அந்தப் பந்தயம்.. நரகமாய்.. கிழிந்தது - செல்வராஜ் ஜெகதீசன் - அபுதாபி

Photo by FLY:D on Unsplash

01.!
அந்தப் பந்தயம்...!
---------------------!
மரணம் விரட்ட விரட்ட,!
மனிதன்!
மனம் பதைத்து ஓடும்!
முடியாத பந்தயம்தான்,!
மண்ணில்!
மனித வாழ்க்கை என்பது...!!
!
02. !
நரகமாய்...!
---------------!
நரகத்தைக் கொண்டுவந்து!
நடுவீட்டில் சேர்த்துவிட்டது,!
அவன்!
சொர்க்கமென்று எண்ணி!
சொந்தமாக்கிக் கொள்ள!
தேர்ந்தெடுத்த!
திருமண வாழ்வு...!!
!
03. !
கிழிந்தது...!
--------------!
தேர்தல் களத்தில்!
கிழிந்து கிடப்பது!
கிராமத்து கொடிக்கம்பத்து!
கட்சிக்கொடிகள் மட்டுமல்ல,!
கட்டிக் காத்துவந்த!
கிராம மக்கள் ஒற்றுமையும்தான்
செல்வராஜ் ஜெகதீசன் - அபுதாபி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.