இப்னு ஹம்துன்!
பின்னோக்கிப் பயணிக்கின்றன!
நினைவுகள்!
கையில் விமானச்சீட்டு.!
சொந்த ஊரில்!
விளைச்சல் காண!
எந்த ஊரிலோ ஏரோட்டம்.!
கடல் தாண்டியும்!
மணக்கின்றன!
வியர்வைப்பூக்கள்!
புலப்படுவதேயில்லை!
பூக்களின் கண்ணீர்!
நறுமணத் திரவியங்களில்!!
இறந்த காலத்தில்!
உயிர் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றன!
எதிர்காலத்துக்கான சில தவங்கள்!!
புலம் பெயர்ந்த வாழ்வில்!
பிரிந்து கிடக்கும் தம்பதிகளாய்..!
பொருளின் அர்த்தங்கள்.!
-- !
H.FAKHRUDEEN!
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)!
+966 050 7891953

இப்னு ஹம்துன்