ஈரம் காயும் முன்னே.. யுகங்கள் கடந்தும் - தீபா திருமுர்த்தி

Photo by Mishaal Zahed on Unsplash

ஈரம் காயும் முன்னே உலர்த்தல் நடவடிக்கை!.. யுகங்கள் கடந்தும் !
!
01.!
ஈரம் காயும் முன்னே உலர்த்தல் நடவடிக்கை! !
-----------------------------------------------------------------!
காவிரியும் !
கருநாடகமும் !
நின்றவிடத்தில் நின்றிருக்க !
தொடரும் பயணங்கள் !
சங்கமிக்கவா? !
மூழ்கடிக்கவா? !
எண்பதாயிரம் !
எழுத்தாணிகள் !
எடுத்தெரியப்பட்டு !
மீதமிருக்கும் முப்பதாயிரமும் !
முள்வேளிக்குள்! !
தமிழநின் !
கச்சத் தீவு - இன்று !
சர்ச்சை தீவாய்! !
பெருமைப்பட்டுக் கொள்வோம் !
இருபத்தோராம் நூற்றாண்டின் !
இணையற்ற மனித உரிமை மீறல் !
ஈழப் போர்! !
வன்கொடுமை தடுப்பார் !
யார்? !
தமிழன் என்று சொல்லடா !
தலை நிமிர்ந்து நில்லடா! !
எங்கே நிற்பது? !
பிணத்தின் மீதும் !
எலும்புக் கூடுகளிலுமா? !
இறந்து போன சுரப்பிகளில் !
பால் தேடிக் !
கதறிய !
மழலையின் கண்ணீர் !
கன்னங்கள் தொடவும் !
தயக்கம்! !
தொலைந்து போன !
உறக்கம்! !
பொறுப்புமிக்க காவலிடம் !
கற்பு பறிப்போன !
கதறலின் காட்சி !
நித்திரை கொள்ளவில்லை !
மனத்திரையில்! !
காக்கையின் !
தர்ப்பநந் சோற்று !
பருக்கை கூட !
பல்லுக்குக் கிட்டா !
அவலத்தின் !
ஓலம்! !
பஞ்சம் மட்டுமா !
துரத்தியது? !
நைந்த நெஞ்சங்களுமல்லாவோ !
விரட்டியடித்தன? !
காது கிழித்த !
குண்டுகள் - அங்கே !
உயிர் தேடி துளைத்தன...!
தையல் இட்டுக் கொண்டோம் !
காது மாடளொடு சேர்த்து !
நாம்! !
அவர்கள்? !
நிழலாடும் நிஜங்கள் !
வெயில் மறைவுப் பிரதேசங்களில் !
ஒளிந்திருக்கும் உன்னதம்! !
வேரோடு பிடுங்கிய !
விருட்சத்தின் விதைகள் !
மூளை விடுவதற்குள் !
கடல் மயமாக்கும் !
காட்சித் திட்டம்! !
காயத்தின் கண்களில் !
கண்ணீர் காயும் முன்னே !
உலர்த்தல் நடவடிக்கை... !
இதுவே !
உலகத் தமிழ் !
செம்மொழி மாநாட்டின் !
அறிவிக்கை! !
செம்மொழி மாநாட்டிநாரின் !
செல்லப் பிள்ளைகளின் !
நாவில் !
ஆங்கிலமும் !
இந்தியுமன்றோ !
கை குலுக்கிக் கொள்கின்றன! !
தமிழனைக் கொல்! !
தானாய் வளரும் தமிழ்ப் பயிர்! !
இதுவன்றோ !
ஏட்டில் ஏறா !
தேசிய கீதமின்று! !
தமிழ் வேதமின்று! !
இளைப்பாரலும் ...!
களைப்பாரலும்...!
கண்டு... !
உண்டு...!
களித்தலுமே !
நித்தம் !
நினைவுக் கோப்பையில் !
நிரம்பி வழியும் !
நிலைக் கலன்கள்! !
கோழி கிளரும் !
குப்பைய்யாய் கூட !
சீய்த்துப் பார்க்க !
மறந்து போன மனிதம்! !
ஆம்! !
மறுத்துப் போன மனிதம்! !
நேயம் மறந்த !
மனிதத்தின் புறப்பாடு....! !
செம்மொழி மாநாடு! !
02.!
யுகங்கள் கடந்தும் !
-------------------------!
உன்னுடனே !
சிந்திக்கிறேன்... !
கடந்துவந்த !
பாட்டைகளையும்...!
கடக்கவிருக்கும் !
பாதைகளையும்! !
தயக்கங்கள் சற்றே !
கலங்க வைத்தாலும் !
மயக்கம் மட்டும் !
மதி கெட்டுப் போவதில்லை! !
ஐந்து வயதில் !
அடிபட்டு...!
ஆழமாய் பதிந்துபோன வடு !
ஆறாமல் வருத்துகிறது ...!
உன் !
விரல் பட்டு !
ஒருநாள் !
உணர்வு பெற்றதாய் !
ஞாபகம் !
அவ்விடம்! !
நகக்கனுதான் என்றாலும் !
நினைக்கையில் !
நெருடல்தானே! !
உயரப் பறக்கும் கொடியை !
அண்ணார்ந்துப் பார்த்துப் !
பெருமூச்சேரிந்து விட்டு !
செல்லும் முடவனின் !
கைத்தடியாய்... !
தொட்டுப் பார்க்கத் !
துடிக்கும் !
தோள்களையும் !
காத்திருந்து !
கட்டிக்கொள்ள !
கனாக் காண்கிறது... !
கள்ள உள்ளம்! !
எண்ணெய்த் தாளில் !
மொய்த்து இறக்கும் !
ஈக்கள் அல்ல !
நினைவுகள்! !
உளுத்தங்கஞ்சியின் !
தேம்போடே !
தொடரும்... !
யுகங்கள் கடந்தும்
தீபா திருமுர்த்தி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.