தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

குறுங்கவிதைகள்

இமாம்.கவுஸ் மொய்தீன்
உயர் சாதிக்காரன் !
தாழ்த்திக் காட்டும்!
நிழல்!!
சாதிக் கோடரிகள்!
மோதிக் கொண்டன!
இரத்தம் குடிக்கும் நரி!!
உறக்கத்தில் உடல்!
விழிப்பில் உள்மனம்!
கனவுத் தொழிற்சாலை!!
ஆட்கள் கடத்தல்!
உறுப்புகள் களவாடல்!
க(உ)ருப்புச் சந்தை!!
புரட்சிகளை வெடிக்கும்!
போர்களை முடிக்கும்!
பேனா முனை!!
மிருகச் சாவு கண்டனம்!
மனிதச் சாவு வேடிக்கை!
உலக அதிசயம்!!
உள்ளங்கையில் அரிப்பு!
பண வருமானம் தான்!
மருத்துவருக்கு!!
என்னால் நிறையும் கடல்!
நதியின் திமிர்ப்பேச்சு!
நகைசிந்தும் அருவி!!
ஆசிரியர் வாக்கு பலித்தது!
அரபு நாடுகளில்!
ஆடு மேய்க்கும் தொழில்.!
ஆயிரம் கனவுகள்!
இலட்சங்கள் சம்பாதிக்க!
பாலைவன வாழ்க்கை!!
!
-இமாம்.கவுஸ் மொய்தீன்

பொய்யாமை.. உழவின்றி உய்யா

s.உமா
[து] உலகு!
!
01.!
பொய்யாமை!
-------------------!
பஞ்சாய் நிலையற் றழிந்துபோகும்!
வஞ்சத்தால் வாய்மை யிழந்தான் பெரும்புகழ்!
அப்பஞ்சேற் றத்தீயாய் நின்றொளி வீசுமுண்மை!
நெஞ்சத்தான் செய்த வினை.!
குறள் வடிவில்!
நெருப்பிட்ட பஞ்சாய் நிலையற் றழிந்துபோகும்!
பொய்யிட்டுச் சேர்த்தான் புகழ்.!
பழிக்கும் செயலான் பெரும்புகழ் காலம்!
அழிக்கும் விழலாய் விரைந்து.!
!
02.!
உழவின்றி உய்யா[து] உலகு!
------------------------------------!
கருவிகலை செய்தொழில் யாவும் புகழ்தரலாம்!
மாந்தர் உறுபசி தீர்க்க உடல்வளைத்தே!
ஏழை விதைத்தநெல் போலாமோ ஏற்பீர்!
உழவின்றி உய்யா துலகு!
ஈகலப்பை கொண்டு எழுதியே வந்தாலும்!
ஏர்கலப்பை இல்லா தியலுமோ மண்ணில்!
பசித்தவுயிர் 'பா'எழுது மோபசி தீர்க்கும்!
உழவின்றி உய்யா துலகு

அந்தக் கை.. அவன்தான்.. உயர்வானது

செண்பக ஜெகதீசன்
அந்தக் கையெழுத்து..!
---------------------------------------------------!
!
அந்தக் கை…!
-----------------!
உன் !
கதவைத் தட்டிடும் கை !
மரணத்தின் !
கையாக இருந்தால், !
கண்டிப்பாய் அது !
திரும்புவதில்லை- !
வெறும் கையாக…!!
அவன்தான்…!
-------------!
கவிஞன் !
கடவுளுக்கும் மேலானவன்- !
படைப்பதோடு நிறுத்திக்கொள்கிறான், !
அழிப்பதில்லை !
அவன்…!!
!
உயர்வானது…!
--------------!
பிய்ந்துபோகும் கூட்டைப் !
பிரியப்படும் பறவைக்குப் !
பிடிப்பதில்லை !
கடினமான கம்பிக் கூண்டு… !
சிறை வாழ்வைவிட !
பறந்து வாழும் !
சுதந்திரத்தின் சுவையது !
உயர்வல்லவா…!!
!
அந்தக் கையெழுத்து…!
--------------------!
கோணல் மாணலாய்க் !
காலதேவனின் கையெழுத்து-!
காண்கிறோம் நாம் !
தாத்தாவின் !
கன்னச் சுருக்கங்களாய்…!!
!
-செண்பக ஜெகதீசன்

என் தமிழ் உறவுகள்.. எதிரிகளுக்கு

கலாநிதி தனபாலன்
நன்றி!
01.!
என் தமிழ் உறவுகள் !
----------------------------!
வந்ததும் வாழ்ந்ததை மறந்து !
வசதிகள் கூடி !
வாழும் தேசத்தின் !
வாழ்நிலை தழுவி !
பெரிய மனிதர்களாய் !
பிதற்றிக் கொள்ளும் !
தன்னிலை மறந்த !
தமிழர்கள் மத்தியில்…. !
தேசத்தின் வாசம் சுமந்து !
தெருக்களெல்லாம் தாண்டி !
தேசம் கடந்து வந்தாலும் !
நேசம் கடவா நெஞ்சங்களாய் !
வாழும் உறவுகள் !
தேச விடுதலைக்காய் !
வாரிக் கொடுக்கும் நெஞ்சங்கள் !
இவர்கள் என் தமிழ் உறவுகள்… !
!
02.!
எதிரிகளுக்கு நன்றி!
------------------------!
ஏற்றத்தின் வாசலில் நின்றுகொண்டு!
என்னுடைய எதிரிகளுக்கு!
எப்படி நன்றி கூறுவதென்றறியாது!
ஏகாந்தமாய் உணர்கிறேன்!
என் வெற்றிக்கான விதைகள் இவர்கள்!
இவர்களின் இகழ்ச்சி இல்லையென்றால்!
இலக்கைத் தொட்டிருக்க முடியாது!
இவர்களுக்கு இங்கிதமான வந்தனங்களோடு!
இதயம் கனிந்த நன்றிகளும்.!
-கலாநிதி தனபாலன்

சும்மா கிடைத்ததல்ல.. பிணமென்றே

வித்யாசாகர்
சும்மா கிடைத்ததல்ல சுதந்திரம்.. பிணமென்றே பெயர் வைத்தேன்!
!
01.!
சும்மா கிடைத்ததல்ல சுதந்திரம்!
---------------------------------------!
விடுதலையென்று சொன்னாலே நெருப்பில் சுட்ட கோபம்வரும்!
சுதந்திரமென்று கேட்டாலே சொத்து பறித்த பயம்வரும்!
உரிமையென்று பேசினாலே விரட்டியடித்த வெள்ளையனை!
திருப்பியடித்த தமிழனுக்கு ஒற்றுமை தந்தது; சுதந்திரம்!!
உயிரென்று சொன்னாலே அந்நியன்னு பேராச்சு!
பிணமென்று சொன்னாலே இந்தியன்னு ஊர்பேச்சு!
மனிதனென்று சொன்னாலே மதிக்காத வெள்ளையனை!
விரட்டியடிச்ச தமிழனுக்கு வீரம் தந்தது; சுதந்திரம்!!
அடிமையாக்கி வைத்தவனை இருநூறு வருடம் தாங்கியாச்சு!
உறவெல்லாம் சுட்டவனை ஒசத்தியாக்கி பார்த்தாச்சு!
உடமையெல்லாம் இழந்தாலும் -!
எதிர்த்துநின்ற தமிழனுக்கு துணிவு தந்தது; சுதந்திரம்!
மார்தட்டி ஊரொழிச்ச கதையுண்டு - பார்த்தாச்சி!
காதலிச்சும் ஊர் பிடிச்ச கதையுண்டு - பார்த்தாச்சி!
யாரடிச்சு யார் மாண்டுபோயினும் - எவனடிச்சும் சாகா தமிழனுக்கு!
எழுச்சிக் கவிதைகள் கொடுத்தது; சுதந்திரம்!!
பெண்ணென்றால் போகமென்றே வாழ்ந்தவனும்!
அடுப்பூதி சமைப்பவளுக்கு படிப்பேனெனக் கேட்டவனும்!
வைப்பாட்டி வைத்திருந்தாலும் வாரிசை மட்டும் வளர்த்தவனும்!
திடுக்கிட நிமிர்ந்திட்ட பெண்ணின் பலத்திற்குமாய்!
சேர்த்துக் கிடைத்தது; சுதந்திரம்!!
உயிருக்கெல்லாம் மண்ணென்ற விலைவைத்து!
மன்னிற்கெல்லாம் ஆங்கிலத்தில் பெயர்வைத்து!
ஆடைமுதல் சோறுவரை மாற்றிவிட்ட வெள்ளையனால்!
மாறாத பழைய தமிழனின் மானம் தந்தது; சுதந்திரம்!!
காக்கை குருவி போல் சுட்டு சுட்டு எறிந்த!
வெள்ளையனுக்கு, இறக்கப் போகிறோமெனத் தெரிந்தும்!
மார்பை திருப்பிக் காட்டிய தமிழனின்!
தியாகத்திற்குக் கிடைத்தது; சுதந்திரம்!!
ரத்தநெடி மூக்கு சுரண்டி; செத்தபிணம் செவிட்டில் அறைந்து!
முடங்கிக் கிடந்த சோம்பேறி இளைஞனை!
அடிமை அடிமை என்ற ஓர்சொல்!
அடங்கமருத்து அடங்கமருத்துக் பெற்றது; சுதந்திரம்!!
வீட்டில் உறங்ககூட ஊரான் தடுத்ததை எதிர்த்து!
வீட்டில் விளைந்ததைகூட ஊரான் பறித்ததை எதிர்த்து!
வீட்டில் பேசக்கூட ஊரான் மறுத்ததைஎதிர்த்து!
என் வீட்டு தொழுவத்தில் எவன் மாடோ செனையானதை!
எதிர்த்து எதிர்த்து எதிர்த்து கிடைத்தது சுதந்திரம்;!
சும்மா கிடைத்ததல்ல சுதந்திரம்!!!
!
02.!
பிணமென்றே பெயர் வைத்தேன்!
----------------------------------------!
பிணங்களின் எரியும் புகையில்!
புகுகிறது பள்ளி சீருடைகள்!
பிணங்களின் அழுகிய நாற்றத்தில்!
மறந்தன மரண பயம்!
பிணங்களின் முறிந்த உறுப்பில்!
முடங்கின உயிர் பறித்த வலி!
பிணங்களின் தெருவோர குவியலில்!
அறுந்தன உயிரின் ஆசை!
பிணங்களின் பிணமென்னும் பெயரில்!
கிடக்கின்றன எம் - வீரமும் உறவுகளும்!
பிணமென்றே பெயர்வைத்தேன்!
வேறென்ன எம்மக்கள் -!
பிணமாகிப் போகவே படைத்தாயே? !
வெடித்த குண்டுகள் வீரம் பேச !
உழைத்த உழைப்பெல்லாம் மண்ணாய் போக!
பயமும் கதறலுமாய் பதறித் திரிந்த உடம்புகளில் -!
ஈக்கள் மொய்க்க..!
எலும்பு கடித்து நாய்கள் திரிய..,!
உடம்பு காட்டி என் தமிழச்சிகள் கருக..,!
வெட்டிசாய்த்த மரம் போல -!
எம்மக்கள் வீழ்ந்து குவிந்திருப்பதை கண்டாயோ?!
பற்றி எரிகிறது மனம்!
வெறும் படமென்று எண்ணி!
உச்சு கொட்டி போகிறது உலகம்!
மறந்தோர் மறந்து!
வலித்த உணர்வுகளையும் தொலைத்து!
மிச்சம் மீதிக்காய் அழுது -!
வெறும் வரலாற்றில் கணக்காகிப் போயினறே என்மக்கள்!
வேறென்ன சொல்ல எமை -!
முடிவில் -!
பிணமென்றே பெயர் வைத்தேன்- அதில்!
என்னையும் பூட்டிவைத்தேன்

கடலில் வந்த காதல்

ரசிகவ் ஞானியார்
(அந்தமான் தீவு அருகே சுனாமியில் கரைதப்பிய ஒரு அகதிகள் முகாமில் ஏற்பட்ட ஒரு காதல் இது )!
என் தேவதையை !
எங்கிருந்து !
கடத்திவந்தாய் கடலே ? !
சுனாமியே! !
சுற்றியிருந்தவர்களையெல்லாம்... !
கால்பிடித்து இழுத்து சென்றாய்! !
எங்கிருந்தவளையோ... !
காதல் பிடித்து அழைத்து வந்தாய்! !
காதலித்தால் !
சமூகம் எதிர்க்கும் என்றா !
சமூகத்தை அழித்துவிட்டு... !
எங்களை காதலிக்க வைத்தாய்? !
தீவு தாண்டி வந்த !
வே! !
எந்த தேசத்தில் நீ இருந்தாலும் !
என்னைத்தான் சேரவேண்டும்; என !
கடவுள் கடலுக்கு !
கட்டளையிட்டுவிட்டானா..? !
கடல் பொங்கியதால்... !
காதல் தங்கியதா ? !
இல்லை நம்மில் !
காதல் தங்குவதற்காக... !
கடல் பொங்கியதா ? !
இன்றைய காதல்கள் எல்லாம் !
முடிவில் தத்தளிக்கிறது.. !
ஆனால் இங்கேயோ !
ஒரு !
தத்தளிப்பில்தான் காதலே !
அரங்கேறியிருக்கிறது! !
!
சுனாமியில்... !
காணாமல் போனவர்களின் பட்டியலிலே !
என் !
இதயமும்... !
இணைந்து கொண்டது! !
அலைகள் அடித்துப் போட்டதில் !
காயப்படட்டவர்களுக்கு மத்தியில்... !
நாம் !
காதல்பட்டிருக்கிறோமடி!. !
ஒன்றாய் இருந்தவர்களையெல்லாம்... !
பிரித்துவிட்டது! !
பிரிந்துஇருந்த நம்மை... !
ஒன்று சேர்த்துவிட்டது! !
சுனாமியே ! சொல் !
நீ !
காதலுக்கு எதிரியா? !
நண்பனா? !
அழுகின்றவர்களின் !
ஆறுதலுக்காக... !
எங்கள் காதலை !
நினைவுச்சின்னமாக்கிவிட்டாயோ? !
!
திருமணம்... !
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதாம்! !
இங்கே !
காதல்... !
சுனாமியால் நிச்சயிக்கப்பட்டது ! !
அழாமல் வாடி! - மீண்டும் !
அலைப்பக்கம் போவோம்! !
நம் !
இதயம் இணைத்த ... !
கடலில் !
கால்கள் நனைப்போம் வாடி! !
ஆம்! இப்பொழுது !
கடல் நமக்கு... !
கல்யாண பரிசு! !
- ரசிகவ் ஞானியார் !
துபாய்

உன்னை நோக்கியதாய்

சுதாகரன், கொழும்பு
மலர்கள் !
தூவிய!
மரங்கள் !
நிறைத்த சாலையில் !
நீ, !
வருகிறேன் நான். !
உன்னை !
கண்டதும் ஏனோ !
என் இதயத்தில் !
ஆயிரம் !
பட்டாம் புச்சிகள். !
ஒரு வார்த்தை !
கூட கதைத்ததில்லை, !
நான் !
இதுவரை !
உன்னிடம். !
ஆனால் !
ஏன் !
ஓட்டுமொத்த !
இதயமும் !
உன்னால் மட்டுமே !
நிரம்பியிருக்கிறது. !
பூக்களை !
சேரும் வண்டுகளாய் !
உன்னை நோக்கியதாய் !
எனது !
பயணம். !
உன் பார்வை !
படும் !
துரத்தில் !
நான். !
வெறும் !
அறிமுகத்துகான !
புன்னகை மட்டுமே !
உன்னிடமிருந்து !
எனக்கு. !
ஆனால் !
பெண்ணே !
அது மட்டுமே !
வானத்துக்கும் !
பூமிக்குமாய் குதிக்க !
போதுமானதாக !
இருந்தது. !
தொட்டுவிடும் !
துரத்தில் !
நீ இருந்தும்கூட !
இதயத்தின் !
படபடப்புகளை !
தாண்டி !
வார்த்தைகள் !
வரவில்லை !
வெறும் !
புன்னகையோடு !
மட்டும் முற்றுப்புள்ளி !
வைக்கப்பட்டது !
அன்றைய மழைக்கால !
சந்திப்பு. !
புன்னகையும் !
தாண்டி !
பல்வேறு தேடல்கள் !
உன்னில் எனக்கு, !
விடைபெற்ற !
நேரத்தில் இருந்து !
தவிக்கிறது !
மனது. !
-சுதாகரன்

காகத்தின் நிழலும் கிழிந்த பைகளும்

தீபச்செல்வன்
தீபச்செல்வன்!
!
மெலிந்த மனிதர்கள் மீது!
காகங்கள் பறந்து!
வற்றிக்கொண்டிருந்தன.!
வாயிலிருக்கும்!
மிகச்சிறிய வடையில்!
ஆயிரம் இளையான்கள்!
மொய்க்கின்றன. !
கோப்பையில்!
தேனீர் வற்றியிருக்க!
மேசை வெளித்திருக்கிறது.!
சோறு காய்ந்து!
அழிந்து போயிருக்கும்!
உணவுத்தட்டுக்களை!
தெருநாய்கள்!
காவிவந்து தின்கின்றன.!
பழைய செய்தித்தாள்!
ஒன்றில் கட்டப்பட்ட!
ஒரு சோற்றுப் பார்சலை!
ஜந்தாறு குழந்தைகள்!
பிய்த்துக்கொண்டிருக்கிறார்கள்.!
சோற்றுப்பானைகள்!
ஓட்டையாய்ப்போயிருக்க!
தேனீர்க்கோப்பைகள்!
உடைந்து போயிருக்க!
வீசப்பட்டிருந்தன.!
கிழிந்த பைகளோடு!
மனிதர்களை !
ஏற்றிய ஒரு பேரூந்து!
உள் வீதிகளுக்குள் அலைகிறது.!
காகங்கள்!
கூரைகளை தின்கின்றன

புதிய காதற் பாடல்

வெளிவாசல்பாலன்
உன்னுடைய இதயத்தில் !
எதை நிரப்பி வைத்திருக்கிறாய் !
என்று கேட்டாள் அவள். !
பூக்களும் வாசனையுமென்றான் அவன்!
கனியும் சுவையும் வேண்டுமென்றாள் அவள்!
உன்னுடைய கண்களில் !
எதை நீ வைத்திருக்கிறாய் என்றாள் அவள்!
உன் கண்களையும் !
உன்னுடைய ஞாபகங்களையும் என்றான் அவன்!
எதிர்காலத்தையும் வசந்தத்தையுமே !
விரும்புகிறேன் என்றாள் அவள்!
உன்னுடைய கைகளில்!
எதைச் சேமித்திருக்கிறாய் என்று கேட்டாள் அவள்!
உன்னையும் உன் அழகையும் என்றான் அவன் !
காலத்தையும் பாதைகளையுமே !
விரும்புகிறேன் என்றாள் அவள் !
உன்னுடைய பயணம் எங்கே என்றாள் அவள்!
உன்னிடம், உன் இதயத்திடம் என்றான் அவன்!
வெளிகளிலும் பறவைகளிலும்!
நானிருக்கிறேன் என்றாள் அவள்.!
உன்னுடைய பாடல்கள் யாதாயுள்ளன என்று கேட்டாள் அவள்!
உன்பெயராகவும் அதன் இசையாகவும் இருக்கின்றன !
என்றான் அவன்!
காற்றின் குரலையும் !
காலத்தின் மொழியையும் விரும்புகின்றேன்!
என்றாள் அவள் !
மேலும்!
அழும் குழந்தையையும் !
கண்ணீரோடுள்ள தாயையும் ஆதரிக்கிறேன் என்றாள்!
உன்னுடைய நிலப்பரப்பெது வென்றாள் அவள்!
புல்வெளியும் மலர்த்தோட்டமும் என்றான் அவன்!
நீரூறும் சுனையும்!
அடர் மரங்களுமே தனது நிலப்பரப்பென்றாள் அவள்.!
உனது கனவுகள் எங்கேயென்றாள் அவள்!
புல்வெளியில் !
பனித்துளி மீதிலே என்றான் அவன்.!
ஆற்றினோரமும் விளையும் வயலும் !
எனது இதயமென்றாள் அவள்!
பூக்களை எடுத்துச் சென்ற அவனிடம்!
அவள் கொடுத்தாள் !
கை நிறையத்தானியங்கள்.!
-- வெளிவாசல்பாலன்

வாழ்ந்து பார்ப்போம்

சத்தி சக்திதாசன்
வானவில்லின் வர்ணங்களே!
வாழ்வில் வந்த சொந்தங்கள்!
மழைநீரின் தூய்மையெலாம்!
மண்ணின் மீது விழும்வரையே!
நேற்று வாழ்வின் இன்பங்கள்!
இன்று வாழ்வின் ஏக்கங்கள்!
நாளை வாழ்வின் நோக்கங்கள்!
நாளும் தோன்றும் கானல்நீர்!
உண்மை நெஞ்சில் கசந்திடும்!
உறவுகள் அதனை ரசித்திடும்!
அன்பு நெஞ்சில் ஊறுவதற்கு!
அவசியமில்லை அறிமுகம்!
நீரில் போடும் கோலங்கள்!
நிச்சயம் என்றே எண்ணிடும்!
நிஜத்தின் நிழலில் வாட்டிடும்!
நிதர்சனங்கள் வாழ்விலே!
என்றோ நடந்த நினவுகள்!
எப்படி ஆயின கனவுகளாய் ?!
எதையும் மாற்றிடும் காலமோ!
எம்முள் புதைந்த சூட்சுமம் ?!
தொப்புள் கொடியில் பிறந்திடும்!
தானாய் வந்திட்ட சொந்தங்கள்!
தீரா வலியைத் தந்துமே ஏனோ!
தேடல் இன்னும் தீரவில்லை!
உள்ளத்தில் நல்ல உள்ளம்!
உறங்காதென்றான் கவியரசன்!
உண்மைகள் இதயத்தில் உரசும்!
உணர்வுகள் ஒத்தடம் கொடுக்கும்!
வாழ்க்கை என்னும் நாடகத்தில்!
வரித்துக் கொண்டோம் வேஷத்தை!
வாழ்ந்து மடியும் காலம் வரை!
வாழ்ந்து பார்ப்போம் மனிதராய்!
!
-சக்தி சக்திதாசன்