உன்னைத் தறித்துப் போட்டார்கள் மல்லிகை மரமே!
எந்நேரம் நினைத்தாலும்!
நான் பூத்துப் போகும் ஒன்றிரண்டுகளில்!
நீயும் ஒன்றாக இருந்தாய்!
என் மனம் முழுக்கவுமாக!
நீ பூக்கும் சாந்த மாமா இரவுகளில்!
உன் இதழ் சிறகாகி முளைக்க!
நான் பறந்து போய்!
முட்டி உலகத்தில் வந்து விழும் போது!
துன்பமென இருந்த எல்லாம்!
நொறுங்கிப் போயிருக்கும் பூமியில்!
என் கையை இழுத்துவைத்துத்!
தறித்தது போல இருந்தது!
நான் மணப்பதற்கெனவே!
விரிந்தது போல இருந்த உன்!
ஒவ்வொரு கெப்பாக வெட்டி வர வர!
துளித் துளித் துளியாய்!
அன்றைக்கென்று வைத்திருந்த!
எல்லா மொட்டும் உதிர்ந்து!
எல்லாக் கண்ணீரும் வற்றியிருந்தது உன்னில்.!
உனக்கு நான் இனி எங்கே போவேன்!
நீயேன் போதாமல் வரப்போகும் இடத்தில்!
முளைத்தெழும்பினாய் மல்லிகை மரமே!
நான் என்னதான் செய்ய முடியும்!
இந்த உலகத்து ஒய்த்தாக்கள்!
உன்னைத்தறித்து முடித்த பின்!
தூக்கி ஓர் நிழல் பக்கமாக வைத்தேன்!
என்னமாய்ப் பாரித்தாய்!
இத்தனை நாளாய் தாங்கிய!
என் துயரமெல்லாம் சேர்த்து.. !
-அசரீரி
அசரீரி