இதயங்கள் அறுபடாத.. உன் புத்தகப் பை
வித்யாசாகர்
01.!
இதயங்கள் அறுபடாத கோபம் வேண்டும்!
---------------------------------------------------------------!
கோபத்தின்!
உச்சத்தில்!
வாழ்வின் அவலங்களே!
கைகொட்டிச் சிரிக்கின்றன,!
நரநரவென்று மென்ற!
பற்களின் நசுக்களில்!
இரத்த உறவுகளே!
சிக்கித் தவிக்கின்றன,!
உணர்ச்சிப் பொருக்கா!
நரம்புப் புடைப்பில்!
உறங்கா இரவுகளே கோபத்தின்!
சாபங்களாகின்றன,!
கோபம் ஒரு ஆயுதமென்று!
ஏந்தப்பட்ட கைகளில் - கூட !
வாளாய் வீசி அறுக்கப் பட்ட இதயங்கள் தான்!
கொட்டிக் கிடக்கின்றன,!
இளமை தொலைந்தும்!
முதுமை கடந்தும்!
மரணத்தின் உச்சம்வரை!
கோபத்தின் கறை அகலாமலே உயிர்களும் பிரிகின்றன,!
நட்பு மறந்து, நன்றி துறந்து!
கோபத்தால் துச்சப் படுத்தப்பட்ட உறவுகளை!
மீண்டும் சிரித்துக் கொள்ளும் ஓர் நாளில் !
கோபம்; முழுமையாய் மீட்டுத் தருவதேயில்லை,!
கைகொட்டி சிரித்த!
நான்கு பேர் சிரிப்பிற்கு,!
காலம் முழுதிற்காய் வீழும்!
ஒற்றை பழிச்சொல்லிற்கு,!
நிறைய வீடுகளின் காரணம் -!
வீண்கோபமெனும் ஒற்றை இழுக்கே,!
இதயங்கள் அறுபடாத!
கோபமும்,!
உணர்ச்சிப் பெருக்கலில்!
புரிதலும்,!
நன்மை பிறப்பிக்கும்!
நோக்கு-ம் கொண்டு -!
தனக்குள் தானென்னும் செருக்கும் விடுப்பின்!
அதையும் கடந்து வரும்... கோபமே!
சமுகத்தின்; மீப்பெறு ஆயுதமென்று கொள்க!!!
!
02.!
உன் புத்தகப் பை நிறைய,அந்த கண்ணீரும் சிரிப்பும்!!!
------------------------------------------------------------------!
நீ பிறந்தாய் !
எனக்குள் ஒரு பூ பூத்து!
அப்பா எனும் வாசமாய்!
உடலெங்கும் கமழத் துவங்கியது..!
பின் - நீ வளர வளர!
அந்த அப்பாயெனும் வாசத்தால்!
நானும் உலகெங்கும் மணம் பரப்பி!
மதிப்பால் நிரம்பி நின்றேன்,!
இன்றும் -!
உன்னிடம் நான் பெற்ற -!
பெரும் -!
பாடங்கள் ஏராளம், ஏராளம்,!
என் குழந்தை பருவ கேள்விகளுக்கு!
விடையும் -!
வளரும்போது சந்தித்த குழப்பங்களுக்குத்!
தீர்வையும் உன்னிடமிருந்தே நான் பெற்றுக் கொண்டேன்.!
அப்படி -!
உன் ஒவ்வொரு அழுகையும்!
சிரிப்பும் -!
என்னையும் சேர்த்து சிரிக்கவும் அழவும் சிந்திக்கவும்!
வைக்குமொரு தருணத்தில் தான்!
பாடங்களை சுமந்து நீ பள்ளிக்குப் போகத் துவங்கினாய்,!
போகும்போது இதயம் வழிய!
கண்ணீரோடு போகும் நீ!
வரும்போது புத்தகப் பை நிறைய சிரிப்பை மட்டுமே!
வாரிக் கொண்டு வந்தாய்,!
இது புரிந்தும் உன்!
அழும் விழிகளைத் துடைத்துவிட்டு!
எந்த கட்டாயத்தை சாதித்துக் காட்டிட!
உன் அழுகையினை மீறியும் உனைப்!
பள்ளிக்கனுப்புகிறோமோ' தெரியவில்லையடா...!
ஒரு வேலை எல்லோரும் சுமந்த!
ஊமை கனவுகளை போல் -!
பதில் அவசியமற்ற இடத்தில் எழும்!
கேள்வி போல் - நோக்கம் இன்றியும்!
புத்தகங்களுக்குள் உன்னை புதைய வைக்கிறோமோ - எனும்!
வருத்தம் ஒவ்வொரு நாள் உன்னை!
தனியே விட்டு வருகையிலும் உயிர் கொள்ளும் வதை!
என்பதை நீ -!
பிற்காலத்தில் புரிவாய்,!
என்றாலும் இந்த மூன்று வயதில்!
நான்கு வயதில் நீ எதைப் புரிந்து!
படிப்பென எடுத்துக்கொள்வாயென!
என்னை - இதை செய்யப் பணிக்கிறதோயிந்த சமூகம் ?!
தெரியவில்லை,!
எப்படியோ போகட்டும் அதலாம், இனி நீ!
வீட்டிலேயே இரு,!
விரும்பும் போது போ, படி, யென்று!
கைகட்டிக் கொண்டுவிட யிலாமல்!
நாளையை எண்ணி - இதோ நானும் உன்னோடு!
உனக்கான புத்தக பையையும் மதிய உணவுகளையும் சுமந்துக் கொண்டு!
நடக்கிறேன்,!
பள்ளிக்கூடம் வந்ததும்!
உன் கையை விட்டுவிட்டு போ என்கிறேன்,!
நீ வேண்டாம்பா!
நான் போகலைப்பா என்று அழுகிறாய்,!
நான் சற்று முகத்தை கடினமாக!
வைத்துக் கொண்டு போ' என்கிறேன்,!
நீ தேம்பியழுத கண்களைத் துடைத்துக் கொண்டு!
என்னை திரும்பிப் பார்த்து திரும்பிப் பார்த்து!
அழுதுக் கொண்டே போகிறாய்,!
நான் உன்னை பார்க்காமல்!
பள்ளிக் கூடத்து வாசலைக் கடந்து!
விருட்டென வீட்டிற்கு நடந்துவருகிறேன்,!
நான் உள்ளே அழும் அழையின்!
சப்தம் கேட்டு; நாளை நீ படித்து!
வாழத் தக்கவனாய் வருகையில்!
எனை உனக்குப் புரியலாம்போலென என்!
ஒவ்வொரு சொட்டுக் கண்ணீரும்!
பூமியில் சிந்திக் கொண்டே எனக்கு!
ஆறுதல் சொல்கிறது.!
அதேநேரம், நாளை ஒருவேளை நீ!
உன் பிள்ளையை உன்னோடு வைத்துக் கொண்டு!
அவனுக்கு விருப்பம் வருகையில் மட்டும்!
பள்ளிக் கனுப்பினால் -!
எனை ஒருவேளை கொடுமைக்காரனென - திட்டவும் செய்வாயோ' என்று!
பயமும் எழுகிறது,!
பயத்தை எல்லாம் தூக்கி!
மூட்டைக் கட்டிப் போட்டுவிட்டு!
நேரமாகிவிட்டதை யுணர்ந்து!
அலுவல் நோக்கி ஓடுகிறேன்,!
அலுவல் வேலைகளுக்கிடையே யெல்லாம் - உன்!
அழுத முகமே ஆங்காங்கு தெரிகிறது;!
முகத்திற்கு பின்னே உனக்குள்!
உன் விருப்பமின்றி திணிக்கப் படும்!
பாடப்புத்தகங்களும் கனக்கின்றன