தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

வாழ்க்கை வணிகன் .. நகரியம்

ஆ.மணவழகன்
வாழ்க்கை வணிகன் !
01.!
வாழ்க்கை வணிகன் !
------------------------!
பாருங்க சார்!
தெய்வப் புலவர் வள்ளுவர்!
எழுதியது சார்!
வாழ்க்கைக்குத் தேவையான !
வழிகளைச் சொல்வது சார்!
மூன்று பெரும்பகுப்புகள்!
நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்கள்!
ஆயிரத்து முந்நூற்று முப்பது !
குறள்களைக் கொண்டது சார்!
வெளியில் வாங்கினா!
இருபத்தி ஐந்து ரூபா சார்!
கம்பெனி விளம்பரத்துக்காக!
வெறும் பத்து ரூபா சார்!
தொடர்வண்டிச் சிறுவன்!
மலிவு விலையில் விற்றுச் செல்கிறான்!
திருக்குறளோடு வாழ்க்கையையும் !
02.!
நகரியம் !
---------------!
சாக்கடை நாற்றத்தோடு !
கழிவுநீர் ஊற்றுகள் !
அலங்காரத்திற்கு மட்டும் அணிவகுக்கும்!
பறவைகள் அமர்ந்தறியா செயற்கை மரங்கள் !
முளைக்காத தானியங்கள்!
விதை கொடுக்காத கனிகள் !
உயிரில்லா முட்டைகள் - தாய் தந்தை!
உறவறியா குளோனிங் குழந்தைகள் !
ஆணிவேரில் வெந்நீர் ஊற்றும்!
அறிவியல் வளர்ச்சிகள் !
ஆடுகளை மலையில் விட்டு!
அருகிருக்கும் கொல்லையில் கதிரொடித்து!
பால் பருவக் கம்பைப் பக்குவமாய் நெருப்பிலிட்டு!
கொங்கு ஊதித் தாத்தா கொடுத்த!
இளங்கம்பின் சுவைக்கு!
ஈடு இது என்று!
எதைக் காட்டி ஒப்புமை சொல்வேன் !
பச்சைக் கம்பு தின்றதே இல்லை!
ஆதங்கப்பட்ட தோழிக்கு

மனிதர்கள்போல

றஞ்சினி
துரிகையின் காதலில்!
கவிபாடும் வண்ணங்கள்!
மின்னலாய் மின்னும்!
குழந்தையின் விழிகள்!
கவிதையை தேடும்!
வரிகளின் நிமிடங்கள்!
கோபத்திலும் அழகான!
அம்மாவின் கண்கள்!
வானத்து ஓவியனின்!
வானவில்!
கண்களுக்கும் சிந்தைக்கும்!
எல்லாமே அழகுதான்..!
நிமிடத்தில் மாறும் இயற்கை!
மனிதர்கள்போல..!
-- றஞ்சினி

தீவில் தனித்த மரம்.. ஆதித்துயர்

பஹீமா ஜஹான்
1.தீவில் தனித்த மரம்!
தூர தேசப் பறவையொன்று!
தங்கிச் சென்ற மரம்!
மீளவும்!
அந்தப் பறவைக்காகக்!
காத்துக் கிடக்கிறது!
தன் கிளைகள் எறிந்து தேடும்!
வான் பரப்பில் பறவை!
அதன் பாடலைப்!
பதித்துச் செல்லவில்லை.!
வேர்கள் ஊர்ந்து பரவும் மண்ணில்!
அது!
எந்த நிழலையும்!
விட்டுச் செல்லவும் இல்லை!
மலைகளிடமோ நதிகளிடமோ!
பறவை தனது!
பயணப்பாதை பற்றிய!
செய்தி எதனையும்!
பகன்றிடவே இல்லை!
சூரிய சந்திரரும்!
தாரகைக் கூட்டங்களும்!
குருவியின் சேதிகளை!
உரைத்திட மொழியின்றி மறையும்!
வேர்களும் கிளைகளும்!
நீளமுடியாமலொரு பெருங்கடல்!
மெளனத்தில் உறைந்த!
மரத்தைச் சூழ்ந்திருந்து!
ஆர்ப்பரிக்கிறது நிதமும்!
2.ஆதித்துயர்!
நிழல் மரங்களற்றுச்!
சூரியன் தவிதவிக்கும்!
நெடுஞ்சாலையோரம்!
வெய்யிலை!
உதறி எறிந்தவாறு!
நடக்கிறாள் மூதாட்டி!
!
குதி கால்களால்!
நெடுங்களைப்பை!
நசுக்கித் தேய்த்தவாறு!
காற்றைப் பின் தள்ளிக்!
கைகளை வீசுகிறாள்!
வெய்யில்!
மிகப் பெரும் தண்டனையை!
வழி நீளப் பரவவிட்டுள்ளது.!
வேட்டை நாய் போல!
அவள் முன்னே!
ஓடிச் செல்கிறது நிழல்!
பதிந்தெழும் ஒவ்வொரு சுவட்டிலும்!
தேங்கி நடுநடுங்குகிறது!
ஆதியிலிருந்து தொடரும் துயரம்

உப்புக் காற்றில்

புஸ்பா கிறிஸ்ரி
விட்ட இடத்திலிருந்து !
தொட்டுப் பார்க்க !
நினைக்கும் மனம் !
இன்னும் மறக்கவில்லை !
அந்த சோகத்தின் வடுக்களை... !
கடற்கரை நண்டுகளெல்லாம் !
காலை விறாண்டிக்கொண்டு ஓட !
காலன் அள்ளிச் சென்று !
காலாவதியாகிப்போன !
அந்தக் கணங்களைத் !
தேடிப்பார்த்த படி !
அந்தத் தேசத்தின் சிறுசுகள் !
சிறகடித்துப் பறந்து திரிந்து !
சிறுமணல் வீடுகட்டி !
சிந்தனையை வளர்க்க வேண்டிய !
சின்னஞ் சிறுசுகளெல்லாம் !
சுற்றிச் சுற்றித் தேடுகின்றன !
காற்றின் இடமெல்லாம் !
தம் பெற்றோர் விட்டுச் சென்ற !
இறுதிச் சுவாசக் காற்றினை !
கடற்கோளாய் வந்து !
காலனாய் அள்ளிச் சென்ற !
அந்தக் கடலை வெறித்துப் !
பார்த்து வேதனிக்கும் மனங்களெல்லாம் !
வெறும் உப்புக்காற்று !
கொண்டு வந்து கொட்டிச் செல்லும் !
வெள்ளை நுரையைத் தான் !
கேட்க வேண்டும் தம் உறவுகளை... !
!
புஷ்பா கிறிஸ்ரி

எந்த இரவு எங்களு.. மரணம் ஒரு முறை

எந்த இரவு எங்களுக்கென்று விடியும்..மரணம் ஒரு முறை தான்!
!
01.!
எந்த இரவு எங்களுக்கென்று விடியும்!
இறுதிப் போரில்!
சரணடைய வந்தவர்களின் உடலை!
சல்லடையாகத் துளைத்தன!
துப்பாக்கி குண்டுகள்!
தமிழின குடியிருப்புகள் மீது!
போடப்பட்டன!
கொத்துக் குண்டுகள்!
நிராயுதபாணியாக நின்றவர்களுடன்!
சமர் செய்வது வீரமன்று!
பச்சிளம் பாலகனின்!
நெஞ்சை குறிவைத்துப் பாய்ந்த!
தோட்டாக்கள்!
மனதில் துளிக் கூட!
ஈரம் இல்லாதவர்கள்!
இட்ட கட்டளையால்!
உடலைத் துளைத்தவை!
மருண்டு விழிக்கும்!
கண்களைப் பார்த்து!
சிங்கள சிப்பாயின்!
துப்பாக்கி!
அவனது கரங்களிலிருந்து!
நழுவி இருக்காதா!
தான் எடுத்த முடிவு!
சரிதானென்று!
மகாவம்சத்தை கோடிட்டுக்!
காட்டினால்,சிங்களவன்!
மனசாட்சியிடமிருந்து!
தப்ப முடியுமா!
தப்பிக்க நினைக்கும்!
போர்க் குற்றவாளி!
அரியணையை அலங்கரிக்க!
இந்தியா சாமரம் வீசலாமா!
துப்பாக்கி ரவைகள்!
சிறுவனின் உடலை!
சல்லடையாகத் துளைத்ததைக் கண்டு!
உத்தரவிட்டவன்!
பிடரி சிலிர்த்து!
மனித மாமிசத்தை!
ருசிக்க விடலாமா!
காஷ்மீர் விஷயத்தில்!
கர்ஜிக்கும் இந்தியா!
இலங்கை விஷயத்தில்!
மௌனிப்பது ஏன்!
புரட்சி எங்கும்!
வேர்விட்டுவிடக்!
கூடாதென்று மைய அரசு!
கழுகுக் கண்ணால்!
கண்காணிக்கிறது!
பாலச்சந்திரன்!
உடலைப் பார்த்த பிறகும் கூட!
மௌனித்தால்!
நாம் மானுடமா?!
!
02.!
மரணம் ஒரு முறை தான்!
-----------------------------------!
தமிழினமே விழித்துக்கொள்!
உனக்கு கல்லறை செய்கிறவன்!
உனது அருகாமையிலேயே!
இருக்கிறான்!
இன்னொரு கன்னத்தைக் காட்ட!
நாங்கள் இறைமகனின்!
சீடர்கள் அல்ல!
இரக்கத்தை எதிர்பார்க்க!
நீங்கள்!
சிலுவையில் மரித்தவர் அல்ல!
கிழிபட்டத் தோல்!
அனல் காற்றால்!
மேனி எரிகிறது!
கிட்டத்தில் பீரங்கிக் குண்டு!
வெடித்ததால்!
கேட்கும் திறனும் போயிற்று!
மங்கிய கண்பார்வையை!
வைத்துக் கொண்டு!
இருந்தாலென்ன!
இறந்தாலென்ன!
கைதியாக ஆயுள்!
முழுவதும் வாழ்வதைவிட!
மரண வலியை பொறுத்துக் கொண்டு!
இன்றே சாகலாம்!
அவதாரம்!
வனவாசம் இருந்த கதை!
வானரம் தம்!
வாலால் எரியூட்டிய இலங்காபுரி!
மேலும் மேலும்!
மனிதக் குருதியை!
பருகக் கேட்கும்!
எல்லைக் காளி!
கருணையற்ற கடவுள்!
தயை இல்லாத அரசன்!
விலங்கிடப்பட்ட நீதி!
சாட்சியை விலை பேசும் சட்டம்!
புத்தரை முன்நிறுத்தும் முகமூடி!
இறுதியில் மரண வியாபாரிகள்!
சமஉரிமை தருவதாய்!
ஒப்பந்தம் போடுவர்!
சாட்சிக் கூண்டில்!
நிற்கவிடாமல் காப்பாற்றியதற்காக!
இந்தியாவிடம்!
நன்றி விசுவாசம் காட்டுவர்!
ஈழம் பற்றிய!
கோரிக்கைகளை மக்கள்!
மறந்த நேரம் பார்த்து!
மீண்டும் அரியணை ஏறுவர்

புதிய எழுத்து!

கருணாகரன்
அதிகாலையில் எழுந்தபோது!
பனிப்புகாரைத் தவிர எதுவும் தெரியவில்லை!
எந்த மொழியிலும் ஒரு சொல்லும் மிஞ்சவில்லை!
எவரிடமும் ஒரு துளி நினைவுமில்லை!
எல்லாம் கரைந்தழிந்தன!
அந்த ஒரேயொரு விஞ்ஞானி !
ஆளியைத் தவறி அழுத்தியபோது.!
நினைவுகள் இல்லாத மனிதர்களுக்கு!
பயணங்களுமில்லை!
அடையாளங்களுமில்லை!
அதனால்!
எந்த வீதியிலும் ஒரு பயணமும்!
நிகழ்வதற்கான அவசியமிருக்கவில்லை.!
என்ன அதிசயம்!
நகரத்திற்கும் யாரும் வரவில்லை!
எங்கே போவது!
யாரைக்காண்பது!
எதைச் செய்வது!
என்று தெரியாத் திகைப்புகளில்!
அலைந்தன ஒவ்வொருவரின் படகுகளும்!
எங்கிருந்தோ வந்த மூங்கிலின் ஒலியைக்கூட!
யாராலும் இனங்காண முடியவில்லை!
ஒரு எறும்பையும் !
அதன் பாதைகளையும் கூட.!
எவரிடமும் பகைமையின் எந்தத் தடயமும்!
எஞ்சவில்லை!
கணவனோ மனைவியோ!
பிள்ளையோ!
அண்ணனோ தம்பியோ!
நண்பனோ அயலவனோ விருந்தாளியோ!
வேற்றாளோ காதலனோ!
அதிகாரியோ பணியாளோ!
யாரென்று தெரியவில்லை!
யாருக்கும்.!
எல்லாப் போதையும் தீர்ந்தது!
ஆளியைத்தவறி அழுத்திய விஞ்ஞானிக்கு ஜே!
மிஞ்சிய தொல்லெச்சங்களை !
எரித்து விடும் கருவியையும் இயக்கிவிடுக.!

பெரும் வரவாய் வந்துவிட்டுப் போ

அறிவுநிதி
உதிர்ந்தும்!
உலர்ந்தும் சர சரக்கும் இலையென!
நீ!
இல்லாத போதும்!
இருப்பதாகவே காட்டிக்கொள்கிறேன்!
வீட்டின் உட்பகுதியில்!
சூனியத்தின் தழுவல்கள் நிறைந்து!
ஆழ்ந்த நிசப்தத்தில்!
வன்முறை அழைகிறது!
இழுத்துவிடும் பெருமூச்சு!
மீட்டுகின்றன உனக்கான அழைப்பொலியை!
உன் இருக்கையில் அமர்ந்துகொள்கிறேன்!
பகிர்வுகள் பற்றி மௌனம்!
பேசிக்கொண்டே இருக்கிறது!
குழந்தையின் அழுகையைப்போல!
சாத்தியிருக்கும் சன்னலுக்கு வெளியே!
மழையும் வந்து செல்கின்றன!
என்னில் நிறைந்து!
கண்ணில் வடிகிறாய்!
ரகசியமாய் பூத்துக்கிடக்கிறேன்!
ஒரு பூவாக!
வாசல் திறந்தே கிடக்கிறது!
பெரும் வரவாய் வந்துவிட்டுப் போ

மனிதனாதல்

மாலியன்
நித்திரையின் முன் உள்ள சில மணித்துளிகள்!
நீண்டும் முதிர்ந்தும் !!
சிந்தனை லயம் தேடலுக்குமிடையில்!
மெல்லென முகிழும் என் மனக்கண் -!
நினைவுகளின் சிதைவுகளை!
அசைமீட்ட வண்ணம் !!
என்னை நானே நானாகப் பார்க்கையில்!
ஏனோ வாழ்வு கசந்தது !!
(எனக்குள்) முகங்களை சற்றே மாற்ற முயல்தலில்!
தோற்றே போக -!
சிறுகச் சிறுக விரியும் எனதுலகம் -!
சரி பிழை பார்த்து மீண்டும் மனிதனாய்!
என்னைச் சிற்பமிட முயல்தலில் கண்ணயர்தல் கூடும் !!
அதிரும் கடடிகாரம் - நிறுத்தி மெல்ல எழுகையில்!
ஏனோ மறந்தே போகும் மனிதனாதல்!
மீண்டும் ஓர் இரவிற்காய் . . . . . . .!
பங்குனி 7-2002!
கனடா

முறிக்கப்பட்ட என்புகளால் ஆனது உன் தாஜ்மகால்

சஹ்பி எச். இஸ்மாயில்
முறிக்கப்பட்ட என்புகளால் ஆனது உன் தாஜ்மகால் !
------------------------------------------------------------------------------------------!
இதயங்களை படுகொலை செய்து பலிதீர்பவள் நீ...!
தொடர் மழையாய் கொட்டும் துயருற்றவர்களின் கண்ணீரில் உல்லாச குளியல் எடுக்கிறாய் !
எலும்பு மச்சையை முகப் பூச்சாக பூசி!
உதட்டு சாயத்துக்காக இளம் சிவப்பு இரத்தம் கேட்பவள் நீ !
உன்னிடம் சரணகதியாகி ,சாஸ்டாங்கம் செய்யும் பாவிகலுக்கு!
தலை அசைத்து வந்தனம் கூறுகிறாய் !
முறிக்கப்பட்ட என்புகளால் ஆனது உன் தாஜ்மகால்.!
அங்கு பளிங்கு கற்களாக பளபளப்பது உன் பார்வையால் வசீகரிக்கபட்டு !
பிடுங்க பட்ட கண்களே.!
உன் கிரீடம் மிளிர வேண்டி உலகின் முழு பகலையும் சுவீகரித்தவள் நீ !
இரவுகளை நீட்டி !
உன் கூந்தல் அழகினை மெருகூற்றுகிறாய்.!
தொலைவாய் தொலைந்து போ என்றாலும்!
என் நிழலாய் தொடர்கிறாய்

குழந்தையின் சிரிப்பு.. பூவே

அரவிந்த் சந்திரா
01.!
குழந்தையின் சிரிப்பு!
-------------------------!
தாயின் அரவணைப்பின்!
கதகதப்பில்!
தூங்கும் குழந்தையின்!
இதழில் பிறக்கும்!
குளிர் மின்னல் !!
கனவில் தோன்றிய!
இறைவன் கொஞ்சிய!
தேவ ரஹசியம் !!
மொழியும் சொல்லும்!
இல்லாத!
மோஹன கவிதை !!
வைகறை வெளிச்சத்தின்!
விகசிப்பு !!
அழகின் முதலும், முடிவுமாய்!
தோன்றும்!
அற்புதம் !!
இன்னொரு முறைக்காக!
ஏங்கும் போது!
இழந்ததை எண்ணி!
விழிகளில் ஈரம் ! !
!
02.!
பூவே!
-------!
பறித்த பின்னும்!
புன்னகையோடு இருக்கும்!
ரசியத்தை!
எங்களுக்கும் சொல் !!
சொன்னால்!
பிழைத்துக் கொள்வோம்!
நாங்கள்