இனி எப்படி!
இக்கவிதையை சந்தையில் விற்கலாம்.!
-----------------------------------------------------------!
நான் வாழ்வின் வசீகரங்களை!
பாடிக் கொண்டிருக்கிறேன்!
பனிமலர் சாரல் அடிக்கிறது!
வானவில் வர்ணம் சேர்க்கிறது!
நிலவு பொழிகிறது!
காதல் எண்ணம் மூழ்கிறது!
கண்ணுள்ளே ஆயிரம் மின்னல்!
அதுவென்ன!
வானத்து ரம்பையும் ஊர்வசியும்!
இறங்கி வருகிறார்கள்!
இனி என்ன!
இவர்களை வர்ணிக்க!
வார்த்தை சேர்க்க வேண்டும்!
தனங்களை உவமிக்க!
பழைய தமிழ் பாடல்களை!
அலச வேண்டும்!
நான் வசீகரங்களை!
பாடிக்கொண்டிருக்கிறேன்...!
ஆம்!
கற்பனை நன்றாய் வருகிறது!
இந்த கவிதையை சந்தையில்!
நல்ல விலைக்கு விற்கலாம்!
சீ என்ன இது!
எங்கோ பிணம் எரியும் நாற்றம்!
காற்று சுமந்து வருகிறது!
தூரத்தில் அழுகுரலொன்று!
ஈனஸ்வரத்தில் காதைபிளக்கிறது!
இப்போது இது!
அடிக்கடி நிகழ்ந்து விடுகிறது!
எனது கவிதைக்குள் இரத்த நெடி கலந்து விடுகிறது.!
இனி எப்படி!
இக்கவிதையை சந்தையில் விற்கலாம்
வேலணையூர்-தாஸ்