன்று - கணவன் !
தம்பதியர் தங்குவதற்கு !
தடையேதுமில்லை என்வீட்டில் !
ஆனாலும் வேறு நல்ல வீடாய் பார்த்து கூடுகட்டி !
அடிக்கடி வந்து போகும் என் முற்றம் தாண்டி !
என்றைக்கேனும் சில மணி அரிசிகளைச் சிதறுவேன் !
சிறு அலகால் கொத்துவதை அருகிருந்து பார்ப்பேன்!
ஆனால் இனி . . . . கட்டாயம் பிடி அரிசி !
தினம் தினம் சிதற வேண்டும் - ஏன் எனில் !
கட்டுரையில் கரைந்திருந்தது இன்டியன் எக்ஸ்ப்ரஸ் !
‘’ சிட்டுக்குருவியினம் 80 விழுக்காடு அழிந்து விட்டது !
மீதமுள்ளதோ வெறும் 20 விழுக்காடு மட்டுமே’’ !
கண்ணீர் உப்பிட்டு கைப்பிடி அரிசியை வைத்தேன் - ஏனோ !
காணவில்லை இதுவரை என் சிட்டுக்களை. !
--------------- !
!
By - M. Padmapriya