வாடிக்கையாய்ப் போன வெள்ளத்திற்கு !
வடிகால் இல்லை.!
விளைநிலங்கள் வீணடிக்கப்பட்டு!
வீடுகள் விதைக்கப்பட்டது போக!
கண்மாய்களும் காலாவதியாகிக்!
கட்டிடங்களுக்குப் பலியான நிலை.!
இரவுக்காய்க் காத்திருந்து!
காலைக் கடனை!
மாலையில் கழிக்கும் !
இழிவு நிலை இன்னும் நம் மண்ணில்.!
குப்பைகளை அதன் தொட்டிகளில்!
போட வேண்டும் என்கிற!
அடிப்படை அறிவு, !
அதிகம் படித்தவர்களிடம் கூட இல்லை.!
உலகமே வியக்கும்படி !
உள்ளங்கையில் தகவல் தொழில்நுட்பம்.!
கல்வியில் பல பட்டம் பெற்றுக்!
கரை கண்ட போதிலும்,!
சுகாதாரம் மட்டுமின்றி!
சுற்றுப்புறச் சூழ்நிலை அறிவும்!
தாமரை இலைத் தண்ணீராய்!
எத்தனை தலைமுறைக்கு!
இருக்கப் போகிறது.!
சுத்தம் சோறுபோடும் என்று!
சொல்லப்பட்ட இடத்திலே!
சுத்தமாய் எதுவுமே இல்லை என்பது!
சத்தமாய்ச் சொல்லப்பட வேண்டும்.!
-சித. அருணாசலம்

சித. அருணாசலம்